Friday, September 20, 2013

சர்க்கரை நோய் தீர எளிய சித்த மருத்துவம்!



சர்க்கரை நோய் பரம்பரை நோயாக வருவது மட்டுமின்றி அதிக அளவு கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உண்டு அதற்கு ஏற்ப உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும் அசைவ உணவுகளையும் இனிப்பு உணவுகளையும் அதிகமாக உண்பவர்களுக்கும் மஞ்சள் காமாலை நோய் கண்டவர்களுக்கும் எளிதாக வரும்.
இப்படிப்பட்டவர்களின் உடலில் உள்ள கணையம் இன்சுலின் சுரப்பதை நிறுத்தி விடும். உணவிலிருந்து கிடைக்கும் சர்க்கரை குளுகோசாக மாறி உடலின் பல பாகங்களுக்கும் சென்று உடலுக்கு சக்தியை கொடுக்கிறது, இன்சுலின் சுரத்தல் நின்று விட்டால் மேல் கண்ட சக்தி நமது உடலுக்கு கிடைக்காமல் பல நோய்களுக்கு நாம் ஆளாகின்றோம். அதனால் தான் நோய் கண்டவர்கள் மருத்துவமனைக்கு போன உடன் முதலில் குளுக்கோஸ் ஏற்றுவார்கள்.
உடல் சக்தி இழப்புக்கு காரணங்கள் மித மிஞ்சிய உடல் உறவு, உடல் சூடேறி தாது கெட்டு நரம்பெல்லாம் பலன் குறைந்துவிடும் அளவுக்கு மிதமிஞ்சிய தேகப் பயிற்சி, மலம், மூத்திரத்தை அடக்குவது, தேவையற்ற பட்டினி, கண்விழிப்பு, விபத்தில் இரத்தம் அதிகமாக வெளியேறுதல், அடிக்கடி இனிப்பான உணவுகளை உண்பதாலும் சக்தியற்ற உணவுகளை சாப்பிடுவதாலும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
நீரழிவு நோயின் அறிகுறிகள் :
உடல் மெலியும். வியர்வை அதிகப்படும். உடலும் கண்களும் வெளுத்து காணப்படும். நெஞ்சு உலரும். நா வரளும். தாகம் மிகும். ஆயாசம், களைப்பு உண்டாகும். உணவு செல்லாது. சிறுநீரகங்கள் பாதிக்கும். இருதயம் பலவீனப்படும். ஆண்மை சக்தி குறையும். நரம்புகள் சக்தியை இழக்கும். சிறுநீர் அடிக்கடி வெளியேறும். உடலில் எந்த பாகத்தில் காயம் பட்டாலும் இலகுவில் புண் ஆறாது.
தீராத நோய் சித்த மருத்துவத்தில் குணமாகும். இன்றைய மருத்துவர்கள் இயற்கையாக இன்சுலின் சுரக்க வழி வகுக்காமல் செயற்கை இன்சுலினை ஏற்றியும் அதிக அளவு மாத்திரைகளைக் கொடுத்தும் சார்க்கரை நோய் தீராமல் மேலும் உடலில் பல நோய்கள் உண்டாக காரணமாக வழி செய்கிறது.
இயற்கை இன்சுலின் உடலில் சுரந்து நோய் தீர சித்த மருத்துவத்தில் ஆவாரை பஞ்சாங்கம், நாவல் பட்டை, நாவல் கொட்டை, வெந்தையம், வல்லாரை, பொற்சீந்தில், ஆலம் விழுது, சிறு குறிஞ்சான், மருதம் பட்டை, அரக்கீரை, வள்ளக்கீரை, அத்தி கொழுந்து இவைகளை சம அளவு எடுத்து நிழலில் காயவைத்து இடித்து சலித்து சூரணமாக்கி காலை மாலை உணவுக்கு முன்பு வேளைக்கு அரை முதல் ஒரு டீஸ்பூன் வரை வென்னீர் அல்லது பாலுடன் சாப்பிட்டு வந்தால் உடலில் இயற்கையாக கணையம் இயங்கி அதன் வாயிலாக இயற்கை இன்சுலின் சுரந்து சர்க்கரை நோய் தீரும்.

No comments:

Post a Comment