Monday, September 16, 2013
நடிகர்களின் சம்பளத்தைக் கேட்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது - பாலுமகேந்திரா!
நடிகர் ராஜேஷின் மகன் தீபக் ராஜேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் படம் பயணங்கள் தொடர்கின்றன. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர் அஞ்சனா மேனன். படத்தை இயக்குகிறார் தேஷ்வின் ப்ரேம். படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை தீபக்குக்கு வந்த உடனேயே அதை ராஜேஷிடம் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட ராஜேஷ், ‘கொஞ்ச நாள் பொறு நானே படத்தைத் தயாரிக்கிறேன்…’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அதற்குள் ராஜேஷின் மகனது நடிப்பு ஆசையைத் தெரிந்து கொண்ட தயாரிப்பாளரும் இயக்குநரும் தீபக்கிடம் பயணங்கள் தொடர்கின்றன படத்தின் கதையைச் சொல்லியிருக்கிறார்கள். கதை பிடித்துப் போக உடனே படப்பிடிப்பை துவக்கிவிட்டார்கள்.
இந்தப் படத்தின் படத்துவக்க அறிமுக விழா சென்னையில் உள்ள க்ரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் கேயார், ராஜ்கண்ணு, பாலுமகேந்திரா பயணங்கள் தொடர்கின்றன படத்தின் இயக்குநர் தயாரிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய பாலுமகேந்திரா, ‘இன்று தமிழ் சினிமாவின் ஹீரோக்களின் சம்பளத்தைக் கேட்கும் போது மிகப்பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. தீபக் ராஜேஷிடம் நான் ஒ வேண்டுகோள் வைப்பேன். நீங்கள் வளர்ந்து நிறைய படம் பண்ணினாலும் என்றைக்குமே சரி ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் குறைந்த சம்பளம் கிடைக்கிறதே என்பதற்காக நல்ல கதையில் நடிக்காமல் இருந்துவிடாதீர்கள்… இது என் கட்டளை அல்ல… வேண்டுகோள்…” என்று பேசினார். ஏராளமான திரையுலக பிரபலங்கள் வந்திருந்து பயணங்கள் தொடர்கின்றன குழுவினரை வாழ்த்தினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment