யு.எஸ். விசா மோசடிப் புகழ் புளோரா உச்சகட்டம் படத்தை பெரிதும் நம்பியுள்ளார். அவரது கம்பேக் படம் இது.
அமெரிக்காவுக்கு போலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயன்று கைதாகி சிறை சென்றவர் புளோரா. பின்னர் ஒரு வழியாக அந்த வழக்கிலிருந்து விடுபட்டு இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் நாயகியாக நடிக்கும் படம் உச்சகட்டம். ஜெமினிதான் நாயகன். கர்நாடகத்து ஸ்வாதியும் படத்தில் இருக்கிறார்.
இது ஆவியை மையமாகக் கொண்ட திரில்லர் படம். ஸ்வாதிதான் ஆவியாக நடிக்கிறார். ஆவியால் பாதிக்கப்பட்டு மன நலம் பாதிக்கப்டும் பெண்ணாக வருகிறாராம் புளோரா.
இந்தப் படம் தனது மறுவாழ்வுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் உள்ளார் புளோரா.
இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை 6 லட்சம் ரூபாய் செலவழித்து படு வித்தியாசமாக படமாக்கியிருக்கிறார்களாம்.
No comments:
Post a Comment