ஸ்ரீகாந்த், நமீதா ஜோடியாக நடித்த “இந்திர விழா” படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. ராஜேஸ்வர் இயக்கியுள்ளார்.
இப்படத்தை நமீதா நூதன முறையில் விளம்பரப்படுத்துகிறார். 20 லட்சம் ரசிகர்களுக்கு இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் “இந்திரவிழா” படத்தில் தனக்குரிய கேரக்டர், கதை விவரம், சக நடிகர்கள் என பல குறிப்புகளை இணைத்துள்ளார்.
அப்படத்தை பார்க்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவருக்கு 22 ஆயிரம் ரசிகர்கள் இ- மெயிலிலேயே வாழ்த்துக்களுடன் பதில் கடிதம் அனுப்பி உள்ளனர். தனக்கு வரும் கடிதங்களுக்கு உடனுக்குடன் பதிலும் அனுப்பி வருகிறார்.
இதுபற்றி நமீதா கூறுகையில், இ-மெயில் விளம்பரம் தயாரிப்பாளர் சஞ்சீவ்சர்மா சொன்ன யோசனை. அது வித்தியாசமாக இருந்தது. உடனடியாக தமிழ், ஆங்கிலம் கலந்து ரசிகர்களுக்கு இ-மெயில் கடிதங்கள் அனுப்பினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. நிறைய ரசிகர்கள் வாழ்த்து அனுப்புகிறார்கள். அவர்களுக்கு உடனுக்குடன் பதில் அனுப்பி வருகிறேன் என்றார்.
No comments:
Post a Comment