Monday, September 16, 2013

டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை படமாக்கி காசு பார்க்கும் இயக்குநர்!



உலகை உலுக்கிற மாதிரி ஏதாவது சம்பவம் நடந்துவிட்டால் அதை வைத்து காசு பண்ணுகிற வித்தை தெரிந்தவர்கள் சினிமாக்காரர்கள்தான். டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பஸ்ஸில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் உலுக்கி விட்டது அந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து தமிழில் “பிரீடம்” இந்தியில் “ஆஜ் கி பிரீடம்” என்ற பெயரில் சத்தமின்றி ஒரு படத்தை எடுத்து அந்தப் படத்தை இப்போது ரிலீஸ் பண்ணப் போகிறார்கள்.

டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது பாதிக்கப் பட்ட பெண்ணின் பெயரையே கதாநாயகியின் கதாபாத்திரப் பெயராகவே வைத்திருக்கிறார்களாம்.

ஜோதி வேடத்தில் தமிழ் பெண் ரே (தமிழ்ப் பெண்ணுக்கு பெயர் ரே வாம்!) நடித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் டான் கெளதம்.

No comments:

Post a Comment