வடிவேலு ஒரு பக்கம் கருணாஸ் ஒரு பக்கமாகவும் ஹீரோவாக நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை உயர்ததிக் கொண்டுபோக தன் பங்குக்கும் தயாராகிவிட்டார் விவேக்.
விவேக் ஹீரோவாக அரிதாரம் பூசிய 'பஞ்சு' மற்றும் 'சொல்லி அடிப்பேன்' படங்கள் பாதியிலேயே நின்றுபோன நிலையில் மூன்றாவதாக நடித்துவரும் 'மகனே என் மருமகனே' படமாவது வரவேண்டும் என வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டி வருகிறாராம் முற்போக்கு சிந்தனை பேசும் விவேக்.
நான்காவதாக 'நான்தான் பாலா' என்ற படத்தில் கதாநாயகன் வேஷம் கட்டுகிறார் விவேக். ஸ்ரீலஷ்மி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை பிரபுதேவா-ரோஜா நடித்த 'ராசய்யா' படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்குகிறார். விவேக் தவிர புதுமுகம் ஜே.வி என்பவரும் கதாநாயகனாக நடிக்கிறார்.
வித்யாசாகர் இசையில் வாலி-வைரமுத்து பாடல்கள் எழுதும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறதாம். அக்ரஹாரத்து இளைஞனாக நடிக்கிறார் விவேக். நாயகி தேர்வு நடந்து வருகிறது. அக்ரஹாரவாசிக்கும், அக்கிராமவாசிக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான பிரச்சனைகள்தான் படத்தின் கதையாம்.
No comments:
Post a Comment