அரசியலுக்கு வருவதற்கு முன்னாடியே பூசலாம்னு சேறு குழைச்சி வச்சிட்டு தயாராக இருக்கு ஒரு கோஷ்டி! தெரிஞ்சோ தெரியாமலோ அவங்களுக்கு தோளை காட்டியிருக்காரு விஜய். எப்படி?
இலவச கம்ப்யூட்டர் மையம், மருத்துவ உதவின்னு சில முக்கியமான விஷயங்களை செஞ்சவர், அப்படியே அன்னதானத்துக்கும் கிளம்பினார்.
இந்த அன்னதானத்தை எங்காவது வெளியில் வைத்து நடத்தியிருக்கலாம். ஆனால் ரசிகர்கள் தேர்ந்தெடுத்தது வடபழனி கோவில் வளாகத்தை.
விஜய் கோவிலுக்குள் வருவாரா? மாட்டாரா? அவர்தான் கிறிஸ்துவர் ஆச்சே? என்ற பலவித யூகங்களை எழுப்பி காத்திருந்தார்கள் ரசிகர்களும், பொதுமக்களும். ஆனால் வந்தவர், அப்படியே கோவில் சன்னிதானம் வரைக்கும் சென்றுவிட்டார்.
முருகன் முன்பு பயபக்தியோடு வணங்கியவருக்கு, பரிவட்டம் கட்டி, இறைவனுக்கு போடப்பட்ட மாலையை விஜய்க்கும் போட்டு, சிறப்பு பெருமைகளை செய்தனுப்பியது கோவில் நிர்வாகமும். இவையெல்லாம் நிமிடத்தில் நடந்து முடிந்திருந்தாலும், இப்போது கிளம்பியிருக்கிற அக்கப்போர் என்ன தெரியுமா? இத்தனை வருடங்களாக பிறந்த நாள் கொண்டாடுகிறார் விஜய். ஆனால், வேளாங்கண்ணி போன்ற கிறிஸ்துவ ஆலயங்களுக்கு போவாரே தவிர, ஒரு முறை கூட, இந்து கோவில்களுக்கு சென்றது கிடையாது. இப்போது மட்டும் வருவது எதற்காக? அரசிய
No comments:
Post a Comment