Showing posts with label ஹாலிவுட். Show all posts
Showing posts with label ஹாலிவுட். Show all posts

Monday, June 29, 2009

ஹாலிவுட்டில் தயாராகும் தமிழ்ப்படம்!

ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் பண்ணணும்னு நினைச்சாலும், விதி கூடுவாஞ்சேரி தாண்டி போக விடாம தடுக்கும் பல பேரை! ஆனால் லொகேஷன் பார்க்கவே இரண்டு முறை ஹாலிவுட் போய் வந்திருக்கிறார் லேகா ரத்தினகுமார். அதுமட்டுமல்ல, இவரே தயாரித்து இயக்கவிருக்கும் புதிய படத்தின் ஒளிப்பதிவாளராக கெய்க் நகாகரா என்ற பெண்மணியை நியமித்திருக்கிறார். இவர் ஹாலிவுட் ஒளிப்பதிவாளர். அடுத்த ஆச்சர்யத்தையும் கேளுங்கள், படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளையும் ஹாலிவுட்டிலேயே முடித்துக் கொள்ளப் போகிறாராம். இதற்காக இவர் ஒப்பந்தம் போட்டிருப்பது புகழ்பெற்ற போஸ்ட் புரடக்ஷன் நிறுவனமான சன்செட் லொகேஷன்ஸ் நிறுவனத்தின் அதிபர் ஷெர்ரி மில்லிகனிடம்!

குற்றாலத்திலும், அமெரிக்காவிலும் நடப்பதாக அமைந்துள்ளது கதை. குற்றாலம் பகுதியை எடுப்பதற்காக புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் லேகா ரத்னகுமார்.

கதை வசனத்தை சித்ரலேகா எழுத, திரைக்கதை, இசை, இயக்கம் லேகா ரத்னகுமார்.

முன்னணி ஹீரோக்கள் நடிப்பதை விட புதுமுகங்கள் இருந்தால் பொருத்தமாக இருக்குமே என்றும் தோன்றியதால் சுறுசுறுப்பாக புதுமுக வேட்டையும் நடந்து வருகிறது. செம பிகர்னு தன்னையே நினைச்சுகிட்டாலும் சரி, மற்றவங்க சொன்னாலும் சரி, நடிக்கணும்னு ஆசை இருந்தால் பின்வரும் இ-மெயிலுக்கு போட்டோவையும், விபரங்களையும் அனுப்புங்களேன். E-office@lekhaads.com

Monday, June 22, 2009

ஜூலை 10ல் அச்சமுண்டு அச்சமுண்டு!


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, பிரசன்னா, சினேகா இணைந்து நடித்துள்ள அச்சமுண்டு! அச்சமுண்டு! ஜூலை 10ம் தேதி திரைக்கு வருகிறது.

ஷாங்காய் திரைப்படவிழாவில் ஐந்து முறை திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்றது அச்சமுண்டு! அச்சமுண்டு!.

அமெரிக்காவில் ஏற்கனவே ஒரு விருதைத் தட்டி விட்டது. இப்படி வெளிநாடுகளைக் கலக்கிக் கொண்டிருந்த இப்படம் ஜூலை 10ம் தேதி தமிழகத் திரையரங்குகளை பயமுறுத்த வருகிறது.

ஷாங்காய் விழாவில், சீன மக்கள் படத்தைக் கண்டு களித்ததோடு, இயக்குனர் அருண் வைத்யநாதனுக்குப் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

அச்சமுண்டு அச்சமுண்டு-வை தெலுங்கில் வெளியிடவும் துரிதமாக வேலைகள் நடந்து வருகின்றன. தமிழகம் முழுதும் நூறு சதவிகிதம் டிஜிட்டல் ரிலீஸ் செய்வதாக தயாரிப்பாளர்கள் சார்பாக ஆனந்த் கோவிந்தன் தெரிவித்தார்.

படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் அச்சமுண்டு அச்சமுண்டு குழுவையும், இயக்குனரையும் மனதாரப் பாராட்டி யுஏ சான்றிதழ் வழங்கினர்.

பிரசன்னா, சினேகா இணைந்து நடிக்கும் இந்தப் படத்தில்,எம்மி விருது வாங்கிய ஹாலிவுட் நடிகர் ஜான் ஷே முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதுமுதன் முறையாகும்.

இது இந்தியாவிலேயே முதன் முறையாக ரெட் ஒன் கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டது என்பது மற்றுமொரு சிறப்பு.