Tuesday, June 23, 2009

சலிப்பை ஏற்படுத்தும் "நைட்டி" கலாச்சாரம் !

யார் கண்டுபிடிச்சு, எப்படி வந்ததோ தெரியல இந்த ஆடை நைட்டி. "நைட்டி" என்ற பெயரே, இரவிலே அணியும் ஆடை என்று பொருள் தந்தாலும், இன்றைய பெண்கள், இரவு பகல் என பாராமல் எப்போதுமே இதே ட்ரெஸ்சை அணிந்து கடுப்பு ஏத்துறது எல்லா வீட்லயும் இருக்குற ஒரு மேட்டர்.


அப்படி என்ன தான் பெண்களுக்கு இந்த நைட்டி புடிச்சு இருக்குன்னு, பெண்கள் கிட்ட கேட்டோம்னா, இதோ இந்த மாதிரி பதில் தான் வரும்.

1. ரொம்ப comfortable ஆன டிரஸ்.
2. விரசம் இல்லாத உடை, உடலை முழுவதும் கவர் செய்யுற மாதிரியான உடை (நம்ம ஊர்ல இருக்குற நைட்டிகள்).



இந்த ரெண்டு விளக்கங்களை தான் கொடுப்பாங்க.

சரி..அது இருக்கட்டும், நைட்டி மேல இவனுக்கு ஏண்டா இவ்வளவு கடுப்புன்னு நினைக்கலாம்.இதோ வரேன்...

1. என்ன மாதிரி டிசைன் நைட்டியா இருந்தாலும், எவ்வளவு விலை உயர்ந்த நைட்டியா இருந்தாலும், கண்ணுக்கு ஒரே மாதிரி தான் தெரியும்.

கேஸ் சிலிண்டர்க்கு பூப்போட்ட துணி சுத்தி வைச்சு, கொஞ்சம் நகர்ந்து நின்னு வேடிக்கை பாருங்க...நிச்சயமா பொண்ணு ஒண்ணு நைட்டில இருக்க மாதிரியே இருக்கும். ஏன்னா அந்த ஆடையினுடைய அமைப்பு அப்படி! தொள தொள ந்னு ஒரு கை, அங்க அங்க பூ பூ வா துணி, இப்படி கிட்ட தட்ட ஒரு ஜோக்கர் டிரஸ் மாதிரி தான் இருக்கு. இதையே மாசக் கணக்குல போட்டுக்கிட்டு இருந்தா மனுஷனுக்கு வெறுப்பு வருமா வராதாங்க?
(ஜின் ஜினுக்கா சின்னக் கிளி, சிரிக்கும் பச்சைக் கிளி, ஓடி வந்தா மேடையிலே ஆட்டம் ஆட.....)


2. பொதுவா பார்த்தோம்னா, ஒவ்வொரு பெண்களுக்கு ஒவ்வொரு உடை பொருத்தமாக அமையும். ஒரு சில பெண்களுக்கு சுரிதார் போட்டா அழகா இருக்கும், இன்னும் ஒரு சிலருக்கு மாடர்னா, ஜீன்ஸ் - டீ ஷர்ட் போட்டா அழகா இருக்கும். எந்த பர்ஸ்னாலிட்டி உள்ள பெண்ணா இருந்தாலும், சேலையில ரொம்ப அழகா தெரிவாங்க. ஆனா பாருங்க, எவ்வளவு அழகா இருக்குற பொண்ணும், இந்த நைட்டிய போட்டா, கொடுமையா இருக்க மாதிரி தான் தெரியும்.


3. நைட்டியை உபயோகப் படுத்துறத தப்புன்னு சொல்ல வரலீங்க. இரவுல உபயோகப்படுத்தலாம், இல்ல பகல் நேரங்களில் கூட எப்பவாச்சும் உபயோகப்படுத்திக்கலாம். அதுக்காக் காலையில இருந்து இரவு வரைக்கும் நைட்டியே போட்டுட்டு இருந்தா சலிப்பு வருவது இயல்பு தானங்க ?

பல கடுப்புகள்ல வேலையில இருந்து வீட்டுக்கு வருகிற கணவன் கண்களில் ஓரளவுக்கு சுமாரா இருக்கனும்னு, இப்ப இருக்கிற படித்த நகரத்து பெண்கள் பலருக்கு தெரிவதில்லை. இவங்க தானே வர்றாங்க.இதுக்கு நைட்டியே போதும். இப்படி தான் பலரோட எண்ணம். இந்த விஷயத்துல கிராமத்து பெண்கள் சூப்பர், தங்களுக்கு உள்ள சாதாரண வாய்ல் புடவைய கட்டிக்கிட்டு, முகம் கழுவி, தலையில மல்லி பூ வச்சிட்டு, சிரிச்ச முகத்தோட, இந்தாங்க காபி ந்னு கணவர் கிட்ட கொடுக்குறது....அடேங்கப்பா......அதெல்லாம் இந்த நைட்டி தேவதைகள் கிட்ட கிடைக்குமா?

(ராஜ்கிரண் ஸ்டையில்ல பெண் மனசு ஆழமுன்னு...
"கல்லானாலும் கணவன், சிறு புல்லானாலும் புருஷன்....கல் இல்லையே இந்த மகன் கல் இல்லையே.....")

4. கடைத்தெருவிற்கு போனால், மணிகணக்குல, கடை கடையா ஏறி சுரிதார், புடவைன்னு எடுத்து கொடுக்குறோம். அதுக்காச்சும், கொஞ்சம் மனசாட்சியோட,இதையெல்லாம் உபயோகப்படுத்தக் கூடாதா ? வீட்ல எவ்வளவோ சுரிதார் இருந்தும், எவ்வளவோ புடவைகள் இருந்தும், பெண்களுக்கு வீட்டில் நைட்டி தான் எல்லாமே !

இதுல ஏன்னு கேட்டா, அவங்க சொல்ற reason வீட்ல தானே இருக்கேன், எங்கயாச்சும் வெளில போகும் போது பாத்துக்கலாம். மனைவியின் அழகை கணவன் ரசிப்பதற்கு, எதாச்சும் விசேஷம் வருமா, சேலை கட்டுவாங்களா ந்னு காத்து இருக்க வேண்டிய அவல நிலையில கணவர்கள் இருக்காங்க !

(லிவிங்க்ஸ்டன் ஸ்டையில்ல..
"ஜனாதிபதி முருகேசன் வாழ்க...வருங்கால ஜனாதிபதி முருகேசன் வாழ்க..." என்னம்மா பீல் பண்ணி கூவுறான் பாருடா..)

5. இதே மாதிரியான நிலைமை தொடர்ந்தால், "கடைசியா மனைவியை சேலையில் பார்த்தது மணவறையில் தான்னு" சொல்ற அளவுக்கு போயிடும் போல இருக்கு நிலைமை !

கனவிலேயும் மனைவியே.. வருவது கஷ்டமான விஷயம் தான். ஆனா, அந்த கனவிலும், மனைவி நைட்டி போட்டுட்டு வர்றது..அப்பப்பா...என்ன கொடுமை சார் இது.

என்ன தான் நாகரிகம், அது இதுன்னு பேசினாலும், நம்ம ஆளுங்க எந்த ஊரில, எந்த நாட்டுல இருந்தாலும், பொண்ணு பாக்கணும், கல்யாணம்னு தோனுச்சுன்னா உடனே புறப்புட்டு நம்ம ஊர்ல வந்து தான் தேடுவாங்க. அந்த ஊர்களில்,நாடுகளில் இல்லாத பெண்களா... அதை எல்லாம் மீறி இங்க வந்து பொண்ணு எடுக்குறாங்கன்னா...அதுக்கு முக்கிய காரணம், நம் நாட்டினுடைய கலாச்சாரமும் பழக்க வழக்கமும் தான்.
தயவு செய்து இதுக்கெல்லாம் பழமைவாதம்,பெண்ணடிமை,ஆணாதிக்கம், பிற்போக்குத்தனம்னு சொல்லி வாழ்க்கையில இருக்க சின்ன சின்ன சந்தோஷத்த கூட அனுபவிக்க முடியாம பண்ணிடாதீங்கோ !

(ஏங்க... பேச்சு பேச்சோட இருக்கணும், பூமில இருக்குறத எல்லாம் கெளறப்டாது ! )

ஆபீசுக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு விடுற மாதிரி, நைட்டிக்கும் ஒரு ரெண்டு நாள் லீவு விட்டா நல்லா இருக்கும்னு நினைக்குது கணவர்கள் சங்கம்.
ஆதரிக்குமா மனைவியர் சங்கம் ?
இந்த மாதிரி கொட்டி தீர்த்து பேசி இருப்பது, நைட்டி உடை மேல இருக்க சலிப்பும் வெறுப்பும் தானே தவிர, பெண்களை புண்படுத்த அல்ல ! அதனால கோச்சிக்காதீங்கோ !

No comments:

Post a Comment