Wednesday, September 18, 2013

நஸ்ரியா – ஜெய் காதல்.. விரைவில் திருமணம்?


நஸ்ரியா– ஜெய் காதல் தீவிரமாகியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
நஸ்ரியா தமிழில் ‘நேரம்’ படம் மூலம் அறிமுகமானார். தற்போது ‘ராஜா ராணி’ என்ற படத்தில் ஜெய் உடன் சேர்ந்து நடித்து உள்ளார். இப்படம் வரும் 27-ந்தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு முன்பே இருவரும் ‘திருமணம் எனும் நிக்கா’ என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர். இந்தப்படம் இன்னும் வெளிவரவில்லை. தற்போது தனுஷ் ஜோடியாக நய்யாண்டி படத்தில் நடித்து வருகிறார்.
‘திருமணம் எனும் நிக்கா’ படத்தில் நடித்தபோது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இது ‘ராஜா ராணி’ படத்திலும் தொடர்ந்திருக்கிறது. இருவரும் தனியாக உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசுவதாக படப்பிடிப்பு குழுவினர் சொல்கிறார்கள்.
சமீபத்தில் படப்பிடிப்பில் இருந்து ஜெய்யுடன் நஸ்ரியா திடீரென மாயாகிவிட்டதாகவும் நீண்ட நேரத்துக்கு பிறகு திரும்பி வந்ததாகவும் கூறுகின்றனர்.
தான் ஹீரோயினாக நடிக்கும் படங்களில் நாயகனுடன் நெருக்கமான காதல் காட்சி அல்லது முத்தக் காட்சியில் நடிக்க முடியாது என்றும், அப்படியே அந்தக் காட்சி அவசிமெயன்றால் ஜெய்யிடம் பர்மிஷன் வாங்க வேண்டும் என்றும் கறாராகச் சொல்லி கதிகலங்க வைக்கிறாராம் நஸ்ரியா.
சமீபத்தில் ஒரு முன்னணி ஹீரோவின் படத்தில் முதலிரவுக் காட்சியில் நடிக்க வேண்டியிருந்ததாம். விஷயம் கேள்விப்பட்டதும் நைஸாக நழுவிவிட்டாராம் நஸ்ரியா. பின்னர் ஒருவழியாக அவரை தேடிப் பிடித்து நடிக்க அழைத்த போது, இந்தமாதிரி காட்சிகள் இனி படத்தில் இருக்காது என எழுதிக் கொடுத்தால்தான் நடிக்க வருவேன் என்றாராம்.
கோடம்பாக்கத்தில் திருமணத்துக்கு தயாராகும் அடுத்த காதல் ஜோடி ஜெய்– நஸ்ரியா என பரபரப்பாக பேசப்படுகிறது.

No comments:

Post a Comment