விக்ரம் நடிக்கும் அடுத்தடுத்த இரு படங்களுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். எந்த ஒரு நடிகருக்கும் அரிதாக அமையும் வாய்ப்பு இது.
ஆஸ்கர் அளவுக்கு உயர்ந்தாலும் நேரம் ஒதுக்கி தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். மணிரத்னத்தின் ராவண், ஷங்கரின் எந்திரன், கவுதமின் விண்ணைத்தாண்டி வருவாயா, சென்னையில் ஒரு மழைக்காலம் என்று நீள்கிறது ரஹ்மான் இசையமைக்கும் படங்களின் பட்டியல்.
ராவண் படத்தின் இந்தி மற்றும் தமிழ் பதிப்புகளில் விக்ரம் நடித்து வருவது தெரியும்;. இதனை அடுத்து மோகன் நடராஜன் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
ஆதவன் படத்துக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். ஹீரோயின் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. படத்துக்கு நல்ல தமிழ்ப் பெயராக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment