Showing posts with label பயர்பாக்ஸ். Show all posts
Showing posts with label பயர்பாக்ஸ். Show all posts

Wednesday, June 24, 2009

'அப்புறமா படிக்க' பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சி

இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும் போது காணும் பக்கங்களை உடனுக்குடன் அனைத்தையும் படிப்பது இயலாத காரியம். சில முக்கிய பக்கங்களை பின்பு படிக்கலாம் என்று குறித்து வைக்கலாம். இது போன்ற தருணங்களில் பயர்பாக்சில் புக்மார்க்ஸ் உபயோகிப்பதுண்டு.

இதில் என்ன பிரச்சினை என்றால் படித்து முடித்தவற்றை உடனே நீக்காவிடில் நாளடைவில் புக்மார்க்ஸ் நிரம்பி வழிந்து விடும். பின்பு மொத்தமாக நீக்க முயலும் போது தேவையானவை / தேவையற்றவை போன்றவற்றை பிரித்து நீக்குவது கடினமாக இருக்கும்.

இதனை எளிதாக்க பயர்பாக்சில் ஒரு நீட்சி (Extension) உள்ளது. Read It Later என்பதுதான் அது. இந்த நீட்சியை இங்கு சென்று தரவிறக்கி உங்கள் பயர்பாக்சில் நிறுவி கொள்ளுங்கள்.

பயர்பாக்சின் அட்ரஸ் பாரில் புதிய Tick ஐகான் பார்க்க முடியம். வலது ஓரத்தில் மற்றுமொரு புதிய Read It Later ஐகான் இருக்கும். இணைய பக்கங்களை காணும் போது டிக் ஐகானை கிளிக் செய்து அந்த பக்கத்தை பின்பு படிக்க குறித்து வைத்து கொள்ளலாம். குறித்து வைத்த பக்கங்களை படித்து முடித்த பின்பு இதே டிக் ஐகானை கிளிக் செய்து பட்டியலில் இருந்து நீக்கி விடலாம்.


ஒரு இணையபக்கத்தில் உள்ள லிங்க்குகளை வரிசையாக ஒவ்வொன்றாக குறித்து வைத்து கொள்ள Alt + M கீகளை அழுத்தி Save Mode Active செய்து கொள்ளுங்கள். இனி நீங்கள் கிளிக் செய்யும் ஒவ்வொரு பக்கமும் குறித்து வைக்கப்பட்டு விடும்.


வலது ஓரத்தில் உள்ள Read It Later ஐகானை கிளிக் செய்தால் நாம் குறித்து வைத்துள்ள பக்கங்களை பார்க்கலாம். வரிசைப்படுத்தி கொள்ளும் வசதியும் அங்குண்டு.


இன்னொரு முக்கிய வசதியும் இதில் உண்டு. Read Offline. நீங்கள் குறித்து வைத்துள்ள பக்கங்களை பயணிக்கும் போதோ / இணைய இணைப்பு இல்லாத போது படிக்க முடியும். Read Offline கிளிக் செய்து கொள்ளுங்கள். நீங்கள் குறித்து வைத்துள்ள பக்கங்கள் எல்லாம் கணினியில் சேமிக்கப்பட்டு விடும்.


பின்பு இணைய இணைப்பு இல்லாத போது, பயர்பாக்சில் File மெனுவில் Work Offline கிளிக் செய்து கொள்ளவும். பின்பு நீங்கள் குறித்து வைத்துள்ள பக்கங்களை படிக்கவும்.

இந்த வீடியோவில் எளிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Popout

இந்த நீட்சியை உபயோகித்து பாருங்கள். அப்புறமா படிக்க வேண்டியவற்றை குறித்து வைத்து கொண்டு, படித்து விட்டு நீக்கி விடுங்கள்.

பயர்பாக்ஸை அழகுபடுத்த இலவச தீம்கள்

பொதுவாகவே அழகுபடுத்துவது என்பது ஒவ்வொருவருடைய ரசனையை பொறுத்து மாறுபடும். ஒருவருக்கு அழகாக தெரிவது மற்றவருக்கு அழகற்றதாக இருக்கலாம். கணினி துறையை பொறுத்தவரை விண்டோஸ் தீம் (Theme) , இணையதளங்களில் வெவ்வேறு விதமான வடிவமைப்புகள், பிளாக்குகளை பொறுத்தவரை டெம்ப்ளேட்டுகள் என்று டிசைன்நுக்கென்று தனிக்கவனம் செலுத்து கின்றனர். நம்க்கு விருப்பமான டிசைனை தேர்ந்தெடுக்கும் போது அதன் பின்னணியில் வேலை பார்ப்பது மகிழ்வை தரும்.

இணையத்தை பொறுத்தவரை நாம் அதிகம் உபயோகப்படுத்துவது இணைய உலாவிகளைத்தான். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பாக்ஸ் , குரோம் என்று ஒவ்வொன்றும் அதற்குரிய பிரத்தியேக டிசைன்களில் வருகிறது. பயர்பாக்சை பொறுத்தவரை அதற்குரிய வடிவமைப்புகளை (Themes) மாற்றி கொள்ள முடியும்.

புதிய வடிவமைப்புகளை பெற இந்த லின்க்கில் சென்று இலவசமாக பெற்று கொள்ளவும். பின்னூட்டத்தில் நண்பர் ஒருவர் Personas எனும் தளத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளார். அதனையும் உபயோகித்து பாருங்கள்.


இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் புதிய பதிப்பாக வைத்துள்ள IE8 உடைய டிசைன் கவரும் வகையில் அமைந்துள்ளது. அதே வடிவமைப்பை உங்கள் பயபாக்சிற்கு கொடுக்க நீங்கள் விரும்பினால் இந்த லின்க்கில் சென்று Ie8Fox தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.


இவ்வாறு நீங்கள் நிறுவி உள்ள பயர்பாக்ஸ் தீம்களை (Themes) Tools மெனுவில் Add-ons --> Themes சென்று நீக்கி / மாற்றி கொள்ளுங்கள்.


ஒரே நேரத்தில் பல இணைய கணக்குகளை அணுகுவது

பெரும்பாலும் நாம் பல்வேறு காரணங்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட ஈமெயில் முகவரி வைத்து இருப்போம். மெயில் வாசிக்கும் போது ஒவ்வொரு மெயில் முகவிரியில் லாகின் (login) செய்து அடுத்த முகவரிக்கு செல்ல logout செய்து மீண்டும் புதிய முகவரிக்கு செல்ல வேண்டி வரும்.

உதாரணமாக நான் ஜிமெயிலில் firstaccount@gmail.com, secondaccount@gmail.com என்று இரண்டு முகவரிகள் வைத்துள்ளதாக கொள்வோம். நான் இரண்டு முகவரியிலும் உள்ள மைல்களை படிக்க ஒவ்வொன்றாக தனித்தனியாக login & logout செய்யவேண்டும். இரண்டு மெயில் முகவரியிலும் ஒரே நேரத்தில் வேலை செய்ய முடியாது . ஏதாவது ஒன்றில் மட்டுமே செயல்பட முடியும். மற்றொன்றிற்கு செல்ல வேண்டும் எனில், ஏற்க்கனவே திறந்துள்ள மெயிலை logout செய்து விட்டு புதிய முகவரியில் login செய்ய வேண்டும்.

இந்த பின்னடைவை போக்கும் இதனை போக்கும் வகையில் Internet Explorer 8 -ல் ஓர் வசதி உள்ளது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 -ல் புதிய Session திறக்க வேண்டும்.


புதிய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் விண்டோ திறக்கும். இப்போது இரண்டு விண்டோ க்களிலும் தனித்தனியாக வெவ்வேறு ஈமெயில் முகவரிகளின் மூலம் லாகின் செய்து உங்களால் செயல்பட முடியும்.


பயர்பாக்ஸ் இணைய உலாவியில் இந்த வசதியை பெற இந்த பயபாக்ஸ்நீட்சியை (Firefox Extension) உபயோகிக்கவும்.

இது ஈமெயிலுக்கு மட்டுமே ஆனதல்ல. நீங்கள் பல உறுப்பினர் கணக்குகள் வைத்துள்ள எல்லா தளங்களிலும் இது போன்று செயல்பட முடியும்.