மாப்பிள்ளையே தேடாம மகள் கல்யாணத்துக்கு பெரிய பந்தல் போட்ட பந்தா கதையாகிவிட்டது பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் நிலை.
சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்சினிமாவில் நுற்றுக் கணக்கான கோடி ரூபாய்களை முதலீடு செய்வதாக கூறி களமிறங்கியதுதான் பிரமிட் சாய்மீரா நிறுவனம். இதன் தலைவராக செயல்பட்டார் சாமிநாதன். ‘குசேலன்’ உள்ளிட்ட சில படங்களையும் வெளியிட்டுள்ள இந்நிறுவனம் வாங்கி வெளியிட்ட எந்த படங்களும் லாபம் தரவில்லை.
தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களை லீசுக்கு எடுத்து நடத்தப்போவதாக அறிவித்த இந்நிறுவனம் அதில் பார்த்தது நட்ட கணக்கைத்தான். ஒரே நேரத்தில் 10 படங்களை தயாரிக்கப்போவதாக காலரை தூக்கிவிட்டுக்கொண்ட இந்நிறுவனம், சில ரீல்களுடன் அந்த படங்களை நிறுத்திவிட்டது. கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்போவதாக சொன்ன ‘மர்மயோகி’யும் அறிவிப்போடு நின்றுபோனது.
இப்படி கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் அடுத்தடுத்த சரிவுகளை சந்தித்த இந்நிறுவனத்தின் தலைவர் சாமிநாதன் நேற்று திடீரென கைது செய்யப்பட்டார். அரியானாவில் உள்ள இந்தியா பூல்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய கடனுக்காக இவர் அனுப்பிய காசோலை திரும்பிவந்ததால் கோர்ட்டில் ஆஜராக சொல்லி பலமுறை நோட்டிஸ் அனுப்பியும் சாமிநாதன் அதனை கண்டுகொள்ளாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. கைதான சாமிநாதன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
‘மர்மயோகி’ படத்துக்காக கமலிடம் கொடுத்த அட்வான்ஸ் தொகை கிடைத்தாலே ஒரளவு கடன் பிரச்சனையிலிருந்து சாமிநாதன் மீளமுடியும் என்கின்றனர் சிலர். ஒருவேளை கமல் அட்வான்ஸ்யை திருப்பிக்கொடுத்தால் அரியானா நிறுவன கடனை அடைத்துவிடுவாராம் சாமிநாதன்.
No comments:
Post a Comment