Showing posts with label Cute Models. Show all posts
Showing posts with label Cute Models. Show all posts

Sunday, November 17, 2013

தனுஷை காதலிக்கப் போகும் காஜல்

காஜல் அகர்வால் தனுஷுடன் ஜோடி சேர்கிறார்!

காஜல் அகர்வால் தற்போது கோலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஜய், சூர்யா, கமல் என்று பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வருகிறார்.
விஜய் மற்றும் கார்த்தியுடன் அவர் இரண்டு முறை ஜோடி சேர்ந்துவிட்டார். இந்நிலையில் அடுத்ததாக அவர் தனுஷின் நாயகி ஆகிறார். தனுஷ் வேலையில்லா பட்டதாரி, அனேகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வேங்கை சாமி படத்தில் நடிக்கிறார்.
அதை முடித்த பிறகு தன்னை வைத்து படிக்காதவன், மாப்பிள்ளை ஆகிய படங்களை இயக்கிய சுராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். இந்த படத்தில் தான் தனுஷுக்கு காஜல் அகர்வால் ஜோடியாம்.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் மற்றும் காஜல் அகர்வால் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகின. அதன் அர்த்தம் தற்போது புரிந்துள்ளது. தனுஷும் காஜலும் முதன்முறையாக ஜோடியாக நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நிலநடுக்கத்தை பார்த்தும் அசராத ஜில்லா குழு!!!


ஜில்லா படக்குழு பாடல் காட்சியை படமாக்க ஜப்பான் சென்றபோது அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் வேலை செய்துள்ளனர்.
ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் நடித்து வரும் படம் ஜில்லா. இந்த படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியை படமாக்க விஜய், காஜல் உள்ளிட்ட படக்குழு ஜப்பான் சென்றது.
அந்த நேரம் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த ஆர்.பி. சௌத்ரி படக்குழுவினரை உடனே ஊர் திரும்புமாறு கூறினார். ஆனால் ஜப்பானில் குறிப்பிட்ட சீசனில் பாடல் காட்சியை படமாக்க வேண்டும் என்று நினைத்து சென்ற படக்குழு ஊர் திரும்ப மறுத்துவிட்டது.
இதையடுத்து தாங்கள் நினைத்தபடி பாடல் காட்சியை படமாக்கிவிட்டது தான் ஊர் திரும்பியுள்னர். படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, November 4, 2013

‘மேக்கப் ரூமில்’ நடிகையை மிரட்டி கற்பழித்த புரொடக்‌ஷன் மேனேஜர் மும்பையில் கைது!


மும்பை போனவப் பகுதியில் உள்ள காதர்சிங் ஸ்டூடியோவில் கடந்த மாதம் தொலைக்காட்சி தொடர் ஒன்றுக்கான படப்பிடிப்பு நடந்தது. அதில் பங்கேற்ற 28 வயது நடிகை ஒருவர் தன்னை தொடர் தயாரிப்பு நிர்வாகிகளில் ஒருவர் மிரட்டி கற்பழித்துவிட்டதாக போனவ போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
புகார் மனுவில் அந்த நடிகை கூறி இருப்பதாவது:-
கடந்த மாதம் 2-ந்தேதி அந்த தயாரிப்பு நிர்வாகி அதிகாலை 6.30 மணிக்கு போன் செய்தார். 7.45 மணிக்கு ஷூட்டிங் உள்ளது என்றார். உடனே நான் புறப்பட்டு சென்றேன். 2-ம் நம்பர் மேக்கப் அறைக்குள் சென்று நான் உடை மாற்றி கொண்டிருந்தேன். அப்போது அந்த அறைக்குள் நுழைந்த தயாரிப்பு நிர்வாகி என்னை சிறிய அறைக்குள் அடைத்து மிரட்டி கற்பழித்தார்.
இதை வெளியில் சொன்னால் என் மகளை கொன்று விடுவதாக மிரட்டினார். அவரது மிரட்டல் நீடித்ததால் இப்போது புகார் செய்கிறேன். இவ்வாறு அந்த நடிகை கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த தயாரிப்பு நிர்வாகியை காவல்துறை சீனியர் இன்ஸ்பெக்டர் போஜிராவ் போஸ்லே கைது செய்தார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 342, 376, 506 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே தன் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டை அந்த தயாரிப்பு நிர்வாகி மறுத்துள்ளார். விளம்பரத்துக்காக அந்த நடிகை பொய் சொல்வதாக கூறியுள்ளார்.

இந்திய சாமியார் மீது அமெரிக்க பெண் செக்ஸ் புகார்!



லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் வசித்து வரும் பிரபலமான இந்திய சாமியார் விக்ரம் செளத்ரி மீது 29 வயதான அமெரிக்க பெண் பரபரப்பு செக்ஸ் புகார்களைக் கூறியுள்ளார்.
இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று செட்டிலானவர் விக்ரம் சௌத்ரி. வயது 67. விக்ரம் செளத்ரி 1973ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சனின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றார். நிக்ஸனுக்கு இருந்த உடல் உபாதை ஒன்றை அவர் தனது யோகா மூலம் சரி செய்தார். இதைத் தொடர்ந்து அங்கேயே ஆசிரமம் அமைத்து செட்டிலானார்.
பாப் பாடகி மடோனா, பிப்பா மிடில்டன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இவரது வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யோகா குரு என்றே இவர் அழைக்கப்படுகிறார். விக்ரம் யோகா ஸ்டடீஸ் என்ற மையத்தையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில்தான் அமெரிக்க பெண்ணா சாரா பகான் என்பவர் விக்ரம் சௌத்ரி மீது அடுக்கடுக்கான செக்ஸ் புகார்களைக் கூறியுள்ளார்.
தன்னை கண்ட இடங்களில் சாமியார்தொட்டார். காதுக்கு நெருக்கமாக வந்து செக்ஸியான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். தொடர்ந்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். எனது யோகா வாழ்க்கையை கெடுத்தார் என்று சாரா குற்றம் சாட்டியுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் விக்ரம் மீது சாரா வழக்கு தொடர்ந்துள்ளார்.
சாராவின் இந்த குற்றச்சாட்டால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Short story in English

IN THE cut-throat world of Hollywood fitness gurus, he has long been the hottest property. Wearing nothing but the skimpiest of swimming trunks and a microphone, Bikram Choudhury won a legion of celebrity acolytes with his brand of ‘'hot yoga’', which sees devotees exercise in temperatures up to 40C.

Saturday, October 19, 2013

RJ பாலாஜியின் 120 ரூபாய் விமர்சனமும் எழவு வீட்டு ஒப்பாரியும்!



T.R -க்கு பிறகு ஆங்கில வார்த்தைகளை கோர்வையாக, மூச்சு விடாமல், சொற்களில் வழுக்கி கொண்டு வரும் சில chinese வார்த்தைகளையும் சேர்த்து பேசி புகழ் பெற்ற Rj பாலாஜி-க்கு வணக்கம்.
உங்கள் 120 ருபாய் விமர்சனத்தை கேட்டு கடுப்பான கூட்டத்தில் நானும் ஒருவன். எனக்கு சில விஷயங்கள் புரியவில்லை. ஏன் நீங்கள் ஒரு படத்தை கண்டமேனிக்கு விமர்சனம் செய்யும் பொழுது ஒரு sarcastic point of view-வுடன் செய்கிறார்கள்? நீங்கள் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள் என்று கேட்க தான் தோன்றுகிறது. சரி.. அத விடுங்க.. ஒரு படத்தை பத்தி பேஸ்புக்கில் ஸ்ட்டஸ் போடும் முக்கால்வாசி நபர்கள் ரொம்ப ஈசி-யா ஒரு விமர்சகர் ஆகிடு ராங்க. பேஸ்புக்கில் ஸ்ட்டஸ் போடறவன் என்ன வேணாலும் போட்டுட்டு போறான்.
அத நீங்க சப்பகட்டாலான் சொல்லாதீங்க. ஸ்ட்டஸ் போட்டா அத அதிக பட்சமா பத்து பேர் பாப்பாங்க.. நீங்கள் ஒரு மீடியா-வில், ஒரு கோடி மக்கள், உங்கள் நிகழ்ச்சியை ரசித்து கேட்கிறார்கள் என்ற target audience-இடம் பேசுகிறார்கள். அவர்கள் உங்களின் நேயர்கள். நல்ல விஷயம். இருந்திட்டு போட்டும். அப்படி ஒரு பெரிய ரீச் இருக்குன்றது உங்களுக்கு தெரியும் போது ஒரு படத்த ஏன் நேர்மையா கொண்டு போய் சேர்க்க மாட்றீங்க. “மூடர் கூடம்” படத்துல வர நாய் ப்ளாஷ்பேக், 17-ஆவது ப்ளாஷ்பேக் ah?? ஏன் இப்படியாபட்ட ஒரு exaggeration? என் பக்கத்தில் படம் பார்க்காத நண்பன் கேட்டான் நெஜமாவே அது 17-வது ப்ளாஷ்பேக் ah? இது தான் நீங்கள் create பண்ணும் impact. ஒரு படத்த எந்த அளவுக்கு தப்பா address பண்றீங்கன்னு தெரிஞ்சிகோங்க..
“கோனார் உரை” போட்டா உங்களுக்கு என்ன வந்துச்சு? உங்க android app launch-ல நடிகர் தனுஷ் உங்கள பத்தி சொன்ன உடனே, மைக் உங்க கைல கெடச்சதும் உங்க நியாயத்த சொல்லி தனுஷ் சொன்னத defend பண்ணீங்கள.. அத ஒரு டைரக்டர் பண்றான். உங்களுக்கு அதனால என்ன பிரச்சன வந்துச்சு..? ஒரு கதையில் பல தகவல்கள் நேரடியாக சொல்லபடுகிறது.. சிலது நேரடியாக சொல்லாமல் யூகிக்க வைக்க படுகின்றன. அப்படியா பட்ட யூகங்களுக்கு ஒரு தெளிவுரை சொன்னால் உங்களுக்கு என்ன பிரெச்சனை? ஒரு படத்துல சில விஷயங்கள வைக்க ஒரு நோக்கம் இருக்கும். சிலதுக்கு நோக்கம் இருக்காது. எல்லாத்தையும் நோண்டி நொங்கு எடுத்து அதை பிரித்து மேய்ந்து உங்கள் ஷோவின் சுவாரசியத்தை கூட்டுகிறீர்கள். சரி.. நான் கேட்குறேன்..
“கல்யாண சமையல் சாதம்” படத்தோட trailerல நீங்க ஏன் பேசிருக்கீங்க? ‘கதைக்கும் என் narrationகும் சம்மந்தம் இல்ல’ன்னு துச்சமென தூக்கி போட்டு போக வேண்டியது தான?? வியாபார நோக்கத்துடன் முன் வைத்த ஒரு பதிவு தான அது. அது என்ன உங்களுக்கு மட்டும் ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாயம். கத்தியால ஒருத்தன குத்தி கொன்னுட்ட பிறகு அப்புறம் என்ன மயித்துக்கு Take it easy. மயிரு கேட்ட வார்த்தை இல்லை. “கடல்” படத்த தொறந்த வீட்ல நாய் நொழஞ்ச மாதிரி கலாய்கிறீங்க? “skyfall” உனக்கு என்னயா பாவம் பண்ணுச்சு??
மாஸ் மீடியாவில், மக்கள் ரசனையை மட்டும் வேராக நம்பி ஒரு அங்கீகாரம் தேடி கொண்டு அலையும் நாகரீக கோமாளிகள் நாங்கள். அதே மாஸ் மீடியாவில் இருந்து கொண்டு எழவு வீட்ல ஒப்பாரி வெக்கிற மாதிரி ஒரு படத்துக்கு இருக்கிற சட்டைய நார் நாரா கிழிச்சி உங்கள் sarcastic point of view-ன் துணை கொண்டு buffoon வேஷம் போட்டு விட்டு அழகு பார்த்து ரசித்து கிண்டல் செய்கிறீர்கள். நீங்கள் ஒரு படத்துக்கு Common audience- ன் point of view சொல்வதாக கேள்விபட்டேன். நீங்கள் யார் common audience போல பேசுவதற்கு? அதெல்லான் இருக்கட்டும்.. யார் அந்த common audience?? Audience-ல் இருக்கும் ஒவ்வொருதரும் ஒரு தனி ரசனை கொண்ட individuals. இப்படி தனி தனியாக பிரிக்கப்படும் தனிநபர்களின் கருத்துகளை எப்படி ஒன்று சேர்க்க முடியும். அவர்களுக்கு ஒரு Tag கொடுக்க முடியாது. சரி.. அப்படியே வெச்சிப்போம். நீங்கள் கொடுத்து படம் பார்க்கும் 120 ரூபாயும் நாங்கள் செலவு செய்து படம் பார்க்கும் 120 ரூபாயும் ஒன்றாகி விடுமா என்ன??
நீங்கள் 120 ருபாய் கொடுத்து படம் பார்த்து அதை பகிரங்கமாக கலாய்த்து உங்கள் சம்பளமாக மாற்றி கொள்கிறீர்கள். நாங்கள் செலவு செய்வது எங்களுக்கு வெறும் செலவு. உங்கள் show-ன் டைட்டிலே ஒரு உச்சகட்ட அபத்தம். நீங்கள் பேசும் அந்த சில நிமிடங்களை சுவாரசிய மாக்கி கொள்ள, படங்கள் தான் உங்களுக்கு கிடைத்ததா? உங்களுக்கு பிடிச்சிருக்கு பிடிக்கலன்னு பகிர்ந்துகுறீங்க.. அத ஏன் மாஸ் மீடியால பண்றீங்க? உங்கள் நண்பர்கள் வட்டத்துலையே பண்ணலாமே. இங்கே ஒரு critic ஆக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
இங்கு யாரும் ஒரு critic ஆக விமர்சனம் எழுதுவதில்லை என்பது என் கருத்து .. இன்னும் opinion spillers ஆக தான் இருகிறார்கள். நான் கவனித்ததை வைத்து சரியாக சொல்ல வேண்டுமானால் strong opinion spillers மற்றும் weak opinion spillers ஆக இருகிறார்கள். ஒரு படத்தை யாரும் சரியாக பார்ப்பதில்லை. ஒரு படத்தின் விமர்சனம் அந்த படத்தின் quantitative analysis, qualitative analysis, genre and sub-genre description, subjective point of view, objective point of view, plot analysis, budget grade(low or high budget), மற்றும் அந்த படம் target செய்யும் audience(adult(A) or universal(U)(U/A) or anything specific) அவர்களிடம் சரியாக சென்று அடைய உதவ வேண்டும்.
இந்த பிரிவுகளின் அடிபடையில் படத்தில் இருக்கும் நெளிவு சுளிவுகளை நேர்மையாக சொல்ல வேண்டும். யாரும் இதை பண்ணுவதே இல்லை. நீங்களும் தான். எங்கள் வயித்தில் அடித்து விட்டு உங்கள் வயிறுக்கு எங்களை தீணி ஆக்குவது என்ன நியாயம்? பெண்களை தாருமாராக cross talk-ல் கலாய்த்து விட்டு Being humanல் சமத்து பாப்பா போல ஏன் பேச வேண்டும்? இதுக்கு நடுவுல வெறுப்பேத்தர மாதிரி “சிசிபுஜிகி”(ஸ்பெல்லிங் mistake இருந்தால் மன்னிக்கவும்), “அட” மற்றும் nursery rhymesல் கடைசியாக முடியும் rhyming வார்த்தைகளை சுட்டு, ஒரு படத்தை கலாய்க்க ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி, நாகரீக முன்னேற்றத்தால் ஆரம்பத்தில் ஒரு ‘sorry’ இறுதியில் ஒரு டன் டொன் டன் என்று அற்புதமான இசை சொற்களாலும் அருமையாக programய் ஆரம்பித்து முடிக்கிறீர்கள். ஒரு படத்தை audience இடம் சரியாக சேர்க்கும் பட்சத்தில் அது positive review or negative review எதுவாக இருந்தாலும் சரி.. அதை ஒப்பு கொள்கிறோம். இல்ல இப்படி தான் நான் பண்ணுவேன்னு சொன்னா நான் அதை பகிரங்கமாக கண்டிக்கிறேன். இதை தெரிய படுத்திகொள்ள தான் இந்த முதல் post..

Post Script: I’m fundamentally, basically, sorry.. Yours faithfully.. Ada!!

Tuesday, October 1, 2013

‘படு கவர்ச்சி’யாக நடித்திருப்பதால் பட ரிலீஸை எதிர்க்கிறார்… ஹன்ஷிகா மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு


ரு பாடல் காட்சியில் படு கவர்ச்சியாக நடித்திருப்பதால் படத்தை தமிழில் ரிலீஸ் செய்ய எதிர்க்கிறார் என்று ஹன்ஷிகா மோத்வானி மீது குற்றம் சாட்டியிருக்கிறார் படத் தயாரிப்பாளர் எஸ்.சுந்தரலட்சுமி.
சிவம் அசோசியேட்ஸ் சார்பில் எஸ்.சுந்தரலட்சுமி தயாரித்து கொண்டிருக்கும் “ரவுடி கோட்டை”படத்தை தமிழில் திரையிட அனுமதிக்க கூடாது என்று ஹன்சிகா மோத்வானி நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார் என்று ஒரு நாளிதழ் செய்தி வெளிட்டுள்ளது. அதுபற்றி தயாரிப்பாளர் எஸ்.சுந்தரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :
தெலுங்கில் வெளியான “சீதாராமகல்யாணம் லங்கலோ” என்ற படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்ய அதன் தயாரிப்பாளர் வெல்கார் எண்டர்பிரைசஸ்,விஜய்மல்லா பிரசாத் என்பவரிடமிருந்து வாங்கினேன் படத்தின் மொழிமாற்றம் மற்றும் அனைத்து வேலைகளையும் முடித்து “ரவுடி கோட்டை” என்ற பெயரில் திரையிட முடிவான நேரத்தில் இது மாதிரி ஒரு புகார் குறித்து அதிர்ச்சி அடைந்தேன்.
நடிகை ஹன்சிகாவுக்கும் தெலுங்கு பட அதிபருக்கும் இடையே எந்த மாதிரியான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் அந்த தயாரிப்பாளரிடம் கேட்டோம்.
அதற்கு அவர் ஹன்சிகா சொல்லவது மாதிரி தெலுங்கை தவிர வேறு எந்த மொழியிலும் மொழிமாற்றம் செய்ய கூடாது என்று ஒப்பந்தம் எங்களுக்குள் எதுவும் இல்லை. வாய்மொழியாகக் கூட அவர் கேட்கவும் இல்லை. நாங்களும் வாய்மொழியாக கூட ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறினார்.
அப்படி ஹன்சிகா தடை கேட்டோ, வழக்கு தொடர்வதாகவோ இருந்தால் தெலுங்கு பட அதிபர் மீது தான் தொடர வேண்டும். எங்கள் மீது அவர் எடுக்கும் எந்த நடவடிக்கையும் எங்களை கட்டுப்படுத்தாது. இதை ஹன்சிகாவுக்கும் அவர் சம்மந்த பட்டவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம்.
மேற்படி ஹன்சிகா நடிகர் சங்கத்தில் எங்கள் மீது எடுத்த நடவடிக்கையை விலக்கி கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஹன்சிகா மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க நேரிடும்.
ஏற்பட்டுள்ள நஷ்டத்தையும் ஹன்சிகா தான் ஏற்க வேண்டும் என்றார் எஸ். சுந்தரலட்சுமி.
இதுபற்றி இந்த படத்தின் தமிழாக்கம் பொறுப்பேற்று இருக்கும் எ.ஆர்.கே.ராஜராஜா கூறியதாவது :
“ரவுடி கோட்டை” படத்தில் ஹன்சிகா “இச் இச் இச் ”என்ற ஒரு பாடல் கட்சியில் படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார். அதனால் பயந்து போய் ஹன்சிகா தடை கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன் என்றார்.
ஒருவேளை சிம்புவுக்கு பயந்திருப்பாரோ என்னவோ..?

கட்டப்பஞ்சாயத்தால் கணவன் மனைவியை பிரித்த கும்பல்!



கணவன் மனைவிக்குள்ள பிரச்னைனா சற்று இடைவெளி வருவது இயல்பு. தவிர்க்க முயாதது சில நாட்களில் அவர்களாக நடப்பதுதான். ஆனால் கணவன் மனைவிக்குள் உண்டாகும் இடைவெளியை பேச்சு வார்த்தையின் மூலம் சமன்செய்து அவர்களை ஒன்றாக்குகிறோம் என்ற சொல்லும் ஊர் முக்கியஸ்தர்களால், தேவையில்லாமல் பிரச்னைகள் அதிகமாகி கடைசி வரைக்குமே கணவன் மனைவியும் ஒன்று சேராமல் போய் விடுவதும் நடக்க ஆரம்பித்துள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரி பெருமாத்தூரைச் சேர்ந்த சம்சுதீன் மகன் கம்ருதீனுக்கும், விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் விளக்கூரைச் சேர்ந்த சையத் அமீர் மகள் நஜிமாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எந்தக் குறையுமில்லாமல் நஜிமா பெருமாத்தூரில் கணவர் கம்ருதீனுடன் வாழ்ந்து வந்தார். நன்றாக போய்க் கொண்டிருந்த அவர்களின் குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராமல் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. உடனே நஜிமா விளக்கூரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். நான்கைந்து மாதமாக தந்தையுடனே வசித்து வந்தார்.

கல்யாணமான இளஞ்சோடிகள் பிரிந்திருக்கக் கூடாது என்பதற்காக மாப்பிள்ளை வீட்டிலிருந்து 11 பேர் கொண்ட குழு கல்யாணத்தை ஏற்பாடு செய்த விளக்கூர் அகமது பாஷாவிடம் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்த சென்றார்கள். புவனகிரியிலிருந்து சென்ற 11 பேர் குழுவுக்கு விளக்கூர் அகமது பாஷாவுக்கும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது இரு தரப்புக்கும் இடையில் எதிர்பாராமல் தள்ளு முள்ளு ஏற்பட புவனகிரியைச் சேர்ந்த 11 பேர் கொண்ட கும்பல் உடனடியாக ரவடிக் கும்பலாக மாறி பெண் வீட்டாரை தாக்க ஆரம்பித்தாகவும் சொல்லப்படுகிறது. இதில் புவனகிரி சம்சுதீன் தரப்பு பெண் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்த முயன்றிருக்கிறது.
இதை எதிர்த்த பெண்ணின் தகப்பனார் உட்பட பலரையும் சரமாறியாக தாக்கி பெருத்த சேதத்தை உண்டாக்கினார்களாம். இது தொடர்பாக உடனடியாக பெண்ணின் தரப்பினர் காவல்துறையில் புகார் அளிக்க, காவல்துறையினர் புவனகிரியைச் சேர்ந்த சம்சுதீன் கும்பலைச் சேர்ந்த 11 பேரை கைது செய்தனர். சில நாட்களிலேயே கைது செய்யப்பட்ட 11 பேரும் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இவர்கள் எப்படியாவது பெண் வீட்டாரை பழிவாங்கியே தீர வேண்டும் என்று அலைகிறார்கள் என்று அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்கிறார்கள் என்றார்  ஒருவர். அடப்பாவிகளே! கணவன் மனைவியை சேர்த்து வைக்க போய்விட்டு, அநியாயமாய் பிரித்து வைத்து விட்டார்களே என்று பெண்ணும் மாப்பிள்ளையும் புலம்பிக் கொண்டுள்ளார்களாம்.

Monday, September 23, 2013

தயாரிப்பாளரை கண்ணீர் சிந்தவைத்த வேந்தர் மூவிஸ்!



தமிழ் சினிமாவில் நுழைந்ததுமே பெரிய படங்களை தன் கைவசப்படுத்திய வேந்தர் மூவிஸ் அந்த படங்களை வெளியிட்ட கையோடு சுட்டகதை, நளனும் நந்தினியும், ஈகோ உள்பட சில பட்ஜெட் படங்களையும் வாங்கினார்கள். இவர்கள் பெரிய படங்களை ரிலீஸ் செய்வதில் காட்டிய ஆர்வத்தை சின்ன படங்களை ரிலீஸ் செய்வதில் காட்டாததால் சின்ன படங்களை ரிலீஸ் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இவர்களிடம் சுட்டகதை, நளனும் நந்தினியும் ஆகிய இருபடங்களையும் ரிலீஸ் செய்ய கொடுத்த தயாரிப்பாளர் ரவீந்தர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து கடைசியில் அவர்களிடம் ‘இப்படியே ரிலீஸ் பண்ணாம இருக்கீங்களே… எப்போதான் ரிலீஸ் பண்ணுவீங்க…?’ என்று கேட்க ‘உங்களுக்கு அவசரம்னா நீங்களே ரிலீஸ் பண்ணிக்குங்க…’ என்று சொல்லியிருககிறார்கள்.
 வேறு வழியில்லாமல் படத்தை திரும்ப வாங்கியிருக்கிறார் ரவீந்தர். இப்போது இவர் தனது சொந்த முயற்சியில் படத்தை வெளியிட இருக்கிறாராம். வேந்தர் மூவிஸ் கைகளிலேயே இந்த படம் சில மாதங்கள் இருந்துவிட்டது. ஒருவேளை அவர்களிடம் கொடுக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் படத்தை ரிலீஸ் செய்திருக்க முடியும்… என்று நினைத்து பீல் பண்ணுகிறாராம் ரவீந்தர்.

Sunday, September 22, 2013

உறவுக்கு தயாராகாத பருவத்தினர் என்ன செய்வர்கள்..!!





உண்மையில் கூடிய நேரத்தை விரக்தியிலும் எட்டாக் கற்பனையிலும் செலவிடுகின்றனர். இது தீமையானது அல்ல. ஏனெனில் பாலியல் உறவு பற்றி அநேக கற்பனை எண்ணங்கள் தோன்றுகின்றன.
இதனைப் பற்றி அநேக புத்தகங்கள் பலவற்றைத் தருகின்றன. பெண்கள் அநேக ஆபாசப் புத்தகங்களைப் படிக்கின்றார்கள். பருவமானவர்கள் செய்கின்ற மற்ற நடவடிக்கை தாமாகவே விந்துவை வெளியேற்றிக் கொள்வதாகும். இதனால் பாலியல் வெறி ஓரளவுக்குத் தணிகிறது.
தாமாகவே விந்துவை வெளியேற்றிக் கொள்வதால் உள்ள சில நன்மைகள்.

- வேறு ஒருவரும் தேவைப்படாது. எல்லாம் நீங்களே!
- யாருமே கருப்பம் தரிக்கமாட்டார்கள்.
- யாருக்கும் எந்த நோயும் தொற்றிக்கொள்ளாது.
- உங்கள் உடலைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்து தேவையைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்பா!




பூனையில் சைவம் கிடையாது, ஆண்களில் ராமன் கிடையாது என்று நம் ஊர் கவிஞர் ஒருவர் எழுதியிருந்தார். இது எல்லா நாட்டு ஆண்களுக்கும் பொருந்தும். உலகம் முழுவதும் 2.7 மில்லியன் ஆண்கள் தங்களின் மனைவியை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்று அதிர்ச்சித்தகவலை தெரிவிக்கிறார் க்ரே நியூமென் என்ற எழுத்தாளர்.
மனித மனதில் எண்ணற்ற ஆசைகள் குடியேறி ஆட்டிப்படைக்கின்றன. பணம், பொருள் மட்டுமல்ல பாலியல் உணர்வுகளும் தூண்டிவிடப்பட்டு ஆண்களையும், பெண்களையும் ஆட்டிப்படைக்கிறது. இதனால் மரபு மீறிய செயல்களும், இலக்கணப்பிழைகளும் ஆங்காங்கே நேர்கிறது.

எது கிடைத்தாலும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்தால் நல்லாருக்குமே என்ற மனதின் அடித்தள ஆசைதான் இதற்கெல்லாம் காரணம். இது செக்ஸுக்கும் பொருந்தும்.
என்னதான் தேவதை மாதிரி மனைவி இருந்தாலும், பிசாசு மாதிரி ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் வேண்டும் என்பது ஆண்களின் ஆசையாக இருக்கிறது. இது உண்மைதான் என்கிறார் இங்கிலாந்தின் பிரபல நாவலாசிரியரும், திரைக்கதை எழுத்தாளருமான வில்லியம் நிக்கல்சன். எவ்வளவு அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், ஆண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க மாட்டார்களாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண்களைப் பொறுத்தவரை போதும் என்ற மனமே இல்லை. ஆண்களின் ஆசையும், செக்ஸ் ஆசையும் முற்றுப்புள்ளி இல்லாத தொடர் கதையாகவே உள்ளது. எவ்வளவு செக்ஸ் கிடைத்தாலும் அதை அனுபவிக்கவே அவர்கள் முயலுகிறார்கள். போதும் என்று நிறுத்திக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. வேடிக்கைக்காகவும், ஆசைக்காகவும்தான் இந்த கள்ள உறவுகளை அவர்கள் நாடுகிறார்கள்.
செக்ஸ் விஷயத்தில் என்னதான் அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தால், பின்விளைவுகள் இருக்காது என்று உறுதியாகத் தெரிந்தால் இன்னொரு பெண்ணுடன் உறவு வைக்க அவர்கள் தயங்க மாட்டார்கள்.
ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உணர்வு என்பது புற நிகழ்வுகளாகவே உள்ளதாக செக்ஸாலஜிஸ்டுகள் கூறுகிறார்கள். உணர்வுப்பூர்வமான செக்ஸ் உணர்வு அவர்களுக்கு வருவதில்லை. வெளி நிகழ்வுகளின் தூண்டுதலால் செக்ஸ் உணர்வை அவர்கள் அடைகிறார்கள். அந்த உணர்வை உடனடியாக வெளிப்படுத்தி விடவும் துடிக்கிறார்கள். இந்த போலியான உணர்வுகளுக்கு அவர்கள் காதல் என்றும் பெயர் வைக்கத் தயங்குவதில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அந்தப் பெண்ணே சம்மதித்தாள், அதனால்தான் உறவு வைத்துக் கொண்டேன் என்று கூறும் ஆண்களே அதிகம். அதாவது பழியை பெண்கள் பக்கம் நைசாக திருப்பி விட்டு விடுகிறார்கள்.
இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். குறிப்பாக மனைவிகள். தங்களது கணவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், பிறன் மனை நோக்காதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஆண்களின் புத்தியை பெண்கள் அத்தனை சீக்கிரம் புரிந்து கொள்வதில்லை.
இது குறித்து எழுதியுள்ள எழுத்தாளர் நிக்கல்சன், நானும் ஒரு சராசரி ஆண்தான். எனது மனமும் அதுபோன்ற எண்ணங்களில் அலை பாய்ந்ததுண்டு. எனக்கும் வாய்ப்பு கிடைத்தால் நானும் அந்தத் தவறைச் செய்வேன்தான்-பின்விளைவுகள் இல்லாவிட்டால். ஆனால் நான் தவறு செய்தால் அதற்கான பின்விளைவுகள் உடனே என்னைத் தேடி வந்து விடும். எனவேதான் இதுவரை நான் அந்தத் தவறைச் செய்யவில்லை. செய்யும் வாய்ப்பும் இல்லை என்றே கருதுகிறேன் என்கிறார் நிக்கல்சன்.
நிக்கல்சன் தொடர்ந்து கூறுகையில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் செக்ஸ் விஷயத்தில் நிறைய வேற்றுமை இருக்கிறது பெண்களின் நம்பிக்கையை குழி தோண்டிப் புதைப்பதைத்தான் ஆண்கள் முதலில் செய்கிறார்கள். யாருடனும் நாம் உறவு கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். அதை உரிமையாகாவும் கருதிக் கொள்கிறார்கள்.
ஆனால் பெண்கள் நம்பிக்கை அடிப்படையிலும், நீண்ட கால உறவின் அடிப்படையிலும்தான் பிறரிடம் தங்களை உடல் ரீதியாக ஒப்படைக்க முன்வருவார்கள். இவனை நாம் நம்பலாம், இவனிடம் நம்மைக் கொடுத்தால் நலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் ஒரு ஆணிடம் தங்களைக் கொடுக்க முன்வருகிறார்கள் என்கிறார் எழுத்தாளர்.
எது எப்படி இருந்தாலும், செக்ஸ் என்பது உடல் வேட்கைக்காக மட்டுமல்ல, அதில் சற்று உண்மையான உணர்வும் இருக்க வேண்டும் என்பதை இரு பாலினரும், குறிப்பாக ஆண்கள் புரிந்து கொள்வதுதான் நல்லது என்கிறார் எழுத்தாளர் நிக்கல்சன்.
இதற்கான எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்ல வரவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமைந்தால் யார் வேண்டுமானாலும் தவறு செய்வார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க… இல்லேன்னா…




தாத்தா பாட்டி காலத்தில் 15 வயதில் திருமணம் செய்வது சதாரணமான விசயம். அதே நம் அப்பா அம்மா காலத்தில் 21 வயதானாலே பெண் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இன்றைக்கு நன்றாக படித்து கைநிறைய சம்பாதித்தாலும் சரியான பருவத்தில் திருமணம் செய்யாமல் 30 வயதுவரை தள்ளிப்போடுகின்றனர். இது உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நிபுணர்களின் கருத்து.
பருவம் பார்த்து விதை விதைக்க வேண்டும் அப்பொழுதுதான் சரியாக முளைக்கும் என்பது விவசாயத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும்தான் பொருந்தும் என்பது நிபுணர்களின் அறிவுரை. சரியான பருவத்தில் திருமணம் செய்வதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
இன்றைய இளைய தலைமுறை கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். நல்ல படிப்பு, அதற்கேற்ற வேலை, கைநிறைய சம்பளம் என்று ஒரு லட்சியத்தை மனதில் பதித்துக்கொண்டு அதை சாதித்தும் விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் படிப்புக்கேற்ற வேலை கிடைத்ததும் அதற்கு மேலும் தள்ளிப்போடாமல் தாமதமின்றி திருமணம் செய்து கொள்வது அவசியம். இன்றைய காலத்தில் 15 வயதிற்குள் பால்ய விவாகம் செய்வது சாத்தியமில்லை. ஆனால் இளம் பருவத்தில் அதாவது 21 வயதில் இருந்து 25 வயதிற்குள் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்திற்கு மாற முயற்சிக்கலாம்.

இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் பெற்றோர் நல்ல ஆரோக்கிய மாக இருப்பார்கள். அதனால் பிறக்கப்போகும் தங்கள் பேரன், பேத்திகளை அவர்கள் தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். இதனால் தலையாய பிரச்சினையான குழந்தை வளர்ப்பது கூட தம்பதிகளுக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது.
18 முதல் 25 வயதில் திருமணம் செய்து கொண்ட 8ஆயிரம் இளம் தம்பதியரிடம் மேற்கொண்ட ஆய்வில் குடும்பத்தில் பெற்றோர் – குழந்தைகளிடையேயான உறவுமுறையில் அதிக அளவில் ஒரு ஒட்டுதல் இருந்தது. தலைமுறை இடைவெளிகள் அதிக்கம் இல்லை. இளம் வயது தம்பதியருக்குப் பிறந்த குழந்தைகள் அதிக புத்திசாலிகளாக இருந்தனர். திருமணம் காரணமாக அவர்களின் நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருந்தது. இந்த வயதினருக்கு ஏற்படும் மன அழுத்தம் தடுக்கப்பட்டது.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் 15 வயதிற்குள்ளாகவே, இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைத்து விடுகிறோம். ஹார்மோன்களின் மாற்றத்தினால் உடல் தேவைகள் தொடங்கிவிடும். ஆனால் வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 30, 35 வயதுவரை உடல் தேவையை பூர்த்தி செய்யாமல் இயற்கைக்கு எதிராக வாழ முற்படுவதனால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.
தாமதமான திருமணம் உடல் ரீதியாக வும், உளவியல் ரீதியாகவும் கூட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கருத்தரிக்க தாமதம். அப்படியே கருத்தரித்தாலும் சுகப்பிரசவம் கேள்விக்குறி என்ற நிலை. காலதாமதமாக திருமணமானவர்களுக்கே அதிகமாக சிசேரியன் பிரசவம் நடக்கிறது.
பாட்டி காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்தவர்கள் அறுவைச் சிகிச்சையை அறிந்த தில்லை. அவர்கள் ஆரோக்கியமான வயதில் திருமணம் செய்து கர்ப்பமடைந்தனர். எளிதாக குழந்தை பெற்றுக் கொண்டனர். அதிகமாக சுகப்பிரசவங்களே நடந்தன. படிப்பு, வேலை, சொந்த காலில் நின்ற பிறகே இல்லறம் என்றெல்லாம் கூறி திருமணத்தை தாமதமாக செய்து கொள்கிறார்கள். இதனால் வயது முதிர்வடையும்போது உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்கிறது. இடுப்பெலும்பு வளைந்து கொடுக்கும் வயதைத்தாண்டி திருமணம் செய்துகொள்ளும்போது அநேக பெண்களுக்கு `சிசேரியன்` அவசியமாகி விடுகிறது.
ஆண்கள், தாமதமாக திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால் தவறான பழக்கம் உடையவர்களாகிறார்கள். இயற்கை இச்சைகளை தீர்ப்பதற்காக செக்ஸ் புத்தகம், பலான படங்கள், சுய இன்பம், இணைய தள தேடல் என மாற்று வழிகளில் இன்றைய இளைஞர்கள் பயணப்படும் பின்னணியில், தள்ளிப்போடப்படும் அவர்கள் திருமணம் இருக்கிறது.
இதனால் தற்காலிக உணர்வுத் தேவைகளை முறைகேடாக அணுகப்போய், அதனால் எயிட்ஸ் அதிகரிப்பு, கள்ளக்காதல் போன்ற கலாசார சீரழிவும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அதனால் திருமண சமயத்தில் வீரியம் குறைந்து தந்தையாகும் தகுதியை பலர் இழக்கின்றனர்.
ஆகவே இன்றைய பெற்றோர்களே நீங்கள் தாமதமாக திருமணம் செய்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை உங்களின் குழந்தைகளுக்காவது காலா காலத்தில் திருமணத்தை முடித்து வைத்து சீக்கிரம் பேரன் பேத்தியை பார்த்து செட்டில் ஆகும் வழியைப் பாருங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

காதலிக்கும் போது காதலியுடன் உறவு வைத்துக்கொள்வது நல்லதா?



முதலில் காதல் வயது வந்தாலே காமமும் சேர்ந்து வந்துவிடும் ஆகையால் காதலிப்பது குற்றம் இல்லை காதல் இல்லாமல் மனிதர்களும் இல்லை, காதல் வந்தால் சொல்லி அனுப்பு… இது கவிஞர் ஒருவர் பாடிய பாட்டு.
காதல் வரும் என்று காத்திருப்பவர்களுக்கு இந்தப் பாட்டு ஓ.கேதான். அதாவது காதல் வரும்போது சொல்லி அனுப்புத்தா, அதுவரை காத்திருக்கேன் என்று மகா பொறுமை காக்கும் பார்ட்டிகளுக்காக இந்தப் பாட்டு.
தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே.
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே…
இதில் முதல் வகையை பொறுமை சாலிகள் கிளப்பில் சேர்க்கலாம். இந்த 2வது பாடலுக்குரிய காதலர்களை ‘பாசிட்டிவ் மைன்ட்செட்’ உள்ள குரூப்பில் கோர்த்து விடலாம்.
இந்த பாசிட்டிவ் பார்ட்டிகள்தான் வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள். எதார்த்தமான காதல்வாதிகள் இவர்கள். ‘நிகரியவாதிகளாக இருப்பதை விட இந்த எதார்த்தவாதிகளதான் எப்போதும் வாழ்க்கையிலும் சரி, காதலிலும் சரி, எதிலுமே ஜெயிப்பவர்களாக உள்ளனர்.
சரி காதலில் ஜெயிக்க என்னதான் செய்யலாம்…ஒன்றுமே செய்யாதீர்கள், நீங்கள் நீங்களாகவே இருங்கள், பாதி ஜெயித்ததற்கு அது சமம். இயல்பு வாழ்க்கையில் எல்லாவற்றுக்குமே முக்கியம். எவன் ஒருவன் இயல்பாக இருக்கிறானோ, அவனே எல்லாவற்றிலும் வெல்கிறான் என்று ஒரு பழமொழி கூறுகிறது.
காதலில் பொய்களுக்கு நிறைய இடம் உண்டு. அதேசமயம், 99 சதவீதம் உண்மை, ஒரு சதவீதம் பொய் என்று வைத்துக் கொண்டு அணுகிப் பாருங்கள், நீங்கள் மின்னல் வேகத்தில் ‘கிளவுட் 9′க்குப் போய் விடலாம்.
நிஜம்தான் சார், பொய் இல்லை.! அதேசமயம், அந்த ஒரு சதவீத பொய்யைக் கூட காரணத்தோடு கூறினால் சாலச் சிறந்தது.
காதலியிடம் நிறையப் பேர் பொய் சொல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். உன் கன்னம் ஒரு பஞ்சு மெத்தை என்பார்கள், கண்ணை ஏதாவது ஒரு இல்லாத பூவுடன் ஒப்பிட்டுச் சொல்வார்கள் – அதாவது 16 வயதினிலே படத்தில் இல்லாத செந்தூரப் பூவை வைத்து கங்கை அமரன் பாட்டு எழுதியது போல – கூந்தலை அப்படி இப்படி என்று வர்ணிப்பார்கள்.. இப்படி ‘பிட்டுப் பிட்டாக’ போட்டுக் கொண்டிருப்பார்கள் – சச்சின் படத்தில் வடிவேலுவும், விஜய்யும் போடுவதைப் போல.
ஆனால் அப்படி இருக்காதீர்கள். உங்கள் காதலியின் இயல்பான போக்கிலேயே நீங்களும் டிராவல் பண்ணுங்கள்.
அவரது உண்மையான அழகை அப்படியே சொல்லுங்கள், அவரது குணத்தை இயல்பாக வர்ணியுங்கள், அவரது தவறுகளை சரியாக சுட்டிக் காட்டுங்கள், அவரது பலத்தை அவருக்கு சொல்லிக் காட்டுங்கள், அவரது பலவீனத்தை அவருக்கே தெரியாமல் திருத்திக் காட்டுங்கள்.
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், எப்பப் பார்த்தாலும் வாயை ‘ஈரமாக’ வைத்திருக்காதீர்கள் – ஜொள்ளு உடம்புக்கு ஆகாது, பெண்களுக்கும் பிடிக்காது. அளவாகப் பேசுவதே காதலுக்கு நல்லது. அளந்து விடாமல் இயல்பாகப் பேசும் ஆண்களைத்தான் பெண்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.
காதலி மீது நீங்கள் காட்டும் அக்கறை அவரது மனதில் உங்களை உட்கார வைக்கும். அவர் மீது நீங்கள் காட்டும் உண்மையான பரிவை அவர் நிச்சயம் விரும்புவார்.
நம்மை அவர் காதலிக்கிறாரே, பிறகென்ன, எப்படி வேண்டுமானாலும் பேசி அவரை ஏமாற்றலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். அது பெரிய தவறு. உங்களைப் பற்றி உங்களது காதலிக்கு நிச்சயம் எல்லாமே புரிந்திருக்கும், குறிப்பாக ‘மைன்ட் ரீடிங்கில்’ நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள், அப்புறம் உங்களது காதல் டண்டணக்கத்தான்.!
நிறையக் காதலர்கள் போனிலும், மெயிலிலும் மெசேஜிலும் பேசிப் பேசியே காதலை வளர்ப்பார்கள்.
அது தேவையில்லாதது, அதில் உண்மை இருக்காது, இயல்பு இருக்காது. மனசுக்குள் பேசிப் பாருங்கள், நிச்சயம் நீங்கள் இதயம் வெல்வீர்கள்.
அதெப்படி நான் மனசுக்குள் பேசினால் ‘அவுகளுக்குத்’ தெரியும் என்று சின்னப்புள்ளைத்தனமாக கேட்கப் படாது… நீங்கள் பேசிப் பாருங்கள், அவருக்குக் கேட்கும். அவர் பேசும்போது உங்களுக்குக் கேட்கும். அப்பதாங்க நீங்க உண்மையாவே காதலிக்கிறீர்கள் என்று அர்த்தம்…
சரி நிறையப் பேசியாச்சு, இனியும் பேசினா அடிக்க வந்தாலும் வருவீங்க. இதை வச்சு போய் காதலை டெவலப் பண்ணுங்க..
ஆல் தி பெஸ்ட்… அப்புறம் சாரே மறக்காதீங்க, இயல்பா இருங்க, இதயத்தை வெல்லுங்க…!

Saturday, September 21, 2013

வளர்ப்புத் தந்தையின் பாலியல் தொல்லையால் ஓடினேன் – நடிகை பரபரப்பு புகார்!



என்னுடைய தந்தை உண்மையில் என்னுடைய சொந்தத் தந்தை இல்லை. அவர் எனது வளர்ப்புத் தந்தை. தனது ஆசைக்கு இணங்குமாறு அவர் தொல்லை கொடுத்து வந்ததால்தான் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன் என்று கூறியுள்ளார் தெலுங்கு நடிகை சாய்ஸ்ரீஷா.
தெலுங்கில் வெளியான லவ் அட்டாக் படத்தின் நாயகியான சாய்ஸ்ரீஷாவைக் காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுத்துள்ள நிலையில் தனது வளர்ப்புத் தந்தை மீது பாலியல் குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாய்ஸ்ரீஷாவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவரது வளர்ப்புத் தந்தை பிரசாத் ராவ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சாய்ஸ்ரீஷா, தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஆவார். லவ் அட்டாக் என்ற படத்தில் அறிமுகமானார். டிவி தொடர்களிலும் தற்போது நடித்து வருகிறார்.
இவரது தந்தை என்று கூறப்பட்டவர் பிரசாத் ராவ். இவர் ஒரு டிரைவர். ஆனால் இவரை தனது வளர்ப்புத் தந்தை என்று கூறியுள்ளார் நடிகை சாய்ஸ்ரீஷா.
நேற்று ஒரு தெலுங்கு டிவிக்கு பேட்டி அளித்தார் சாய்ஸ்ரீ. அதில் பிரசாத் ராவ் எனக்கு வளர்ப்பு தந்தை. என் தாய் வீட்டில் இல்லாதபோது அவர் தவறாக நடக்க முயற்சி செய்தார். ஆசைக்கு இணைங்குமாறு வற்புறுத்தினார்.
ஆசைக்கு இணங்காவிட்டால் கொன்று விடுவதாக மிரட்டவும் செய்தார். என் தாய் பொருளாதார ரீதியாக அவரை சார்ந்து வாழ வேண்டி இருந்ததால் என்னால் போலீசில் புகார் செய்ய முடியவில்லை என்று கூறினார்.
இதையடுத்து பிரசாத் ராவைப் பிடித்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். அவர் மீது வழக்குப் போடவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உண்மையில் மே 20ம் தேதி முதலே மாயமாக இருக்கிறாராம் சாய்ஸ்ரீஷா. லவ் அட்டாக் ஷூட்டிங்கின்போதே அவர் மயாமாகி விட்டாராம்.
ஜூலை 6ம் தேதி வரை 2 முறை தனது வளர்ப்புத் தந்தையுடன் அவர் பேசியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் பேசவில்லையாம். இதையடுத்தே பிரசாத் ராவ் போலீஸில் புகார் கொடுத்தார்.
இத்தனை மாதமாக நடிகை காணவில்லை என்று கூறப்படும் நிலையில் ஏன் இதுவரை போலீஸுக்கு பிரசாத் ராவும், அவரது தாயாரும் போகவில்லை என்று தெரியவில்லை. எனவே போலீஸார் இந்த வழக்கை மிகவும் கவனமாக விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
தற்போது டிவியில் தோன்றி சாய்ஸ்ரீஷா பேட்டி அளித்திருந்தாலும் தான் எங்கே இருக்கிறேன் என்பதை அவர் சொல்லவில்லை. எனவே அவர் எங்கிருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது.

Thursday, September 19, 2013

இந்த லவ்வும் புட்டுக்கும் போல…” : இன்னும் 4 வருஷத்துக்கு சிம்பு- ஹன்ஷிகா கல்யாணம் நஹி!


ரு ஹீரோவும், ஹீரோயினும் காதலிச்சா அந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து சொல்லுவார்கள். ஆனால் சிம்பு விஷயத்தில் அது அப்படியே தலைகீழாகி விட்டது.
போயும் போயும் இந்த ஆளையா காதலிக்கிறீங்க..? உங்க அழகுக்கு காதலிக்க வேற நல்ல ஹீரோவே கெடைக்கலியா..? என்று சிம்பு- ஹன்ஷிகா காதல் பகிரங்கப்பட்டவுடன் ஹன்சிகாவை வசைமாறிப் பொழிந்த ரசிகர்கள் தான் அதிகம்.
ப்ளீஸ் உங்களுக்கு சிம்பு வேணாம், அவரை மேரேஜ் பண்ணிக்காதீங்க.. என்று ரூம் போட்டு அழாத குறையாக ஹன்ஷிகாவிடம் கெஞ்சினார்கள் அவரது ரசிகர்கள்.
ஆனால் ஹன்ஷிகாவோ என்ன பண்றது எல்லாம் என் தலையெழுத்து என்று தனக்கும், தனது ரசிகர்களுக்கும் சமாதானம் செய்து கொண்டே சிம்புவுடன் காதலைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
இதனால் ஹன்ஷிகா சிம்புவை காதலிக்க ஆரம்பித்த போது கமிட்டான படங்கள் முடிந்தவுடன் அவருக்கும் சிம்புவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இப்போது அவர்கள் திருணம் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.
சரி இதப்பத்தி ஹன்ஷிகா அம்மா என்ன சொல்றார்…
“எம்பொண்ணு இப்போ 10 படங்களுக்கும் மேல நடிச்சிட்டிருக்கா. அதுல ‘மான் கராத்தே’ ஷூட்டிங் போய்க்கிட்டிருக்கு. அடுத்த மாசத்திலேர்ந்து சுந்தர் சி. படத்துக்கு டேட்ஸ் கொடுத்திருக்கா. அது போக கமிட் பண்ணின மத்த படங்களையும் நடிச்சு முடிச்ச பின்னாடி தான் அவளோட மேரேஜைப் பத்தி யோசிக்க முடியும்.
அதனால இன்னும் மூணு நாலு வருஷத்துக்கு அவளோட மேரேஜைப் பத்தி யோசிக்கவே முடியாது” என்கிறார்.
சிம்புவை காதலிக்கும் போது ஹன்ஷிகா கையில் நான்கைந்து படங்கள் தான் இருந்தது. அந்தப் படங்களில் நடித்து முடித்த பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது ஹன்ஷிகா கையில் புதிதாக அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார்.
மேரேஜை தள்ளிப்போட்டுட்டு புதுசா படங்களை கமிட் பண்ணி நடிச்சா என்ன அர்த்தம்?
“சிம்புவோட இந்தக் காதலும் புட்டுக்கும் போல…” அம்புட்டுத்தான்.

Wednesday, September 18, 2013

நடிகை த்ரிஷா பெயரில் 80 இணையதளங்கள், சமூக வலைத் தள பக்கங்கள்!


நடிகை த்ரிஷா பெயரில் மட்டும் 80 இணையதளங்கள் செயல்படுவதாகத் தெரியவந்துள்ளது.
இணைய தளங்களில் நடிகர், நடிகைகள் பற்றிய ரகசியங்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன. நடிகர்– நடிகைகள் பற்றிய பரபரப்பான தகவல்கள் வெப்சைட்டில் அவர்களே சொன்னதாக வெளியாவதும், பின்னர் அவர்கள் அவற்றை மறுப்பதும் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
சில சமூக விரோதிகளே போலியாக நடிகர்கள் – நடிகைகள் பெயரில் வெப் சைட்களை தொடங்குகிறார்கள். அதில் நடிகர்கள், நடிகைகள் சொல்வது போன்ற கருத்துக்களை வெளியிடுகிறார்கள். படங்களையும் போடுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
பிரபல நடிகர்– நடிகைகள் பெயரில் போலியாக தொடங்கப்பட்டுள்ள வெப்சைட்கள் எத்தனை என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை திரிஷா பெயரில்தான் அதிக எண்ணிக்கையில் போலி வெப்சைட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
திரிஷா பெயரில் மட்டும் 80–க்கும் மேற்பட்ட போலி வெப்சைட்கள் இருக்கின்றன. அதில் அவர் தனது வாழ்க்கையை பற்றி சொல்வது போன்ற கருத்துக்களும், படங்களும் வெளியாகின்றன. அவரது தீவிரரசிகர்கள் சிலரே இதை தொடங்கி இருப்பது அவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
திரிஷாவுக்கு அடுத்தபடியாக ஆர்யா பெயரில்தான் அதிக எண்ணிக்கையில் போலி வெப்சைட்கள் உள்ளன. இவரது பெயரில் இருக்கும் போலி வெப்சைகளின் எண்ணிக்கை 63. நடிகர் சூர்யா பெயரில்–62, நடிகை சமந்தா பெயரில்–55, விஜய் பெயரில்–55 போலி வெப்சைட்கள் இருக்கின்றன. கமலஹாசன் பெயரில்–45, அவரது மகள் நடிகை சுருதி பெயரில்–42, நடிகை ஸ்ரேயா பெயரில்–40 போலி வெப்சைட்களும் இருக்கின்றன.
ரஜினிகாந்த் பெயரில் 31, தனுஷ் பெயரில் 23 வெப்சைட்கள் உள்ளன. இந்த போலி வெப்சைட்களில் அவ்வப்போது வெளியிடப்படும் கருத்துக்களும், புகைப்படங்களும், போலி வீடியோகாட்சிகளும் நடிகர், நடிகைகளை பெருமளவில் பாதிக்கின்றன.
தேவை இல்லாத கருத்துக்களால் நடிகர்– நடிகைகள் மறுப்பு தெரிவிக்கவும் திரை உலகினர் சைபர்கிரைம் போலீ சாரை நாட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
போலி வெப்சைட்கள் குறித்து நடிகை திரிஷா கூறுகையில், “இதுபோன்ற போலி வெப்சைட்கள் மூலம் தவறான தகவல்களால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனது ரசிகர்கள் என்னைப் பற்றி நன்றாக அறிவார்கள். அவர்கள் என்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நான் அளிக்கும் பேட்டிகளில் சரியான கருத்துக்களை மட்டுமே தெரிவிக்கிறேன். வேலையற்ற சிலர் போலி வெப்சைட்டுகளை வைத்திருக்கிறார்கள். இதில் வெளியாகும் கருத்துக்கள், படங்களால் தேவை இல்லாத பிரச்சினைகள் உருவாகலாம். எனவே இதுபோன்ற வெப் சைட்களை உடனே நிறுத்த வேண்டும்,” என்றார்...

மம்முட்டி மகனுக்கு ஜோடியாகும் நஸ்ரியா!


மிழில் அறிமுகமாகும் மம்முட்டி மகன் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார் நஸ்ரியா நஸீம்.
‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமானவர் பாலாஜி மோகன். இப்படம் நல்ல வெற்றியைப் பெற்றதால் அடுத்து இவர் இயக்கப்போகும் படத்திற்கும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
தான் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானை தமிழில் அறிமுகப்படுத்த உள்ளார். துல்கர் சல்மான் மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ளார்.
இந்தப் படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்க நஸ்ரியா நசீம் ஒப்பந்தமாகி உள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள இந்த படத்திற்கு பெயர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
துல்கர் சல்மானும், நஸ்ரியாவும் தற்போது ‘சலால மொபைல்ஸ்’ என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

Tuesday, September 17, 2013

சரியான சைஸ் பிரா போடாவிட்டால் வரும் பிரச்சினைகள்!



பெண்களின் மார்பின் எடையை தாங்கக் கூடிய அளவிற்கு சரியான பிரா அணியவேண்டியது அவசியம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இல்லையெனில் பெண்களுக்கு முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படுவதோடு மார்பகங்களும் பொலிவிழந்து, விரைவில் தொய்வடைந்து போய் விடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
பிரா அணிவது இன்றைக்கு வெறும் பேஷனாகிமட்டுமே வருகிறது. 10ல் 8 பெண்கள் சரியான அளவில் பிரா அணிவதில்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் 80 சதவீத பெண்கள் பொருத்தமற்ற, அளவு சரியில்லாத பிராக்களையே அணிகிறார்களாம். ஒரு சர்வேயில் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மார்பக ஆய்வு நிறுவனம் மற்றும் விளையாட்டு மருத்துவ அமைப்பு ஆகியவை இணைந்து இந்த கருத்துக் கணிப்பை நடத்தின. அதில், 88 சதவீத டீன் ஏஜ் பெண்கள் அவர்களுக்குப் பொருத்தமான பிராக்களை அணிவதில்லை என்று தெரிய வந்ததாம்.
மேலும், 85 சதவீத பெண்களுக்கு எது தங்களுக்குப் பொருத்தமான பிரா என்ற விழிப்புணர்வு இல்லையாம். இதன் காரணமாக சிறு வயது முதலே சரியில்லாத, பொருத்தமற்ற பிராக்களையே இவர்கள் அணிகிறார்களாம்.
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 75 சதவீதம் இளம் பெண்கள் மற்றும் 67 சதவீத வயதான பெண்கள், பொருத்தமான பிராக்களை தேர்வு செய்வதில் எந்தவித அக்கறையம் காட்டுவதில்லையாம்.
பெரிய அளவிலான மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு ஒவ்வொரு மார்பும் சராசரியாக 600 கிராம் எடை கொண்டதாக இருக்குமாம். இந்த எடையை சரியான முறையில் தாங்கக் கூடிய பிராக்களை அணியாவிட்டால், பெண்களுக்கு முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படுகிறதாம்.
மேலும் மார்பகங்களும் பொலிவிழந்து, விரைவில் தொய்வடைந்து போய் விடும். எனவேதான் எப்போதுமே சரியான அளவிலான, பொருத்தமான பிராக்களை அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இருப்பினும் பெரும்பாலான பெண்கள் இதை சரிவர கவனிப்பதில்லையாம், பொருத்தமற்ற பிராக்களையே பெரும்பாலான பெண்கள் அணிகிறார்கள் என்பதை இந்த கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது.
பெண்கள் பொருத்தமான பிராக்களை தேர்வு செய்வதில் பல குழப்பங்களைச் சந்திக்கிறார்கள். தங்களது மார்பு அளவு என்ன என்பதை சரியான முறையில் அளவிட அவர்கள் தயங்குகிறார்கள் என்று இந்த கருத்துக் கணிப்பை நடத்திய குழுவில் இடம் பெற்றிருந்தவரான டாக்டர் டெய்ட்ரே மெக்கீ கூறுகையில், பிரா விற்பனை நிறுவனங்களில் உள்ள அளவு பார்ப்போரிடம் சென்று மார்பு அளவுகளை சரி பார்க்க பெண்கள் தயங்குகிறார்கள்.
இத்தனைக்கும் அளவு பார்ப்போர் பெண்களாகவே உள்ளன போதிலும், அவர்களிடம் தங்களது மார்பகங்களைக் காட்ட பெண்களுக்குத் தயக்கம் காணப்படுகிறது.
மேலும் கடைகளில் உள்ள உடை மாற்றும் அறைகளுக்குச் சென்று பிராக்களைப் போட்டுப் பார்த்துக் கொள்ள பலரும் முன்வருவதில்லை. இதற்குப் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சொல்லப்படுகின்றன.
இந்த விழிப்புணர்வு குறைபாடுக்கு பெண்களின் அம்மாக்கள்தான் முதல் காரணம். அவர்கள்தான் தங்களது மகள்களுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வு பிரா அணிய ஆரம்பிக்கும்போதே சொல்லித் தந்திருக்க வேண்டும்.
பிராக்கள் குறித்த அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அம்மாக்கள் மட்டுமே மகள்களுக்கு இதை சொல்லித் தர சரியான நபர்கள். ஆனால் அவர்கள் செய்யத் தவறியதால்தான் பிள்ளைகள் பிராக்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் வளர காரணமாகி விடுகிறது.
பிராக்கள் வசதியானதாக, சரியாக இருக்க வேண்டும் என்பதை பலரும் உணரவில்லை. மார்பகங்கள் ஆடாமல், அசையாமல் இருக்க மட்டுமே பிரா உதவுகிறது என்பதே பெரும்பாலான பெண்களின் கருத்தாக உள்ளது.
பல பெண்களுக்கு பிராக்கள் பெரும் சுமையாக தெரிவதாக கூறினர். எப்படா வீட்டுக்குப் போவோம், பிராவை கழற்றிப் போடுவோம் என்றிருக்கும் என்று பல பெண்கள் எங்களிடம் தெரிவித்தனர்.
இதற்குக் காரணம், அவர்கள் அணியும் பொருத்தமற்ற பிராக்கள்தான். சரியான பிராக்கள் அணிந்தால் இந்தப் பிரச்சினை அவர்களுக்கு நிச்சயம் வராது.
மார்பகம் பிராவுக்குள் கச்சிதமாக பொருந்தியிருக்க வேண்டும். அப்போதுதான் நாம் சரியான பிராவை அணிந்திருக்கிறோம் என்று அர்த்தம். அவுசகரியமாக உணர்ந்தால் நாம் சரியில்லாத பிராவைப் போட்டிருக்கிறோம் என்று உணர வேண்டும் என்றார் அவர்.
பெண்களுக்கு சரியான பிரா எது, உங்களின் பிராவை எப்படி சரியான முறையில் தேர்வு செய்யலாம், உங்களது மார்புக்கு ஏற்ற பிரா எது என்பது குறித்த அடிப்படை விஷயங்களைப் பெண்களுக்குக் கற்றுத் தரும் நடவடிக்கைகளை தற்போது இந்த இரு அமைப்புகளும் மேற்கொண்டுள்ளனவாம்.

Monday, September 16, 2013

தொழிலாளர்களிடம் கொள்ளையடிக்கும் பணத்தை நடிகைகளிடம் கொட்டும் சரவணா ஸ்டோர்!



சரவணா ஸ்டோர்ஸ்க்கு அடிக்கடி போவதுண்டு. அங்கு வரும் பல்வேறு விதமான மனிதர்களை பார்க்க பிடிக்கும் என்பதும், அங்கு வேலைப்பார்க்க வந்திருக்கும் நெல்லை மண் மணம் மாறா தொழிலாளர்களுடன் பேசுவது பிடிக்கும் என்பதும் அங்கு போவதற்கான காரணம்.
வேலைப்பளுவுக்கிடையில் அவர்கள் நெல்லை பேச்சுவழக்கில் ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டும் கிண்டல் செய்து கொண்டுமிருப்பார்கள். சமயங்களில் ரொம்ப நேரம் எதும் வாங்காமல் சும்மா நோண்டிக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களையும் தங்களுக்குள் ஓட்டிக்கொள்வதையும் கவனித்திருக்கிறேன்.
அங்கு எப்போது சென்றாலும் வேலைப்பார்க்கும் ஏதாவது ஒரு பையனிடமோ பெண்ணிடமோ பேச்சுக் கொடுக்க ஆரம்பிப்பேன். “நானும் திருநெல்வேலிக்காரந்தாம்டே..”னு சொல்லி பேச ஆரம்பித்தால் போதும் அவங்களும் உற்சாகமாப்பேச ஆரம்பிப்பார்கள். அவர்களின் கதைகளை கேட்க பரிதாபமாக இருக்கும். அவர்களிடம் பேசிவிட்டு வரும் நாட்கள் எல்லாம் மனம் கனத்துப்போகும்.
இன்று அங்கு சென்றிருந்தபோது அந்த காட்சியைக் கண்டேன். ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க எலும்பு தோலுமாக இருந்த இளம்பெண் ஒருவர் சோர்ந்துபோய் துணிகள் தொங்கவிடப்பட்ட இடங்களுக்கு நடுவில் மறைவாய் அமர்ந்திருந்தார்.

“என்னம்மா ஆச்சு..” என்றேன்.
“கால்வலிண்ணே… முடியல..” என்றார் பரிதாபமாக.
“ஏன் உங்களுக்கு உட்கார நாற்காலி எதுவும் வைக்க மாட்டாங்களா..?”
“அதெல்லாம் கிடையாதுண்ணே.. காலையில வந்ததுல இருந்து திரும்ப தூங்கப்போறவரைக்கும் பதினாறு மணிநேரம் நாங்க நின்னுட்டு தான் வேலைப்பார்க்கணும்.. வலி எடுக்கும்.. கொஞ்சம் ஓரமா உக்காரலாம்னு பார்த்தா சூப்பர்வைஸருங்க கண்ல பட்டா செத்தோம்..” என்று அவர் கூறியபோது என் கால்கள் வலிக்க ஆரம்பித்தது.
சரவணா ஸ்டோருக்குள் பொருட்கள் வாங்கவோ, குறைந்த பட்சம் அந்த பல அடுக்கு மாளிகைக்குள் சுற்றிப்பார்க்கவாவது நாம் சென்றிருப்போம்.
சரவணா ஸ்டோருக்குள் நுழைந்தால் முதல் ஒரு மணிநேரம் உற்சாகமாக சுற்றி வந்து பொருட்களை வாங்க முடியும். அதன்பிறகு தன்னியல்பாக உங்கள் கால்களில் உளைச்சல் ஏற்படும். எங்காவது உட்காரலாம் என்று கால்கள் கெஞ்சும்.
அந்தமாதிரியான தருணத்தில் எப்போதாவது நீங்கள் அங்கு பதினாறு மணிநேரம் நின்றுக்கொண்டே பணிபுரியும் ஊழியர்களின் கால்களைப் பற்றி யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா..
நம்முடைய கால்களைப் போன்றே அந்த ஏழைத் தொழிலாளர்களுக்கும் கால்கள் உண்டு. அந்த கால்களுக்கும் வலி எடுக்கும்.. அவர்கள் எங்கு உட்கார்கிறார்கள் ஏன் அவர்களுக்கு உட்கார இருக்கை கொடுக்கவில்லை என்பது குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..
இப்படி பதினாறு மணிநேரம் நின்றுக்கொண்டே வேலைப்பார்க்கும் நிலைக்கு காரணம் அவர்களின் குடும்ப சூழல். அதைப் பயன்படுத்திக் கொள்ளுகிறது சரவணா ஸ்டோர் கும்பல்.
தென்மாவட்டங்களில் இருந்து குறைவான ஊதியத்திற்கு கொத்தடிமைகளை இறக்குமதி செய்த சரவணா ஸ்டோர் ஓனர்கள் இப்போது வட இந்திய தொழிலாளர்களை குறிவைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழர்களை விட இன்னும்கூட குறைவாக ஊதியம் கொடுக்கலாம். அவர்களின் குடும்ப வறுமையை பயன்படுத்தி சுரண்டுவதுதான் ஓனர்களின் தந்திரம். குறைவான ஊதியத்திலும் முடிவெட்டுறது முதற்கொண்டு பல காரணங்களைச் சொல்லி பிடித்தமும் செய்துக் கொள்வார்கள்.
இப்படி தொழிலாளர்களிடம் ஆட்டையப்போட்ட பணத்தை தான் நடிகைகளுக்கும் நடிகன்களுக்கும் விளம்பரம் என்றப்பெயரில் வாரி இறைக்கிறார்கள் சரவணாஸ்டோர்ஸ் முதலாளிகள்.
இந்தமாதிரி தொழிலாளர்களை சுரண்டும் நிறுவனத்திற்கு `அகரம் பவுண்டேசன்’ என்றப்பெயரில் கல்வி சேவை செய்யும் மனிதநேயமிக்க சூர்யா விளம்பரதாரர்.. எப்படி இருக்கு சேவை.
பதினாறு மணிநேரம் நின்று கொண்டே வேலைப்பார்க்கும் அந்த தொழிலாளர்களைப் பார்க்கும்போதெல்லாம், இவர்களைப்பற்றி அக்கறைக்கொள்ள தமிழக தொழிலாளர் நலத்துறையில் ஒரு யோக்கியன் கூடவா அதிகாரியாக இல்லாமல் இருக்கிறான் என்று தோன்றுகிறது. இந்த கொடுமைகளை மறைமுகமாக சுட்டிக்காட்டி அங்காடித்தெரு என்ற படமும் வந்திருக்கிறது. எந்த நடவடிக்கையும் இல்லை. இடதுசாரி இயக்கங்கள் இந்த தொழிலாளர்கள் விசயத்தில் ஏன் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள் என்பது புரியவில்லை.
தொழிலாளர்களின் உரிமையான எட்டுமணி நேர வேலை என்பதை விடுங்கள்.. குறைந்தபட்சம் முதலில் பதினாறு மணிநேரம் நின்றுக் கொண்டு வேலைப்பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு நாற்காலியாவது போட்டுக்கொடுக்க சொல்லுங்கள் பாவிகளே..
“எடுத்துக்கோ.. எடுத்துக்கோ..
அண்ணாச்சிக்கடையில் எடுத்துக்கோ.. ”
என்று சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் விதவிதமான நடிகைகள் வந்து துள்ளிக் குதிப்பதை பார்க்கும்போது, இனிமேல் கொஞ்சம் இந்த தொழிலாளர்களின் கால்களையும் நினைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே…
அந்த கால்களிலிருந்து சரவணா ஸ்டோர் அண்ணாச்சிகளால் உறிஞ்சப்பட்ட ரத்தமே அந்த நடிகைகளிடம் கொட்டப்படும் கோடிகள்..

-கார்ட்டூனிஸ்ட்.பாலா

Thursday, April 30, 2009

south indian stars photographs

Exclusive collection of half saree/saree actress<br/>
Related pictures: Poornima_Bagyaraj
Traditional beautiful actress photos<br/>
Great pictures of masala actress<br/>
Masala movie actress photos<br/>
Find more pictures: Rajanikant
Tollywood hot actress stills<br/>
Tollywood hot actress stills<br/>
Find more pictures: Nayanthara
Masala movie actress photos<br/>
Golden collection of tamil cinema actress<br/>
Hot Mallu pictures<br/>
Bollywood pictures<br/>
Find more pictures: Kareena kapoor
Tempting in mini skirt<br/>
South actress hot images<br/>
un-cencored hot masala photoshot<br/>
spicy model actress photoshots<br/>
Tamil actress hot gallery<br/>
south indian stars photographs<br/>
Find more pictures: Remya Krishanan