Wednesday, June 24, 2009

அச்சமுண்டு இயக்குநரை பாராட்டிய டேனி பாய்ல்!

தான் திரைப்படம் எடுக்க வந்ததன் பலனை ஒரே படம் மூலம் கிட்டத்தட்ட அடைந்தேவிட்டார் அச்சமுண்டு அச்சமுண்டு இயக்குநர் அருண் வைத்தியநாதன்.

ஆம்... தனது ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்காக சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 7 ஆஸ்கார் விருதுகள் வாங்கிய பிரபல ஆங்கிலப்பட இயக்குநர் டேனி பாய்ல், ஷாங்காய் திரைப்பட விழாவில் பங்கேற்ற அருண் வைத்தியநாதனை வாழ்த்திப் பாராட்டியுள்ளார்.

சினேகா, பிரசன்னா நடித்துள்ள அச்சமுண்டு அச்சமுண்டு படம், முழுக்க முழுக்க ரெட் ஒன் கேமிராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. ஆனால் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

சமீபத்தில் ஷாங்காய் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது. விழாவுக்கு வந்திருந்தவர்கள் படத்தைப் பெரிதும் பாராட்டி வாழ்த்தினர். அப்படி வாழ்த்தியவர்களில் முக்கியமானவர் ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தின் இயக்குநர்.

படம் நன்றாக உள்ளதாகவும், படக் குழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் அவர் இயக்குநர் அருண் வைத்தியநாதனிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை வரும் ஜூலை 10-ம் தேதிக்குள் வெளியிடவிருப்பதாக படத்தின் பிஆர்ஓ நிகில் முருகன் தெரிவித்துள்ளார்.

தணிக்கைக் குழுவினர் இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment