சென்சார் எது எதுக்கு தடை சொல்லும் என்று கூற முடியாது. வேலுபிரபாகரனின் டாப்லெஸ் படத்துக்கு சான்றிதழ் தந்திருக்கும் சென்சார், வயாகரா என்ற வார்த்தைக்கு தடை சொல்லியிருக்கும் அதிசயம் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது.
டூயட் என்ற பெயரில் படுக்கையறை மூவ்மெண்டைதான் அனேக படங்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றை மவுனமாக அனுமதித்துக் கொண்டிருக்கும் சென்சார் வைகை படத்தின் விஷயத்தில் மட்டும் கறாராக நடந்து கொணடிருக்கிறது.
எண்பதுகளில் மதுரை அருகே நடந்த காதல் கதையை பின்னணியாகக் கொண்டு தயாராகியிருக்கிறது வைகை. அந்த காதல் ஜோடியாக பாலா, விசாக நடித்துள்ளனர். விசேஷம் என்னவென்றால், அந்த நிஜ ஜோடி இன்னும் உயிருடன் இருக்கிறது. படத்தில் அவர்களையும் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர பாண்டியன்.
பிபிஜி என்டர்பிரைசஸ் சார்பில் பிபிஜி குமார், பிபிஜிடி சங்கர் வைகையை தயாரித்துள்ளனர். படத்தைப் பார்த்த சென்சார், படத்தில் வரும் வயாகரா என்ற வார்த்தையை ஆபாசம் என்று நீக்கியது. மேலும், சண்டாளன் என்ற வார்த்தை சாதியை குறிப்பதாகக் கூறி அதையும் படத்திலிருந்து நீக்கியது.
சென்சார் செயல்பாடுகளில் ஒரே ஆறுதல், இந்த எடிட்டிங்குக்குப் பிறகு ஏ சான்றிதழ் தராமல், அனைவரும் பார்க்கும் யு சான்றிதழ் வழங்கியுள்ளது. விரைவில் படம் திரைக்கு வருகிறது.
No comments:
Post a Comment