Tuesday, September 17, 2013
ஜீ தமிழ் தொலைக்காட்சி - யாமினியால் உமாசங்கரின் வாழ்க்கை சீரழிந்த கதை!
ஜீ தமிழ் டிவியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘மசாலா குடும்பம்’. இந்த டிவி தொடரில் நடிகை புவனேஸ்வரி, நடிகை யாமினி என்ற பெயரில் சினிமா நடிகையாகவே நடிக்கிறார். இந்த தொடரின் கதை என்னவென்றால், உமாசங்கர், அழகான மனைவி, அர்ஜூன், அஞ்சலி, அக்ஷயா என மூன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ககை நடத்தி வருகிறார். இவர்கள் வீட்டின் மாடியில் வாடகைக்கு வரும் வினோத் உமாசங்கரின் மகளை காதலிக்கிறான்.
உமாசங்கருக்கு நடிகனாக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. நடிகை யாமினிக்கு கணவனாக நடிக்கும் நல்ல வாய்ப்பும் கிடைக்கிறது. நடிப்பில் பட்டயக் கிளப்பும் உமாசங்கரை யாமினிக்கு நன்றாகவே பிடித்துப் போகிறது. தனக்கு ஆலோசகனாக அவரை வைத்துக் கொள்கிறாள். உமாசங்கரோ எடுத்ததுக்கெல்லாம் யாமினியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். யாமினியின் வரவு உமாசங்கரின் குடும்ப வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது உமாசங்கரின் வாழ்க்கை எப்படி சின்னாபின்னமாகிறது என்பதை சஸ்பென்ஸாக சொல்கிறார்களாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment