Monday, June 29, 2009

நயன்தாராவுடன் வருவாரா? பிரபுதேவாவுக்காக காத்திருந்த ரசிகர்கள்!


விஜய் டி.வி அடுத்த பிரபுதேவா யார் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில் முன்னுக்கு வரத்துடிக்கும் இளைஞர்கள் பிரபுதேவா ரேஞ்சுக்கு ஆட்டம் போட்டு வந்தார்கள். முதல் பரிசு பெறும் போட்டியாளருக்கு 10 லட்சம் ரொக்கப் பரிசு! ஐய்யோ சொக்கா... அத்தனை பொற்காசுகளும் எனக்கே கிடைக்கணும் என்ற வெறியோடு ஆடிய போட்டியாளர்கள் வார வாரம் மக்களை மகிழ்வித்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பிரபுதேவா முன்பு ஆடி அவரையும் மகிழ்வித்து பரிசு பெறுகிற நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இந்நிகழ்ச்சி லைவ்வாக விஜய் டி.வி யில் ஒளிபரப்பப்பட்டது. மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரபுதேவா கலந்து கொள்வார் என்று முன்னறிவிப்பு செய்து கொண்டே இருந்தது விஜய். முதல் நாள் செய்தி தாள்களில் துபாயில் நயன்தாராவும், பிரபுதேவாவும் ஜோடியாக ஷாப்பிங் சென்றார்கள் என்றும், அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டார்கள் என்றும் பரபரப்பான செய்திகள் வந்திருந்ததால், இந்த விழாவுக்கும் நயன்தாராவுடன்தான் பிரபுதேவா வருவார் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள்.

ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த விஜய் டி.வி நிகழ்ச்சி ஒன்றுக்கு நயன்தாராவுடன் வந்திருந்த பிரபுதேவா, நிருபர்களின் எல்லையிலிருந்து தொடர்பு கொள்ளாத தூரத்தில் இருந்தபடியே எஸ்கேப் ஆனார். நயன்தாராவும்தான்! இந்த முறை முன்னெச்சரிக்கை போலும். நயன்தாராவை அழைத்துக் கொண்டு வரவே இல்லை. “ஆசை மகன் இறந்து ஆறு மாதம் ஆவதற்குள்ளாகவே காதல் ஆட்டம் போடுகிறாரே” என்று கரித்துக் கொட்டிய மக்கள், மேடையில் தனது மகன் பற்றி பிரபுதேவா பேசி கண் கலங்கிய தானும் கலங்கினார்கள்.

No comments:

Post a Comment