Monday, June 29, 2009

மச்சக்காளையை மடக்கிப் போட்ட காஜல்!


த்ரிஷா, ஸ்ரேயா, நயன்தாரா நடிக்கிற தெலுங்கு படங்களை சைலண்ட்டாக தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கு கதைக்காகவும், ஹீரோவுக்காகவும் ஓடிய படங்கள் இங்கு சதைக்காகவே ரசிக்கப்படுகின்றன என்பது சொல்லாமலே புரியும். சென்னையை தாண்டி இந்த ஜிகினா சுந்தரிகளின் ஆட்டத்தை காண தவியாய் தவிக்கிற ரசிகர்கள், டப்பிங் பட பாகுபாடில்லாமல் கலெக்ஷனை கொட்டுவதால் அந்த ஏரியாவுலேயும் இப்போது பரபரப்பு.

மேற்படி தங்க தாரகைகளை தொடர்ந்து பிட்டு பட நாயகி லெவலுக்கு டூ பீஸ் தரிசனம் தர வந்திருக்கிறார் ப்ரியாமணி. இவரது படங்களையும் டப்பிங் செய்து வெளியிட்டு வருகிறார்கள். இப்போது லேட்டஸ்டாக அதில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். இன்னொரு ஜோதிகா என்று இவர் வந்த புதிதில் வர்ணித்த பத்திரிகைகள், ஒரு படம் கூட ஓடாமல் போனாலும், தனது வர்ணிப்பை நிறுத்தவில்லை.

இதற்கு முன்பு வந்த தனது படங்கள் மண்ணை கவ்வினாலும், வரப்போகும் படமான மோதி விளையாடு தனக்கு வெற்றியை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது காஜலுக்கு. எதற்கும் இருக்கட்டும் என்று, தெலுங்கிலும் தனது பெரிய கண்களை அலையவிட்டு வாய்ப்புகளை தேடிக் கொண்டார். அங்குள்ள முன்னணி இயக்குனர் தேஜா இயக்கிய படம் ஒன்றில் இவர்தான் முழுநீள நாயகி. (ள உச்சரிப்பு முக்கியம்)

நல்ல வெயிட்டான கதையில் காஜலின் கவர்ச்சிக்கும் ஒரு வெயிட் இருப்பதால், இந்த படத்தை டப்பிங் லிஸ்ட்டில் வைத்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்கள். தமிழில் மச்சக்காளை என்ற பெயரில் வரப்போகிறதாம். ஜொள்ளாபிஷேகத்திற்கு ரசிகர்கள் தயாராகலாம்.

No comments:

Post a Comment