சீனாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளை தேர்ச்சி செய்ய அவர்களை கட்டாயப்படுத்தி அவரை முத்தமிடவைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கான்சு மாகாணத்தில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர், தனது மாணவிகளிடம் இருந்து முத்தம் பெறுவது போன்ற புகைப்படங்கள் வெளியானதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டுமென்றால், தனக்கு முத்தமிடவேண்டுமென ஒரு ஆசிரியர் கட்டாயப்படுத்தியுள்ளார். ஆசிரியரை முத்தமிட விரும்பாத மாணவிகளை ஆசிரியர் முத்தமிடுவாராம்.
இந்த இரண்டு பிரிவிலும் வராத மாணவிகளை அந்த ஆசிரியர் பரீட்சையில் பெயில் ஆக்கிவிடுவார். இந்த ஆசிரியரின் செயலை புகைப்படம் எடுத்த சிலர் அதனை இணையத்தில் வெளியிட்டதால் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், வகுப்பறையில் ஆசிரியரின் அராஜகம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment