Monday, November 4, 2013
அதிக செக்ஸ் உயிரையும் குடிக்குமாம்…! எப்படின்னு பாக்கலாமா?
எதுவுமே அளவோட இருந்தாதான் நல்லதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. ஆனா செக்ஸ் மட்டும் உடல் ஆரோக்கியம் இடம் கொடுக்கும்வரை வச்சுக்கலாம்னு மருத்துவர்கள் சொல்றாங்க.
ஆனா உண்ணை என்ன தெரியுமா… இந்த செக்ஸே சில நேரங்களில் உயிரையும் குடிக்குமாம்.
எப்படின்னு பாக்கலாமா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உறவுகொள்ளும் போது அதுவே ஆபத்தாகி திடீர் மரணங்கள் ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரித்து, ரத்த அழுத்தம் கூடுவதோடு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் ஏற்பட வாய்ப்பிருக்காம்.
தாம்பத்ய உறவுக்கு முன்னதாக தம்பதியர் மது அருந்துவதும், புகைப்பதும் கூட உயிருக்கு ஆபத்துதானாம்.
ஒரே நாளில் அதிக முறை உச்சத்தை எட்டுவதும் ஆபத்துதானாம். ஐந்து முறை, பத்துமுறை உச்சத்தை எட்டியதாக கற்பனைக் கதைகளைப் படித்துவிட்டு அதற்கு முனைவது தவறு என்கிறார்கள்.
மது அல்லது போதைப் பொருள் தரும் வேகத்தில் உறவின் போது வன்முறையான செயல்களில் ஈடுபடுவதும் திடீர் மரணம் சம்பவிக்க காரணமாகிறது.
அதிக மன அழுத்தம், இதயம் தொடர்பான நோய்களை உடையவர்கள் அதிக செக்ஸை தவிர்க்க வேண்டும்.
அதிக தூரம் பயணம் செய்துவிட்டு அதே வேகத்தோடு செக்ஸில் ஈடுபடுவதும் ஆபத்தானதாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment