கவிதாலயா தயாரிப்பில் ஜீவன் நடிக்கும் படம், கிருஷ்ணலீலை. படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ஸெல்வன் படத்தை இயக்கியிருக்கிறார்.
ஜீவனின் ப்ளேபாய் இமேஜை மாற்றுவதாக கிருஷ்ணலீலை இருக்கும் என்றார் ஸெல்வன். தனது தாயின் சபதத்தை நிறைவேற்றுகிறவராக இதில் நடித்திருக்கிறார் ஜீவன்.
கலெக்டர் அலுவலகம் அருகில் டீக்கடை வைத்திருப்பவர் ஜீவனின் தாய். கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் மனுக்கள் பொட்டலம் கட்ட ஜீவனின் தாயின் கடைக்கு வருகிறது. இது சிறுவனான ஜீவனை உறுத்துகிறது. மனுக்களை எடுத்துக் கொண்டு கலெக்டர் அலுவலம் செல்கிறார் ஜீவன். இது பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
கோபமாகும் கலெக்டா, ஜீவனின் தாயின் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்துகிறார். காயப்படும் அந்த தாய், என்னுடைய மகனையும் கலெக்டராக்கி இந்த அநியாயங்களை தட்டி கேட்பேன் என்கிறார். அதன்படி ஜீவனை படிக்க வைத்து கலெக்டராக்குகிறார். கலெக்டராகும் ஜீவன் அநியாயங்களை தட்டிக் கேட்பார் என நீங்களே ஒரு ஸ்கிரின்ப்ளே எழுதினால் ஏமாந்தீர்கள்.
மாவட்ட ஆட்சியாளராவார் என்று எதிர்பார்த்த ஜீவன் ஆக்டராகிறார். நடிகராக இருந்து கொண்டே அவர் தாயின் சபதத்தை எப்படி நிறைவேற்றுகிறார், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை விறுவிறுப்பாக சொல்கிறது கிருஷ்ணலீலை.
படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.
No comments:
Post a Comment