இயக்குனர் செல்வராகவனையும், நடிகை ஆண்ட்ரியாவையும் இணைத்து கிசுகிசுக்கள் வெளியாயின.
ஆண்ட்ரியா ஏற்கனவே பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்தவர். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ரூ. 32 கோடி செலவில் தயாராகி வரும் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் நடிக்கிறார்.
படப்பிடிப்பு கேரள காடுகளில் நடந்தது. அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஓட்டல்களில் இருவரையும் ஒன்றாக காண முடிகிறது என்றும் செய்தி பரப்பினர். செல்வராகவன் மனைவி சோனியா அகர்வாலுக்கு இவ்விஷயம் தெரிந்து தகராறு நடப்பதாகவும் கூறப்பட்டது.
இதை ஆண்ட்ரியா மறுத்தார். நாங்கள் இருவரும் காதலிப்பதாக தவறான கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன. செல்வராகவனுடன் நான் இருப்பது போல் ஏதாவது போட்டோ இருக்கிறதா? நான் அவரை சந்தித்து பேசினேன் என்று நிரூபிக்க முடியுமா? செல்வராகவனுடன் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. யாரையேனும் நான் காதலித்தால் அதை பகிரங்கமாக சொல்வேன் என்றெல்லாம் ஆவேசமாக கூறினார்.
இந்த காதல் கிசுகிசு பற்றி செல்வராகவன் கூறியதாவது:-
எனக்கும் ஆண்ட்ரியாவுக்கும் காதல் என செய்திகள் வருகின்றன. கள்ளம் கபடம் இல்லாமல் இருந்தால் இது போன்ற செய்திகள் வரத்தான் செய்யும். சோனியா அகர்வால் சினிமாவில் இருந்தவர். உண்மை, பொய்யை கண்டு பிடிக்கும் திறமை அவருக்கு இருக்கிறது. மற்றவர்களுக்காக என் சொந்த வாழ்க்கை இல்லை.
சோனியா என்னை நன்றாக புரிந்து வைத்துள்ளார். சாதாரணமாக என்னுடன் எவரும் வாழ்ந்து விட முடியாது. அதற்கு துணிச்சல் வேண்டும். அது சோனியா அகர்வாலிடம் இருக்கிறது. எங்கள் குடும்ப வாழ்க்கை நிலைக்கும் என்றார்.
No comments:
Post a Comment