Saturday, September 21, 2013

இப்படியும் சில மோசடிகள்...



நான் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திருமணத்திற்கு சென்று திருச்சியில் இருந்து setc கவர்மென்ட் பேருந்தில் சென்னை வந்து கொண்டு இருந்தேன். 

அந்தபேருந்து மாலை நாலு மணிக்கு கிளம்பியதால் இரவு உணவிற்காக விகிரவாண்டியில் நிப்பாடினார்கள்அங்கு தோசை கேட்டேன் கொண்டுவந்தார்கள் ஒரு தட்டில் இரண்டு ஆறிபோன தோசையை ஒன்று போதும் என்றேன் அதற்கு அவர்கள் இல்லை ஒரு ப்ளேட்டில் இரண்டுதான் வரும் ஒன்று தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் நானும் சரி என்று விட்டுவிட்டேன் என் உடன் பேருந்தில் வந்த ஒரு தம்பதியினர் இரண்டு தோசை என்று கேட்டு அவர்களுக்கும் ஒருப்ளேட்க்கு இரண்டு தோசை வைத்து விட்டான் அவர்களும் எவளவோ சொல்லியும் ஒருப்ளேடை திரும்ப எடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டான்

நான் அந்தஇரண்டில் ஒன்றை சாப்பிட்டுவிட்டு எழுந்த வுடன் பில்லை கொண்டு வந்து வைத்தான் பார்த்தால் அறுபது ருபாய் என்று இருந்தது நான் திகைத்து மனதுக்குள் திட்டிக்கொண்டே கொடுத்துவிட்டு திரும்பினால் உள்ளே ஒரே சத்தம் அந்த தம்பதியினர் அவர்கள் பில்லை பார்த்துவிட்டு தயங்கி கையில் இருந்த நூறு ரூபாயை கொடுத்து அவ்வளவுதான் இருக்கிறது என்று சொல்ல அந்த உணவக கல்லாவில் இருந்தவர்தான் சத்தம்போட்டு கொண்டு இருந்தார் மீதம் இருபதுரூபாய்க்கு

நான் சென்று அவர்களை சமாதன படுத்தி அந்த இருபது ரூபாயை நான் தருகிறேன் என்று சொன்னதற்கு அந்த பெண் மறுத்து விட்டு தன் பையில் இருந்து வீட்டிற்கு குழந்தைகளுக்காக வாங்கி வைத்து இருந்த பிஸ்கட் பாக்கெட் இரண்டை எடுத்து கொடுத்துவிட்டு வந்தார்

அதையும் அந்த மனிதாபிமானமில்லாத கேஷியர் வாங்கி வைத்துக்கொண்டார். இப்படி பட்ட இரண்டு விதமான மனிதர்களை பார்த்து மனது வேதனை பட்டது

அம்மா உணவகம் துவங்கி இருக்கும் அம்மா முதலில் தமிழ்நாடு முழுவதும் ஹைவே மோட்டல்களை திறந்து கவர்மென்ட் பேருந்துகள் அனைத்தும் கண்டிப்பாக அங்கு தவிர வேறு எங்கும் நிறுத்த கூடாது என்று கட்டளை பிறப்பிக்க வேண்டும். அவ்வாறுசெய்தால் நிறைய ஏழை நடுத்தர மக்கள் பயன் அடைவார்கள்..

No comments:

Post a Comment