Wednesday, September 18, 2013

நடிகை த்ரிஷா பெயரில் 80 இணையதளங்கள், சமூக வலைத் தள பக்கங்கள்!


நடிகை த்ரிஷா பெயரில் மட்டும் 80 இணையதளங்கள் செயல்படுவதாகத் தெரியவந்துள்ளது.
இணைய தளங்களில் நடிகர், நடிகைகள் பற்றிய ரகசியங்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன. நடிகர்– நடிகைகள் பற்றிய பரபரப்பான தகவல்கள் வெப்சைட்டில் அவர்களே சொன்னதாக வெளியாவதும், பின்னர் அவர்கள் அவற்றை மறுப்பதும் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
சில சமூக விரோதிகளே போலியாக நடிகர்கள் – நடிகைகள் பெயரில் வெப் சைட்களை தொடங்குகிறார்கள். அதில் நடிகர்கள், நடிகைகள் சொல்வது போன்ற கருத்துக்களை வெளியிடுகிறார்கள். படங்களையும் போடுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
பிரபல நடிகர்– நடிகைகள் பெயரில் போலியாக தொடங்கப்பட்டுள்ள வெப்சைட்கள் எத்தனை என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை திரிஷா பெயரில்தான் அதிக எண்ணிக்கையில் போலி வெப்சைட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
திரிஷா பெயரில் மட்டும் 80–க்கும் மேற்பட்ட போலி வெப்சைட்கள் இருக்கின்றன. அதில் அவர் தனது வாழ்க்கையை பற்றி சொல்வது போன்ற கருத்துக்களும், படங்களும் வெளியாகின்றன. அவரது தீவிரரசிகர்கள் சிலரே இதை தொடங்கி இருப்பது அவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
திரிஷாவுக்கு அடுத்தபடியாக ஆர்யா பெயரில்தான் அதிக எண்ணிக்கையில் போலி வெப்சைட்கள் உள்ளன. இவரது பெயரில் இருக்கும் போலி வெப்சைகளின் எண்ணிக்கை 63. நடிகர் சூர்யா பெயரில்–62, நடிகை சமந்தா பெயரில்–55, விஜய் பெயரில்–55 போலி வெப்சைட்கள் இருக்கின்றன. கமலஹாசன் பெயரில்–45, அவரது மகள் நடிகை சுருதி பெயரில்–42, நடிகை ஸ்ரேயா பெயரில்–40 போலி வெப்சைட்களும் இருக்கின்றன.
ரஜினிகாந்த் பெயரில் 31, தனுஷ் பெயரில் 23 வெப்சைட்கள் உள்ளன. இந்த போலி வெப்சைட்களில் அவ்வப்போது வெளியிடப்படும் கருத்துக்களும், புகைப்படங்களும், போலி வீடியோகாட்சிகளும் நடிகர், நடிகைகளை பெருமளவில் பாதிக்கின்றன.
தேவை இல்லாத கருத்துக்களால் நடிகர்– நடிகைகள் மறுப்பு தெரிவிக்கவும் திரை உலகினர் சைபர்கிரைம் போலீ சாரை நாட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
போலி வெப்சைட்கள் குறித்து நடிகை திரிஷா கூறுகையில், “இதுபோன்ற போலி வெப்சைட்கள் மூலம் தவறான தகவல்களால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனது ரசிகர்கள் என்னைப் பற்றி நன்றாக அறிவார்கள். அவர்கள் என்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நான் அளிக்கும் பேட்டிகளில் சரியான கருத்துக்களை மட்டுமே தெரிவிக்கிறேன். வேலையற்ற சிலர் போலி வெப்சைட்டுகளை வைத்திருக்கிறார்கள். இதில் வெளியாகும் கருத்துக்கள், படங்களால் தேவை இல்லாத பிரச்சினைகள் உருவாகலாம். எனவே இதுபோன்ற வெப் சைட்களை உடனே நிறுத்த வேண்டும்,” என்றார்...

No comments:

Post a Comment