Showing posts with label பாக்யராஜ். Show all posts
Showing posts with label பாக்யராஜ். Show all posts

Monday, June 29, 2009

சட்டமன்ற இடைத்தேர்தலில் எம்.எல்.ஏ ஆகிறார் பாக்யராஜ்?


சக்கரக்கட்டி, அவ்வளவு இனிப்பாக இல்லாமல் போனதில் ஜுனியர் முருங்கைக்காய்க்கு வருத்தம். சாந்த(னு) சொரூப கேரக்டரில் நடிக்காமல் அதிரடி ஆக்ஷனில் நடிக்கலாமா என்கிற அளவுக்கு குழம்பிப் போயிருந்தவரை, தனது மோதிர கையால் குட்ட முடிவெடுத்தார் பாக்யராஜ். புதிய வார்ப்புகள் என்ற லவ் ஸ்டோரியை எழுதி, சாந்தனுவை அதில் நடிக்க வைத்தார்.

கண்ணும் காதும் வைத்த மாதிரி முழு படமும் முடிந்தேவிட்டது. இதற்கிடையில் சாந்தனுவை பார்க்கிற நண்பர்கள், இது பழைய புதிய வார்ப்புகள் படத்தின் ரீமேக்தானே என்று கேட்டதால் படத்தின் பெயரை மாற்றலாமா என்ற முடிவுக்கு வந்தார்கள் அப்பாவும் பிள்ளையும். அப்படியே இளமையும், குறும்பும் கொப்பளிக்கிற மாதிரி டைட்டில் வேண்டும் என்ற முடிவில் இருந்தவருக்கு வெல்லக்கட்டியாக கிடைத்த தலைப்புதான் இது.

சித்து ப்ளஸ் ஒன்! சப் டைட்டில் ஃபர்ஸ்ட் அட்டம்ட்! இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக மும்பை முகங்களை பிடிக்காமல் உள்ளூர் தேவதை ஒருவரை நடிக்க வைத்திருக்கிறார் பாக்யராஜ். இவர் எத்திராஜ் கல்லூரியில் படித்து வருகிறாராம். ஆகஸ்ட்டில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள். பி.எஸ்.தரண் இசையில் இளமை கொஞ்சுகிறதாம் எல்லா பாடல்களிலும். இவரை இன்னொரு யுவன் என்று கொண்டாடுகிறது தமிழ் திரையுலகம். படம் நன்றாக வந்திருக்கிற சந்தோஷங்கள் ஒருபுறம் இருக்க, இன்னொரு மகிழ்ச்சியும் திரைக்கதை திலகத்தின் கதவை தட்டியிருக்கிறதாம்.

வருகிற சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் திமுக சார்பாக நிற்க வைக்கப்படுவாராம். ஆஹா...ஓஹோ...

Tuesday, June 23, 2009

நம்ம நிலைமையில, நம்ம நடிகர்கள்- ஒரு கற்பனை!

நடிகர்கள் எல்லாம் நம்மல மாதிரி கம்பெனி வேலை செஞ்சி, அவங்களுக்கும் Recession, Cost Cuttingனு நிலைமை வந்தா...அவங்க எல்லாம் எப்படி react பண்ணுவாங்கன்னு ஒரு கற்பனை : )

ரஜினிகாந்த்(பாபா): கண்ணா...இங்கப் பாரு.....ஒரு காரணமும் சொல்லாம, நம்ம factoryல வேலை செஞ்ச, 25 பேர வேலையை விட்டு தூக்கி இருக்கீங்க...அவங்க எல்லாரையும் உடனடியா..இப்போ..இப்போவே.. வேலைக்கு சேத்துக்கனும். (உஸ்க்.............பாபா கத்தியை எடுத்து வீசுறார்..)10 வரைக்கும் எண்ணுவேன். அதுக்குள்ள கத்திய எடுத்தா சண்டை, எடுக்கலணணா...சமாதானமா எல்லோருக்கும் வேலை...பாபா counting starts...1..2..3......10. ஹா ஹா ஹா....

