Monday, September 16, 2013
நாராயணா… இந்த சின்னத்திரை நடிகர் நடிகைகள் தொல்லை தாங்கமுடியலைப்பா!
முன்னால எல்லாம் நடிகர் நடிகைகள் பெரிய திரையில் விஆர்எஸ் வாங்கிக் கொண்டுதான் சின்னத்திரைக்கு போவார்கள். ஆனால் இப்போ நிலைமை தலைகீழாகிவிட்டது. சின்னத் திரையில நடித்துவிட்டு அப்புறம் பெரிய திரைக்கு வருகிறாங்க. அப்படி வந்தவர்தான் சிவகார்த்திகேயன். இவர் நடிக்க வந்ததுமே தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளும் சமீபத்தில் வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படமும் ஹிட்டாகியுள்ளது. சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் மிர்ச்சி செந்தில், இவரும் இப்போது படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து நிறைய நடிகர் நடிகைகள் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து மகபஆனந்த் என்னும் சின்னத்திரை தொகுப்பாளர் பெரிய திரைக்கு வருகிறார். இவர் வானவராயன் வல்லவராயன் படத்தில் கிருஷ்ணானவுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். ராஜ்கமல் என்னும் சின்னத்திரை நடிகரும் வண்ணத்திரையில் மேல்நாட்டு மருமகள் என்னும் படத்தின் மூலம் ஹீரோவாகிறார். சின்னத்திரை நடிகையான நீலிமா ராணி அமளி துமளி என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம். போகிற போக்கைப் பார்த்தால் சின்னத்திரைக்கும் பெரிய திரைக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட கண்டுபிடிக்க முடியாது போலிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment