Showing posts with label பிரபுதேவா. Show all posts
Showing posts with label பிரபுதேவா. Show all posts

Thursday, July 2, 2009

முழிச்சுகிட்ட மனைவி... மாட்ட பார்த்த பிரபுதேவா!

லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்ட நிறைய சினிமா ஜோடிகளுக்கு இப்போதைய உடனடி தேவை, நாடோடிகள் க்ளைமாக்ஸ்தான் போலிருக்கிறது. ஒரே ஃபிளைட்டில் ஹனிமூனுக்கு போகிற அநேக சினிமா ஜோடிகள், திரும்பி வரும்போது வெவ்வேறு ஃபிளைட்டில் வருவது நம்ம கோடம்பாக்கத்தில்தான்.

பிரகாஷ்ராஜ்-லலிதகுமாரி, ரமலத்-பிரபுதேவா காதல் திருமணம்தான் இப்போது டாப் 10 பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது. நயன்தாராவுடன் லவ். கல்யாணமே முடிந்துவிட்டது என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டாலும், பிரபுதேவாவை விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறாராம் ரமலத். இதற்கு பிரபுதேவாவின் அப்பா டான்ஸ் மாஸ்டர் சுந்தரமும் சப்போர்ட் என்கிறது இன்னொரு தகவல்.

கடந்த வாரம் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் பிரபுதேவா. நிர்வாகத்திடம் சொல்லி, “அப்படியே நயன்தாராவையும் கூப்பிடுங்களேன்” என்றாராம். சேனல் தரப்பிலிருந்து அழைப்பு போனது. வரவும் தயாரானார் நயன்தாரா. எப்படியோ விஷயம் ரமலத்துக்கு தெரியவர, பிரபுதேவா கிளம்பும்போது “நானும் வரேன்” என்று கிளம்பினாராம் ரமலத். அவ்வளவுதான். பயங்கர அதிர்ச்சி பிரபுதேவாவுக்கு.

நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்று நயன்தாராவுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி எஸ்கேப் ஆனாராம் பிரச்சனையிலிருந்து! உஸ்...அப்பாடி!

Monday, June 29, 2009

நயன்தாராவுடன் வருவாரா? பிரபுதேவாவுக்காக காத்திருந்த ரசிகர்கள்!


விஜய் டி.வி அடுத்த பிரபுதேவா யார் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில் முன்னுக்கு வரத்துடிக்கும் இளைஞர்கள் பிரபுதேவா ரேஞ்சுக்கு ஆட்டம் போட்டு வந்தார்கள். முதல் பரிசு பெறும் போட்டியாளருக்கு 10 லட்சம் ரொக்கப் பரிசு! ஐய்யோ சொக்கா... அத்தனை பொற்காசுகளும் எனக்கே கிடைக்கணும் என்ற வெறியோடு ஆடிய போட்டியாளர்கள் வார வாரம் மக்களை மகிழ்வித்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பிரபுதேவா முன்பு ஆடி அவரையும் மகிழ்வித்து பரிசு பெறுகிற நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இந்நிகழ்ச்சி லைவ்வாக விஜய் டி.வி யில் ஒளிபரப்பப்பட்டது. மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரபுதேவா கலந்து கொள்வார் என்று முன்னறிவிப்பு செய்து கொண்டே இருந்தது விஜய். முதல் நாள் செய்தி தாள்களில் துபாயில் நயன்தாராவும், பிரபுதேவாவும் ஜோடியாக ஷாப்பிங் சென்றார்கள் என்றும், அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டார்கள் என்றும் பரபரப்பான செய்திகள் வந்திருந்ததால், இந்த விழாவுக்கும் நயன்தாராவுடன்தான் பிரபுதேவா வருவார் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள்.

ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த விஜய் டி.வி நிகழ்ச்சி ஒன்றுக்கு நயன்தாராவுடன் வந்திருந்த பிரபுதேவா, நிருபர்களின் எல்லையிலிருந்து தொடர்பு கொள்ளாத தூரத்தில் இருந்தபடியே எஸ்கேப் ஆனார். நயன்தாராவும்தான்! இந்த முறை முன்னெச்சரிக்கை போலும். நயன்தாராவை அழைத்துக் கொண்டு வரவே இல்லை. “ஆசை மகன் இறந்து ஆறு மாதம் ஆவதற்குள்ளாகவே காதல் ஆட்டம் போடுகிறாரே” என்று கரித்துக் கொட்டிய மக்கள், மேடையில் தனது மகன் பற்றி பிரபுதேவா பேசி கண் கலங்கிய தானும் கலங்கினார்கள்.