பாக்யராஜ்(அந்த 7 நாட்கள்): சாரே, என்ன தான் cost cuttingனு சொன்னாலும், பாத்ரூம்ல, டிஷ்யூ பேப்பர்க்கு பதிலா, நியூஸ் பேப்பர் வைக்குறது சரி இல்ல சாரே. டிஷ்யூ பேப்பர்ல எழுதி நியூஸ் போடலாம் சாரே, பட்சே நியூஸ் பேப்பர் டிஷ்யூ பேப்பரா ஆகாது சாரே ! இதுக்கு ஈப்பாலாக்காட்டு மாதவன் சம்மதிக்கில்யா சாரே!

சிவாஜி கணேசன்: ஏன் பா...என்னப்பா இப்படி பண்ணிட்டீங்க...செலவ குறைக்கிறேன்னு சொல்லி மானிடரையும், கீபோர்டையும் மட்டும் வச்சிட்டு, CPU வ எடுத்துட்டு போய்ட்டீங்களே பா! CPU இல்லாம, நான் என்னப்பா பண்ணுவேன்.....


விஜய்காந்த் : ஆங்கிலத்துல எனக்கு பிடிக்காத வார்த்தை Lay Off !நம்ம கம்பெனியோட மொத்த சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய், முதலாளியோட தனிப்பட்ட சொத்தோட மதிப்பு மட்டும் 32 கோடியே 23 லட்சத்து 87 ஆயிரத்து 238 ரூபாய். நம்ம கம்பெனில வேலை பாக்குறது மொத்தம் 200 பேர், அவங்களோட சம்பள செலவு வருஷத்துக்கு 3 கோடியே 60 லட்சத்து 76 ஆயிரத்து 33 ரூபாய். மொத்த இருக்கிற 200 பேருக்கும் அடுத்த 25 வருஷத்துக்கும் சம்பளம் கொடுக்குற அளவுக்கு பணம் இருக்கும் போது, எதுக்குய்யா Layoff?

கமலஹாசன்: மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் கம்பெனி அல்ல...அதையும் தாண்டி மோசமானது. செலவ...செலவ கம்மி பண்றேன்னு சொல்லி, எங்க டிபார்ட்மெண்டுக்கு தினமும் வர டீ கூட கட் பண்ணிட்டாங்களே......ஆ..ஆ....அபிராமி அபிராமி(இதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க விட்றுங்க...அப்டின்னு சொல்றாங்க நண்பர்கள்)

வேலையே இல்லாம சும்மா இருக்கவனுக்கு எல்லாம் டீ கொடுக்குறாங்களே...அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்...

இனிமே அக்கவுண்ட்ல டீ கிடையாதுன்னு சொன்னானே டீ கடைக்காரர் ...அவன நிறுத்த சொல்லு..நான் நிறுத்துறேன்...

எம் ஜி ஆர்: ஐயோ....என்னால முடியலியே அம்மா.. என்ன கொடுமை இது.....ஆபீஸ்ல ஓரளவுக்கு சுமார இருந்த ரிசப்சனிஸ்டயும், cost cuttingனு அனுப்பிட்டாங்களே ! முடியாது...முடியாது...இதை மட்டும் என்னால தாங்கிக்கவே முடியாது...!

விஜய் : அண்ணா, வணக்கங்க்ணா....அதென்னங்க்ணா காஸ்ட் கட்டிங்க்...ஸ்டெப் கட்டிங்க், மிலிடரி கட்டிங்க், போலீஸ் கட்டிங்க் ஏங்கண்ணா..ஒயின் ஷாப்ல ரம் கட்டிங்க் கூட கேள்வி பட்டு இருக்கெங்க்ணா...இதென்னங்க்ணா புதுசா காஸ்ட் கட்டிங்க்..ஆனா ஒண்ணு மட்டும் சொல்லிக்குறேங்க்ணா... ஒரு தடவை நான் ஒரு விஷயத்தை முடிவு பண்ணிட்டா..அதுக்கப்புறம் என் பேச்சை நானே கேக்க மாட்டேங்கண்ணா...

வினு சக்ரவர்த்தி : என்ன எழவு டா இது, கருமாந்திரம்....பைசாவை சேமிக்குறேன்னு சொல்லி, எந்த பரதேசி டா ஏசி ய ஆப் பண்றது....

தேவயானி(கோலங்கள்): இல்லைங்க தொல்ஸ்...என்னால முடிஞ்சத நான் செஞ்சிட்டு தான் இருக்கேன் தொல்ஸ் ...ஆனா இந்த ஆதி தான் workers கிட்ட குழப்பத்தை உண்டாக்க try பண்றான்!