கொழும்பு: விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தந்ததாக கூறி பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை மற்றும் பார்வதி அம்மாள் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாம்.
தற்போது வவுனியா அகதிகள் முகாமில் தனித்து வைக்கப்பட்டுள்ளனர் வேலுப்பிள்ளையும், பார்வதி அம்மாளும். அவர்களை விரைவில் கொழும்புக்குக் கொண்டு செல்லவுள்ளனர்.
அங்கு கொண்டு செல்லப்பட்டதும் அவர்கள் மீது வழக்கு தொடரப்படவுள்ளதாம்.
இருவர் மீதும் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவில்லை. இருப்பினும் பிரபாகரனின் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி வழக்கு தொடரப்படும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment