| கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியும் இப்போது பாடலாசிரியராகிறார்... |
| அதுவும் ரஜியின் எந்திரன் படத்தின் மூலம். இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் வைரமுத்து எழுதுவதாகத்தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் தன் மகன் மதன் கார்க்கியையும் பாடலாசிரியாக அறிமுகப்படுத்த விரும்பினார் வைரமுத்து. சாதாரண படங்களில் அறிமுகமானல், புகழ் வெளிச்சம்பட நீண்ட காலம் பிடிக்கும் என்பதை உணர்ந்த வைரமுத்து, ரஜினியின் எந்திரன் படம் மூலம் அந்த அறிமுகம் நிகழவேண்டும் என ஆசைப்பட்டார். தனது ஆசையை ரஜினியிடமும், படத்தின் இயக்குநர் ஷங்கரிடமும் அவர் வெளிப்படுத்த, உடனடியாக பச்சை சிக்னல் கிடைத்தது இருவரிடமிருந்தும். இப்போது எந்திரன் படத்துக்காக தனது முதல் பாடலை எழுதியுள்ளார் வைரமுத்து மகன் மதன் கார்க்கி. ரஜினி - ஐஸ்வர்யா டூயட் பாடலை அவர்தான் எழுதியுள்ளாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள். கடந்த ஆண்டு நடந்த மதனின் திருமணத்துக்கு முதல் நபராகப் போய் வாழ்த்தியவர் ரஜினி என்பது நினைவிருக்கும். மதன் கார்க்கி கவிதைகள் எழுதி வருகிறார். வைரமுத்துவின் இன்னொரு மகன் கபிலன் ஒரு படத்துக்கு வசனம் எழுதுவது குறிப்பிடத்தக்கது. |
Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts
Thursday, July 2, 2009
இளையராஜா இசைக்கு வைரமுத்து மகன் எழுதும் பாடல்!
Monday, June 29, 2009
ஆர்யாவின் படித்துறை

ஆர்யாவின் த ஷோ பீப்பிள் தயாரிப்பு நிறுவனம் படம் தயாரிப்பது தெரியும். த ஷோ பீப்பிளின் முதல் தயாரிப்புக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
நடிப்பு, பட விநியோகம் என்று இரு துறைகளில் கால் பதித்த ஆர்யா மூன்றாவதாக தயாரிப்பில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார். தனது தயாரிப்பு நிறுவனம் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
சொன்னது போலவே அவரது த ஷோ பீப்பிள் தயாரிக்கும் முதல் படத்தை சுகா இயக்குகிறார். இவர் பாலாவின் அசிஸ்டெண்ட். சுரேஷ் கண்ணன் என்ற தனது பெயரை சினிமாவுக்காக சுகா என சுருக்கியிருக்கிறார்.
அபிஷேக் என்ற புதுமுகம் ஹீரோவாகவும், நாடோடிகள் அனன்யா ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இசை இளையராஜா. படத்துக்கு படித்துறை என்ற பெயரை தேர்வு செய்துள்ளார் சுகா.
சொந்தப்பட நிறுவனம் தொடங்கி அதில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் ஆர்யாவுக்கு ஆளுயர வெல்கம் போர்ட் வைத்து வாழ்த்தலாம்.
Subscribe to:
Posts (Atom)