தருண்கோபி கதாநாயகனாக நடித்த மாயாண்டி குடும்பத்தார் படத்தை இயக் கியவர் ராசுமதுரவன். அப் படம் வெற்றிகரமாக ஓடும் சந்தோஷத்தில் இருக்கிறார். அடுத்து “கோரிப்பாளையம்” என்ற படத்தை இயக்குகிறார். இது பற்றி அவர் கூறியதாவது:-
குடும்ப உறவுகளில் உள்ள சிக்கல்களையும், பாச உணர்வுகளையும் மையப்படுத்தி மாயாண்டி குடும்பத்தார் படத்தை எடுத்தேன். அனைத்து தரப்பினர் மத்தியில் அப்படம் அமோக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடுகிறது. ஆயிரக்கணக்கானோர் படத்தை பாராட்டி கடிதங்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒவ் வொரு வரும் தங்கள் வீடுகளில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதாக தெரிவித்துள்ளனர்.
கதை தான் ஹீரோ. பெரிய கதாநாயகர்கள் கதையை நம்ப வேண்டும் இயக்குனர்களை சுதந்திரமாக படங்கள் எடுக்க விட வேண்டும். கதாநாயகர்கள் தலையிட்டு கதையை மாற்றினால் படம் அடிபட்டு போகும். தருண்கோபி இப்படத்தில் அழுது சிறப்பாக நடித்தார். பெரிய ஹீரோக்கள் இது போன்று கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க மறுக்கிறார்கள். அந்த நிலைமை மாற வேண்டும். அடுத்து “கோரிப்பாளையம்” படத்தை இயக்குகிறேன். யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. வைகை ஆற்று மேம்பாலத்திலும் அதன் அடியிலும் நடைபெறும் சம்பவங்களே இப்படத்தின் கதை. ஆபாசம், வன்முறை இருக்காது. ஒரு இளைஞன் சந்திக்கும் சிறிய சம்பவம் அவன் வாழ்க்கையை எப்படி திருப்பி போடுகிறது என்பதே கதை.
சிம்பு, விஷாலை தருண் கோபி, விமர்சித்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. இனிமேல் அவர்களை பற்றி பேச வேண்டாம் என்று அவரிடம் கூறியுள்ளேன்.
இவ்வாறு ராசுமதுரவன் கூறினார்.
No comments:
Post a Comment