Monday, September 16, 2013
ஒரு படுக்கையறை சந்திக்கும் அனுபவங்கள்!
லண்டன்: இங்கிலாந்தில், படுக்கை அறை நிலவரம் குறித்த ஒரு சர்வேயில் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளனவாம். பத்து வருட கால சராசரி குடும்ப வாழ்க்கையின்போது ஒரு படுக்கை சந்திக்கும் அனுபவங்கள் குறித்த வித்தியாசமான சர்வே இது.
480 உறவு.. !
ஒவ்வொரு படுக்கையும் சராசரியாக தம்பதியருக்கிடையிலான 720 சண்டகளைப் பார்த்துள்ளனவாம். அதேபோல 480 முறை உறவு உறவுகள் நடந்துள்ளன. 3650 முறை ட்விட்கள் அனுப்பப்பட்டுள்ளன. 14,600 முறை எஸ்.எம்.எஸ்கள் போயுள்ளன.
போனில் 38 மணி நேரம்
38 மணி நேரம் 50 நிமிடம் போனில் பேசியுள்ளனர் தம்பதிகள். பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்டவற்றை சராசரியாக 70 நாட்கள் வரை பிரவுசிங் செய்துள்ளனர்.
4160 மெயில்கள்
4160 இமெயில்கள் படுக்கையில் இருந்தபடி இந்த பத்து வருட காலத்தில் சராசரியாக அனுப்பப்பட்டுள்ளனவாம்.
3640 கட்டித் தழுவல்கள்
10 வருட காலத்தில் சராசரியாக தம்பதிகள் 3640 முறை கட்டித் தழுவியுள்ளனர்..
4160 முத்தம்
4160 முறை முத்தமிட்டுக் கொண்டுள்ளனர். பத்து வருட காலத்தில் தம்பதிகள் சராசரியாக 2 வருடம் எட்டு மாதங்களுக்கு படுக்கையைப் பயன்படுத்தியுள்ளனர்.
120 முறை சாப்பாடு
120 முறை படுக்கையில் அமர்ந்தபடி பிரேக் பாஸ்ட் சாப்பிட்டுள்ளனர். 240 புத்தகங்களைப் படித்துள்ளனர்.
உல்லாசத்தில் 360 தொந்தரவு!
வாரத்திற்கு 2 மணி நேரம் 12 நிமிடங்கள் டிவி பார்த்துள்ளனர். மாதத்திற்கு 3 முறை தம்பதிகள் உல்லாசத்தில் இருக்கும்போது குழந்தைகளால் டிஸ்டர்ப் செய்யப்படுகின்றனராம். 10 வருட வாழ்க்கையில் மொத்தமாக 360 முறை இந்த தொல்லை ஏற்படுகிறதாம்.
குறட்டைதான் காரணம்
மாதத்திற்கு 6 முறை தம்பதிகளுக்கிடையே வாய்ச் சண்டை ஏற்படுகிறதாம். குறட்டை விடுதல்தான் சண்டைக்கு முதல் முக்கியக் காரணமாக இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment