திருக்குறளின் வாழ்வியல் நெறிகளையும், திருவள்ளுவரின் வரலாற்றையம் உலகம் முழுவதும் பரப்ப தமிழ் படைப்பாளிகள் முன் வர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
திருக்குறள் நெறிகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய படைப்பாளிகள் முன்வர வேண்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தெரிவித்தார்.
காண்டீபன் என்ற பெயரில் எழுதி வரும் ஜகன்மோகன் ஐஏஎஸ் எழுதிய கங்கை கொண்ட செம்மொழி என்ற நூல் வெளியிட்டு விழா சென்னை ஆளுனர் மாளிகையில் நேற்று நடந்தது. விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கொண்டார்.
கவிஞர் வைரமுத்து நூலை வெளியிட அதன் முதல் பிரதியை அப்துல் கலாம் பெற்று கொண்டார். விழாவில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒளவை நடராஜன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பேசினர்.
கலாம் பேசுகையில்,
நாம் பல்வேறு பெரும் புலவர்களின், எழுத்தாளர்களின் படைப்புகளை படித்துள்ளோம். என்றாலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக திருவள்ளுவர் அருளிய திருக்குறளில் இருக்கும் 1,330 குறள்களில் இல்லாத கருத்துக்கள் எதுவும் இல்லை. அவரது இலக்கிய பணி மகத்தானது. ஈடு இணையற்றது.
மாபெரும் சிறப்புகள் வாய்ந்த திருக்குறள் காட்டும் நெறிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரையும் சென்று சேர வேண்டும்.
சமுதாய முன்னேற்றத்துக்கு திருக்குறள் காட்டும் வாழ்கை முறையையும், வாழ்வியல் நெறிகளையும் அவரது வரலாற்றையும் உலகம் முழுவதும் பரவ செய்ய தமிழ் இலக்கிய படைப்பாளிகள் முன்வர வேண்டும் என்றார் அப்துல் கலாம்.
கலாம் வாழும் வரை நம்பிக்கை வாழும்...
விழாவில் வைரமுத்து பேசுகையில்,
இந்தியாவுக்கு வெளியிலும் நாட்டின் மனித அடையாளமாகத் திகழ்பவர் அப்துல் கலாம். அரசியலையும் கடந்து ஜனாதிபதியாக விளங்கினார். அவரால் நமது இளைய சமுதாயம் புத்துணர்வு பெற்றது. கலாம் வாழும் வரை நம்பிக்கையும் வாழும்.
இந்தி மொழியில் வேரூன்றியுள்ள தமிழ்ச் சொற்களை திறனாய்வு செய்து 'கங்கை கொண்ட செம்மொழி' நூலில், நூலாசிரியர் நிறுவியுள்ளார்.
வாணிபம், கலை, படையெடுப்பு உள்ளிட்ட காரணங்களால் ஒரு மொழி மற்றொரு மொழியுடன் கலந்து உறவாடுகிறது.
உலக மயமாக்கலால் சமூகங்களிடையேயும், நாடுகளிடையேயும் வணிகத்திலும் நெருக்கம் ஏற்படுகிறது. இது குறித்து சமூக விஞ்ஞானக் கருத்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
தமிழ் நிலைத்து நிற்கும்...
உலகமயமாக்கலின் விளைவுகளால் நமது மாறுபாடுகள் தூக்கி வீசப்படும். பண்பாடுகள் சிதையும். சின்னச் சின்ன மொழிகளும் அழிந்து போகும்.
ஆனால், தமிழ், ஆங்கிலம், இந்தி, சீனம், அரபி, ஸ்பானிஷ் உள்ளிட்ட 6 மொழிகள் மட்டுமே நிலைத்து நிற்கும். இம் மொழிகளில் மட்டுமே, அழிக்க முடியாத வேர்ச்சொற்கள் நிறைந்துள்ளதே இதற்குக் காரணமாகும்.
ஒரு மொழியை மற்றொரு மொழி மற்றும் தேசிய இனங்கள் அங்கீகரிக்க வேண்டும். எந்த ஒரு மொழியையும் அரசுதான் காப்பாற்ற வேண்டும். இதற்கு அடுத்தபடியாக மொழியைக் காக்க, ஆசிரியர்கள், படைப்பாளிகள், இதழியலாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இல்லையெனில் எந்த ஒரு தேசிய மொழியும் நிலைக்க முடியாது என்றார் வைரமுத்து.
Showing posts with label படைப்பாளி. Show all posts
Showing posts with label படைப்பாளி. Show all posts
Tuesday, June 23, 2009
Monday, June 22, 2009
சென்னை..30 குறும்படம் எடுக்கும் கமல்!

பெரும் படங்களுக்கு தற்காலிக விடை கொடுத்து குறும்படங்கள் தயாரிக்கப் போகிறார் கமல்ஹாசன்.சென்னை மாநகரைப் பற்றி பலவித கோணங்களில் பல படைப்பாளிகளின் பார்வைகளைப் பதிவு செய்யும் பொருட்டு 30 குறும்படங்களைத் தயாரிக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
சமீபத்தில் சென்னை ஐஐடியுடன் இணைந்து திரைக்கதை பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தினார் நடிகர் கமல்ஹாசன்.இந்தப் பட்டறையில் 250 இளம் படைப்பாளிகள் மற்றும் துணை இயக்குநர்கள் பங்கேற்றனர். ஒரு வார கால பயிற்சியின் நிறைவில், படைப்பாளிகள் இனி குறும்படங்களை எடுத்து அவற்றை வெளியிட யு ட்யூப் போன்ற வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.
அதை நடைமுறைப்படுத்தும் வகையில் இப்போது புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் கமல். சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பிரான்ஸின் பிரபல திரைப்பட இயக்குநரும், சிறந்த திரைக்கதைக்காக ஆஸ்கர் விருது பெற்றவருமான ஜீன் க்ளாட் கேரியருடன் கலந்து கொண்ட கமல், தனது திட்டம் குறித்து கூறியதாவது:
சென்னை நகரம் அன்றைக்கும் இன்றைக்கும் பல செய்திகளைச் சொல்லும் விஷயமாகவே எனக்குப் படுகிறது.
முன்பு சென்னையில் எடுக்கப்பட்ட படங்களைப் பார்க்கும் போதெல்லாம் மனதுக்குள் பல நினைவுகள் வந்து போகின்றன. முன்பு அண்ணாசாலையில் ஸ்பென்ஸர் பிளாஸா (பழைய கட்டிடம்), ஹிக்கின் பாதம்ஸ் என சுதந்திரமாக நடந்தே செல்ல முடியும். ஆனால் இனி அது சாத்தியமா என்று தெரியவில்லை. அவ்வளவு மாற்றங்களை இந்த நகரம் சந்தித்துள்ளது.
இந்த குறும்பட முயற்சி வெறும் வணிக நோக்கத்தில் எடுக்கப்படுவதல்ல. அதேபோல பல பெரிய, சிறிய இயக்குநர்களின் பங்களிப்பும் உள்ளது. ஹரிஹரன், சேகர் குப்தா போன்ற ஜாம்பவான் இயக்குநர்களும், என்னைப் போன்ற சிறிய இயக்குநர்களும் இந்த குறும்படங்களை உருவாக்கவிருக்கிறோம்.
மேலும் எங்கள் பயிற்சிப் பட்டறைக்கு வந்த 250 பேரில் 60 பேரைத் தேர்வுசெய்து, அவர்களில் 30 பேரை இறுதி செய்து இந்த குறும்படங்கள் இயக்கும் வாய்ப்பைத் தந்துள்ளோம்.
இந்தப் படங்களைத் தயாரிக்கவே ராஜ்கமல் குறும்பட தயாரிப்புப் பிரிவையும் துவக்கியுள்ளோம், என்றார் கமல்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரெஞ்ச் இயக்குநர் ஜீன் கிளாட் கேரியர் கூறுகையில், இந்தியா என்றாலே அதன் தென் மாநிலங்கள்தான் கலாச்சார சிறப்பில் முதலிடத்தில் நிற்கின்றன. குறிப்பாக சென்னை மறக்கமுடியாத அற்புதமான நகரம். இந்த நகரம்தான் பல கலாச்சார சிறப்பு மிக்க கலைகளின் பிறப்பிடமாக இருந்துள்ளது. இந்த சிறப்பான நகரம் பற்றிய அழுத்தமான பதிவுகளாக இந்த 10 நிமிட குறும்படங்கள் அமையும், என்றார்.
கமல்ஹாசனின் லட்சியப் படமான மருதநாயகத்தின் திரைக்கதை வடிவமைப்பில் பெரும் உதவி புரிந்தவர் ஜீன் கிளாட் கேரியர் என்பது நினைவிருக்கலாம்.
வகைகள்:
ஆஸ்கர்,
கமல்,
குறும்படம்,
சென்னை,
சேகர் குப்தா,
படைப்பாளி,
ஹரிஹரன்
Subscribe to:
Posts (Atom)