விக்ரம், ஸ்ரேயா நடித்த கந்தசாமி படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. சுசி கணேசன் இப்படத்தை இயக்கியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள கந்தசாமி ரிலீசுக்கு தயாராகிறது. இதில் அனைத்து பாடல்களையும் விக்ரமே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாடல் சி.டி.விற்பனையிலும் சாதனை படைத்துள்ளது.
பொருளாதார குற்றச் செயல்கள் புரிந்து நாட்டை சுரண்டுவோரை புரட்டி எடுக்கும் கேரக்டரில் விக்ரம், வருகிறார். வெளி நாடுகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. கந்தசாமி ரிலீஸ் பற்றி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியதாவது:-
கந்தசாமி படத்தின் ரீரிக் கார்டிங், டப்பிங் கிராபிக்ஸ், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் பணிகள் மும்முரமாக நடக்கின்றன. ஜூலையில் படத்தை ரிலீஸ் செய்து விடுவோம். படம் சிறப்பாக வந்துள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியிடு கிறோம். உலகம் முழுவதும் 900 தியேட்டர்களில் திரையிடப்படும். சென்னையில் மட்டும் 21 தியேட்டர்களில் வருகிறது.
No comments:
Post a Comment