என்னுடைய தந்தை உண்மையில் என்னுடைய சொந்தத் தந்தை இல்லை. அவர் எனது வளர்ப்புத் தந்தை. தனது ஆசைக்கு இணங்குமாறு அவர் தொல்லை கொடுத்து வந்ததால்தான் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன் என்று கூறியுள்ளார் தெலுங்கு நடிகை சாய்ஸ்ரீஷா.
தெலுங்கில் வெளியான லவ் அட்டாக் படத்தின் நாயகியான சாய்ஸ்ரீஷாவைக் காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுத்துள்ள நிலையில் தனது வளர்ப்புத் தந்தை மீது பாலியல் குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாய்ஸ்ரீஷாவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவரது வளர்ப்புத் தந்தை பிரசாத் ராவ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சாய்ஸ்ரீஷா, தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஆவார். லவ் அட்டாக் என்ற படத்தில் அறிமுகமானார். டிவி தொடர்களிலும் தற்போது நடித்து வருகிறார்.
இவரது தந்தை என்று கூறப்பட்டவர் பிரசாத் ராவ். இவர் ஒரு டிரைவர். ஆனால் இவரை தனது வளர்ப்புத் தந்தை என்று கூறியுள்ளார் நடிகை சாய்ஸ்ரீஷா.
நேற்று ஒரு தெலுங்கு டிவிக்கு பேட்டி அளித்தார் சாய்ஸ்ரீ. அதில் பிரசாத் ராவ் எனக்கு வளர்ப்பு தந்தை. என் தாய் வீட்டில் இல்லாதபோது அவர் தவறாக நடக்க முயற்சி செய்தார். ஆசைக்கு இணைங்குமாறு வற்புறுத்தினார்.
ஆசைக்கு இணங்காவிட்டால் கொன்று விடுவதாக மிரட்டவும் செய்தார். என் தாய் பொருளாதார ரீதியாக அவரை சார்ந்து வாழ வேண்டி இருந்ததால் என்னால் போலீசில் புகார் செய்ய முடியவில்லை என்று கூறினார்.
இதையடுத்து பிரசாத் ராவைப் பிடித்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். அவர் மீது வழக்குப் போடவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உண்மையில் மே 20ம் தேதி முதலே மாயமாக இருக்கிறாராம் சாய்ஸ்ரீஷா. லவ் அட்டாக் ஷூட்டிங்கின்போதே அவர் மயாமாகி விட்டாராம்.
ஜூலை 6ம் தேதி வரை 2 முறை தனது வளர்ப்புத் தந்தையுடன் அவர் பேசியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் பேசவில்லையாம். இதையடுத்தே பிரசாத் ராவ் போலீஸில் புகார் கொடுத்தார்.
இத்தனை மாதமாக நடிகை காணவில்லை என்று கூறப்படும் நிலையில் ஏன் இதுவரை போலீஸுக்கு பிரசாத் ராவும், அவரது தாயாரும் போகவில்லை என்று தெரியவில்லை. எனவே போலீஸார் இந்த வழக்கை மிகவும் கவனமாக விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
தற்போது டிவியில் தோன்றி சாய்ஸ்ரீஷா பேட்டி அளித்திருந்தாலும் தான் எங்கே இருக்கிறேன் என்பதை அவர் சொல்லவில்லை. எனவே அவர் எங்கிருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது.
No comments:
Post a Comment