ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கும் “சுல்தான்” அனிமேஷன் பட வேலைகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. நவீன தொழில்நுட்பத்தில் தயாராகிறது. ரஜினி நடிக்கும் காட்சிகள் ஐதராபாத் பிலிம் சிட்டியில் சமீபத்தில் படமாக்கப்பட்டன.
ரஜினி ஜோடியாக விஜயலட்சுமி நடிக்கும் காட்சிகளும் எடுக்கப்பட்டன.
மெகா பட்ஜெட்டில் தயாராகுகிறது. இப்படம் குறித்து சவுந்தர்யா கூறியதா வது:-
ஓவியங்கள் மற்றும் கார்ட்டூன் படங்கள் மீது எனக்கு எப்போதுமே ஈடுபாடு உண்டு. எனவே தான் அனிமேஷன் துறையை தேர்ந்தெடுத்தேன். அதற்கு என் தந்தை ரஜினியும் பச்சைக்கொடி காட்டினார்.
அனிமேஷன் துறைக்கு இந்தியாவில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. வேலை வாய்ப்பை பொறுத்த வரை கிரியேட்டிங் துறையை விட டெக்னிக் துறையில் பத்து மடங்கு அதிகம் உள்ளன. இந்ததுறையில் ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிக்க “ஸ்கூல் ஆப் தாட்ஸ்” என்ற அமைப்பை துவக்குகிறேன். இதன் மூலம் திறமையானவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
“சுல்தான்” அனிமேஷன் பட இறுதிகட்ட வேலைகள் நடக்கின்றன. தொழில்நுட்ப வகையில் இப்படம் பிரமாண்டமாக இருக்கும். ரஜினி படத்துக்கு உரிய அனைத்து அம்சங்களும் இதில் இடம்பெறும்.
ரஜினி ஸ்டைல், “பஞ்ச்” வசனங்கள், சண்டைக் காட்சிகள், காதல் எல்லாம் சுல்தானில் உணடு. கமர்ஷியல் படமாக உருவாக்குகிறோம்.
சுல்தான் நிச்சயம் தரமாகவும் துல்லியமாகவும் இருக்கும். சுல்தான் கண்டிப்பாக ஒரு புதிய அத்தியாயத்தை படைக்கும். அந்த இலக்கை நோக்கி எல்லோரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
எந்திரனுடன் சுல்தான் படம் மோதுவதற்கான வாய்ப்பு இல்லை. இரண்டும் வேறுவேறு. இருபடங்களையும் என் தந்தை கவுர மாக கருதுகிறார்.
No comments:
Post a Comment