பிரபுதேவா-சிம்பு, விக்ரம், தனுஷ் அதிர்ச்சி


பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு இந்தியாவன் மைக்கேல் ஜாக்சன் எனப் புகழப்படும் பிரபுதேவா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ஜாக்சனின் ஸ்டைலைத்தான் நான் பின்பற்றி வருகிறேன். அவரது மரணம் எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

மைக்கேல் ஜாக்சன் பாணி நடனத்தை இந்தியத் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் பிரபுதேவா. அவரது முக்காலா முகாபுலா நடனம், அப்படியே மைக்கேல் நடனத்தை தழுவியது.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றும் அழைக்கப்பட்டவர் பிரபுதேவா. அவர் ஜாக்சன் மறைவுக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரபுதேவா கூறுகையில், மைக்கேல் ஜாக்சன் புகழ்பெற்ற பெரிய மனிதர், சிறந்த பாடகர், நடன மேதை, இசையமைப்பாளர்.

எனக்கு வழிகாட்டி அவர்தான். அவரது நடன ஸ்டைலைத்தான் நான் பிற்பற்றுகிறேன். அவர் மறைந்த அதிர்ச்சியில் இருந்து நான் மீளவில்லை என்று கூறியுள்ளார் பிரபுதேவா.

இதேபோல நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில உலக புகழ்பெற்ற பிரபல நடனக் கலைஞரும், பாப் இசை பாடகருமான மைக்கேல் ஜாக்சன் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.

பாப் இசையோடு நடனத்தைக் கலந்து பல புதுமைகளை புகுத்தி அழியாத முத்திரை பதித்த ஒரு மாபெரும் கலை பொக்கிஷம். தமிழ் திரையுலகில் பல நடன நடிகர்கள் அவரின் அடிச்சுவட்டை பின்பற்றி புகழடைந்துள்ளனர்.

உலகத்தின் கலை வரலாற்றில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. மாபெரும் கலை வித்தகர்.

மைக்கேல் ஜாக்சனின் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகிறோம் என்று கூறியுள்ளனர்.

நடிகர் விக்ரம் கூறுகையில், ஜாக்சன் மறைந்த அதிர்ச்சி செய்தி கேட்டு வருத்தமுற்றேன். என்னுடைய தலைமுறை அவருடனேயே வளர்ந்தது.

பிராங்க் சினாட்ரா, எல்விஸ் பிரஸ்லி போன்ற மேதைகளைக் காட்டிலும் பிரபலமானவராக, புகழ் பெற்றவராக விளங்கியவர் ஜாக்சன்.

தமிழ், இந்தி திரையுலக நடனங்களிலும் அவரது தாக்கம் அதிகம் என்றார் விக்ரம்.

இதேபோல சிம்பு, தனுஷ் ஆகியோரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

தனுஷ் கூறுகையில் எப்படி நடிகர்களுக்கு புரூஸ்லி முக்கியாக இருந்தாரோ அதேபோல, நடனத்துக்கு மைக்கேல் ஜாக்சன். நமது நடனங்கள் எல்லாமே ஜாக்சனின் ஸ்டைலைத் தழுவியதுதான்.

எனக்கு வழிகாட்டுபவராக அவர் இருந்தார். படிக்காதவன் படத்தில் அவரது ஸ்டைலைப் பின்பற்றி ஆட முயன்றேன். அவர் பெரிய சகாப்தம். அவர் மரணமடைந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை என்றார்.

Wednesday, June 24, 2009

பிரபுதேவா யூடியுப் பென்னி லாவா ஆன கதை

பிரபுதேவா - நயன்தாரா திருமணம் என்று பதிவுலகம் களை கட்ட ஆரம்பித்து இருக்கிறது. ஏ. ஆர். ரஹ்மான் இசைத்துறையில் பரபரப்புடன் வெளிவர ஆரம்பித்த கால கட்டத்தில் அதே பரபரப்புடன் நடன துறையில் வந்தவர் பிரபுதேவா. ஏ. ஆர். ரஹ்மான் இன்று இருக்கும் உயரம் வேறு. ஆனால் பிரபுதேவா இன்று முடங்கியுள்ள இடம் வேறு.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் ஏ. ஆர் ரஹ்மான் இந்தி திரை, உலக இசை இன்று மாபெரும் நதி போல் தன்னை நிலை நிறுத்தி கொண்டார். ஆனால் பிரபுதேவா தமிழ் சினிமா , மொக்கை படங்கள் என்று தன் நடன திறமையை உலக அளவில் கொண்டு செல்லாமல் சிறு குட்டை போல் தேங்கி விட்டார்.

பிரபு தேவா சினிமா என்று தன்னை சுருக்கி இருக்காமல் நடனத்தில் தனி கவனம் செலுத்தி வருடத்திற்கு ஒன்றிரண்டு ஆல்பம் போட்டு இருக்கலாம்.

பிரபுதேவா உண்மையில் திறமைசாலிதானா? உலக அளவில் புகழ் பெறும் அளவிற்கு அவருக்கு திறமை இருக்கிறதா? வெறும் கை கால்களை அசைப்பது மட்டும் நடனம் ஆகி விடாது. நளினமும், குறும்பு, கோமாளித்தனங்களுடன் செய்யும் அசைவுகளே விருப்பமான நடனமாக மக்களிடம் கொண்டு சென்று இருக்கிறது. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல. உலக அளவிலும் ரசிக்கப்படும் விசயமாகவே இருக்கிறது.

இதற்கு உதாரணமாக ஒரு பாட்டு வீடியோ உலக அளவில் அதிகம் பார்க்கப்படும் யூடுப் தளத்தில் மிக பிரபலம் ஆகி உள்ளது. அது 'பெண்ணின் மனதை தொட்டு' படத்தில் பிரபுதேவா ஆட்டத்தில் இடம் பெற்ற 'கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ' பாடல்தான். இன்று வரை 12 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அந்த பாடலை பார்த்து ரசித்து உள்ளனர்.

வீடியோ : 12 கோடிக்கும் மேல பார்வையிடப்பட்டுள்ள வீடியோ

Popout

பார்த்து ரசிக்கும் சில வெளிநாட்டவர் "Funny" , "கோமாளி" இன்று பின்னூட்டத்தில் சொன்னாலும் மீண்டும் மீண்டும் அந்த பாடலை பார்த்து ரசிக்கிறார்கள் என்பது உண்மை. அந்த பாடலில் பிரபுதேவாவிடம் உள்ள ஏதோ ஒன்று அவர்களை கவர்ந்து விட்டது என்பது மறுக்க முடியாது. பிரபு தேவா அவர்களால் ரசிக்க பட கூடிய ஒருவராகி விட்டார்.

இதை விட வியப்பான விஷயம் என்னவென்றால் அந்த பாடல் போன்று அவர் நடன அசைவுகளை காப்பி அடித்து ரீமிக்ஸ் வீடியோக்கள் யூடுபில் நூற்று கணக்கில் பட்டையை கிளப்புகின்றன. உதாரணத்திற்கு சில வீடியோக்களை பாருங்கள்.

வீடியோ 1 : கிரேசி இந்தியன் வீடியோ மைமோ ஸ்டைல்

Popout


வீடியோ 2 : பென்னி லாவா ரீமிக்ஸ்

Popout


வீடியோ 3 : மெக்கைன் அன்ட் பாலின் கிரேசி இந்தியன் டான்ஸ் பீஸ்ட்

Popout



Benny Lava இன்று யூடுபில் தேடி பாருங்கள் . அவருக்கு உள்ள புகழ் உங்களுக்கு தெரியும். யூடுபில் அவர் பெயர் "Benny Lava" . "கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ" பாடலின் "காய்ந்த நிலாவோ" என்ற வார்த்தைகளை எடுத்து கொண்டு பிரபுதேவாவுக்கு பென்னி லாவா என்று பெயர் சூட்டி விட்டார்கள்.

போகிற போக்கில் வெளிநாடுகளில் நீங்கள் எந்த ஊரு இன்று யாரும் கேட்டால் தமிழ் நாடு என்று சொல்லுவதற்கு பதிலாக பென்னி லாவாவோட ஊரு என்று சொன்னால் எளிதில் புரிந்து கொள்வார்கள் போல.

நான் முன்பு கூறியது போல பிரபு தேவா சினிமா என்று மட்டும் இராமல் நடனத்தில் முழு கவனம் செலுத்தி ஆல்பம் வெளியிட்டால் உலக அளவில் நல்ல இடத்தை சென்றடைய வாய்ப்புண்டு.