பள்ளிக்கூடம் இருக்கும் ஏரியாக்களில் இருந்து ஆயிரம் அடிக்கு அப்பால்தான் தம்மடிக்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை போட்டு விட்டாராம் அதிபர் ஓபாமா! (ஆமாவா?, சொல்லுங்களேன், அமெரிக்க நண்பர்களே..) அதுமட்டுமா? ஹோட்டல்களில் தம்மடிக்கவும் தடை. அதற்காக தனி பகுதி இருக்கிறதாம். அங்கே போய் வேண்டுமானால் குப் குப்-லாம்!
சென்னைக்கு திரும்பிவிட்டது எந்திரன் டீம். ஆனால் அமெரிக்காவில் இருந்தபோது ரொம்பவே சிரமப்பட்டது நம்ம சூப்பர் ஸ்டார்தானாம். அடிக்கடி சிகரெட் வேணும் அவருக்கு. படப்பிடிப்பில் பரவாயில்லை. தங்கியிருந்த ஹோட்டல் அறையில்தான் சிக்கலே. உள்ளே எங்கேயும் சிகரெட் பிடிக்க அனுமதியில்லை. புகை ஏரியாவில் ஒரே கூட்டம். வேறு வழியில்லாமல் சாலைக்கு வந்து சுதந்திரமாக தம்மடித்தாராம்!
ஆணானப்பட்ட ரஜினியே அளந்து அளந்து புகைக்கும்போது, அசல்டாக புகை பிடிக்கிறார் ஆன்ட்ரியா. படப்பிடிப்பில் ஷாட்டுக்கு நடுவே, இவரது குப் குப் ஸ்டைலை பார்த்து ஆடிப்போயிருக்கிறது ஸ்டுடியோ வட்டாரம். நல்லவேளையாக ஏ.வி.எம் போன்ற ஸ்டுடியோ வளாகத்தில் ஓபாமாக்கள் இல்லை என்பதே ஆறுதல் (ஆன்ட்ரியாவுக்கு)
No comments:
Post a Comment