Monday, November 4, 2013

‘மேக்கப் ரூமில்’ நடிகையை மிரட்டி கற்பழித்த புரொடக்‌ஷன் மேனேஜர் மும்பையில் கைது!


மும்பை போனவப் பகுதியில் உள்ள காதர்சிங் ஸ்டூடியோவில் கடந்த மாதம் தொலைக்காட்சி தொடர் ஒன்றுக்கான படப்பிடிப்பு நடந்தது. அதில் பங்கேற்ற 28 வயது நடிகை ஒருவர் தன்னை தொடர் தயாரிப்பு நிர்வாகிகளில் ஒருவர் மிரட்டி கற்பழித்துவிட்டதாக போனவ போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
புகார் மனுவில் அந்த நடிகை கூறி இருப்பதாவது:-
கடந்த மாதம் 2-ந்தேதி அந்த தயாரிப்பு நிர்வாகி அதிகாலை 6.30 மணிக்கு போன் செய்தார். 7.45 மணிக்கு ஷூட்டிங் உள்ளது என்றார். உடனே நான் புறப்பட்டு சென்றேன். 2-ம் நம்பர் மேக்கப் அறைக்குள் சென்று நான் உடை மாற்றி கொண்டிருந்தேன். அப்போது அந்த அறைக்குள் நுழைந்த தயாரிப்பு நிர்வாகி என்னை சிறிய அறைக்குள் அடைத்து மிரட்டி கற்பழித்தார்.
இதை வெளியில் சொன்னால் என் மகளை கொன்று விடுவதாக மிரட்டினார். அவரது மிரட்டல் நீடித்ததால் இப்போது புகார் செய்கிறேன். இவ்வாறு அந்த நடிகை கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த தயாரிப்பு நிர்வாகியை காவல்துறை சீனியர் இன்ஸ்பெக்டர் போஜிராவ் போஸ்லே கைது செய்தார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 342, 376, 506 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே தன் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டை அந்த தயாரிப்பு நிர்வாகி மறுத்துள்ளார். விளம்பரத்துக்காக அந்த நடிகை பொய் சொல்வதாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment