Wednesday, June 24, 2009

இணைய வடிவமைப்புக்கு இலவச ஐகான்கள்

இணைய வடிவமைப்பாளர்களுக்கு (Web Designers) உயர்தர ஐகான்களை தேடி கண்டுபிடிப்பது சற்றே கடினமான வேலைதான். பெரும்பாலும் கூகிள் இமேஜசில் தேடி கொண்டு இருப்பார்கள். திருப்திகரமான ஐகான் கிடைப்பது குதிரை கொம்பான விசயமாக இருக்கும்.

அவர்களுக்கான வேலையை எளிதாக்குகிறது iconfinder.net . இந்த தளத்திற்கு சென்று உங்களுக்குதேவையான உயர்தர ஐகான்களை இலவசமாக பெற்று கொள்ளலாம். உங்கள் தேடலுக்கு ஏற்ற ஐகான்களை இந்த தளம் தரும்.



வெவ்வேறு அளவுகளிலும் இந்த ஐகானை பெற்று கொள்ளலாம். இந்த ஐகான்கள் ICO மற்றும் PNG பார்மேட்டுகளில் கிடைக்கின்றன.

No comments:

Post a Comment