Showing posts with label இயக்குநர். Show all posts
Showing posts with label இயக்குநர். Show all posts

Thursday, July 2, 2009

சிறந்த இயக்குநர் விருது பெற்றார் இயக்குநர் சசி


இயக்குநர் சசி இயக்கத்தில் ‘பூ’ படத்தை மொசர்பேர் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார்.

கிராமத்துக் கதை கொண்ட இந்தப் படம் வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும் கூட ஓரளவு வெற்றியைப் பெற்றது. சமீபத்தில் அகமதாபாத்தில் நடைபெற்ற இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவெல்லில் இந்தப் படத்தின் இயக்குநர் சசிக்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்துள்ளது.

இது குறித்து இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான மொசர்பேரின் சி.இ.ஓ. தனஞ்சயன் அவர்கள், ‘இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவெல்லில் ‘பூ’ படத்தின் இயக்குநர் சசிக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அதே நேரத்தில் மொசர்பேர் நிறுவனம் அந்தப் படத்தை தயாரித்ததற்காக மிகுந்த பெருமைப்படுகிறது....’ என்று தெரிவித்துள்ளார்.

Wednesday, June 24, 2009

அச்சமுண்டு இயக்குநரை பாராட்டிய டேனி பாய்ல்!

தான் திரைப்படம் எடுக்க வந்ததன் பலனை ஒரே படம் மூலம் கிட்டத்தட்ட அடைந்தேவிட்டார் அச்சமுண்டு அச்சமுண்டு இயக்குநர் அருண் வைத்தியநாதன்.

ஆம்... தனது ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்காக சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 7 ஆஸ்கார் விருதுகள் வாங்கிய பிரபல ஆங்கிலப்பட இயக்குநர் டேனி பாய்ல், ஷாங்காய் திரைப்பட விழாவில் பங்கேற்ற அருண் வைத்தியநாதனை வாழ்த்திப் பாராட்டியுள்ளார்.

சினேகா, பிரசன்னா நடித்துள்ள அச்சமுண்டு அச்சமுண்டு படம், முழுக்க முழுக்க ரெட் ஒன் கேமிராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. ஆனால் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

சமீபத்தில் ஷாங்காய் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது. விழாவுக்கு வந்திருந்தவர்கள் படத்தைப் பெரிதும் பாராட்டி வாழ்த்தினர். அப்படி வாழ்த்தியவர்களில் முக்கியமானவர் ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தின் இயக்குநர்.

படம் நன்றாக உள்ளதாகவும், படக் குழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் அவர் இயக்குநர் அருண் வைத்தியநாதனிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை வரும் ஜூலை 10-ம் தேதிக்குள் வெளியிடவிருப்பதாக படத்தின் பிஆர்ஓ நிகில் முருகன் தெரிவித்துள்ளார்.

தணிக்கைக் குழுவினர் இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

Monday, June 22, 2009

ஆக. 12-ல் உன்னைப்போல் ஒருவன்!


கமல்ஹாசனின் அடுத்த படமான உன்னைப் போல் ஒருவன் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகிறது.

இந்த தேதியில்தான் 50 ஆண்டுகளுக்கு முன் கமல் தனது திரையுலக வாழ்க்கையைத் துவங்கினார். அந்தப் பொன்விழாவை நினைவு கூறும் வகையில் உன்னைப்போல் ஒருவன் படத்தை இதே தேதியில் வெளியிடவிருக்கிறார்கள்.

எ வெட்னஸ்டே எனும் சூப்பர் ஹிட் இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்படும் உன்னைப்போல் ஒருவன் படத்தில் கமல்ஹாசனுடன் மோகன்லால் நடித்துள்ளார். இதன் தெலுங்குப் பதிப்பில் மோகன்லாலுக்குப் பதில் வெங்கடேஷ் நடித்துள்ளார்.

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஒரு இசையமைப்பாளராக தனது கேரியரை இந்தப் படத்திலிருந்து துவங்குகிறார்.

இன்னும் இருவாரங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும், படப்பிடிப்பு முடியும்போதே அதன் எடிட்டிங் வேலையும் முடிந்து விடுவதால், போஸ்ட் புரொடக்ஷனுக்கு அதிக காலம் தேவைப்படாது என்றும் இயக்குநர் சக்ரி டோலெட்டி தெரிவித்துள்ளார்.

பெரிய விழா எடுத்து இந்தப் படத்தை வெளியிடும் திட்டத்தில் உள்ளனராம் கமல் ரசிகர்கள்.