தமிழில் அறிமுகமாகும் மம்முட்டி மகன் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார் நஸ்ரியா நஸீம்.
‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமானவர் பாலாஜி மோகன். இப்படம் நல்ல வெற்றியைப் பெற்றதால் அடுத்து இவர் இயக்கப்போகும் படத்திற்கும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
தான் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானை தமிழில் அறிமுகப்படுத்த உள்ளார். துல்கர் சல்மான் மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ளார்.
இந்தப் படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்க நஸ்ரியா நசீம் ஒப்பந்தமாகி உள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள இந்த படத்திற்கு பெயர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
துல்கர் சல்மானும், நஸ்ரியாவும் தற்போது ‘சலால மொபைல்ஸ்’ என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment