'சார்...உங்களுக்கு கல்யாணமாகி நாலு வயசுல ஒரு பையன் இருக்கான்....' நாற்பது வயசு ஹீரோக்கள்கூட இந்த மாதிரி ஒன்லைன் கேட்டா ஓடிப்போயிருவாங்க. தமிழ் சினிமாவின் ஹீரோயிசம் இப்படித்தான் இருக்கிறது இன்றைய நிலையில்.
தனுஷ் மாதிரியான சில பேர் இதற்கு விதிவிலக்கு. தனுஷை பார்த்தாலே பள்ளிக்கூட சிறுவன்மாதிரிதான் இருக்கிறார். அவர் அப்பா கேரக்டரில் நடித்தால் எப்படியிருக்கும்? அதான் நடிக்கப்போறாரே....
அண்ணன் செல்வராகவனும் தம்பி தனுஷூம் கைக்கோர்த்து ரொம்ப நாளாச்சு. இடையில் 'இது மாலை நேரத்து மயக்கம்' படத்தில் இணைவதாக இருந்தது. அந்தப்படம் கைவிடப்பட்ட நிலையில் புதிய படமொன்றில் இணையவுள்ளனர். இப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். படத்தில் கதாநாயகி உண்டு. எனினும் தனுஷூக்கு ஜோடி இல்லையாம். (தெளிவா குழப்புறாய்ங்க!)
தற்போது மித்ரன் ஜவகர், சுராஜ், வெற்றிமாறன் ஆகியோரது இயக்கத்தில் தனுஷ் ரொம்ப பிஸி. ஆயிரத்தில் ஒருவன் ரிலீசுக்கு பிறகு ஒரு தெலுங்கு படம், ஒரு இந்தி படம்னு செல்வராகவனும் அடுத்தடுத்த ஆஃபர்களை கையில் வைத்துக்கொண்டிருக்கின்றனர். இருவரும் ஃப்ரீ ஆனதும் புதிய படம் ஆரம்பமாகிறதாம்.
No comments:
Post a Comment