இன்று தமிழ் சினிமாவில் காமெடியாக படம் எடுப்பதிலேயே பல இயக்குநர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம் சிரிக்க வைக்கும் படங்களே வெற்றி பெறுகின்றன. அதே நேரத்தில் சீரியசாக ஒரு கருத்தை சொல்லும் படங்கள் தோல்வியையே தழுவுகின்றன. இது பற்றி கொதித்துப் போய் மனம் திறக்கிறார் பிரகாஷ்ராஜ்.
“தமிழிலும் மலையாளத்திலும் புதுப்புது இயக்குநர்கள் நிறைய பேர் வருவது ஆரோக்கியமான விஷயம்தான். அவங்க எல்லோருக்குமே ஆதரவு கொடுத்து வரவேற்க வேண்டியது நம்ம கடமையும் கூட. மலையாளத்தில் வித்தியாசமான கதைக்களங்களில் நிறைய படங்கள் வருகின்றன. தமிழ்ல டைம் பாஸ் காமெடி படங்கள்தான் அதிகமாக வருகிறது. அர்த்தமே இல்லாம சிரிக்க வைக்கிற படங்கள் வெற்றி பெற்றாலும் மனசில நிற்காது…” என்கிறார் பிரகாஷ்ராஜ் கொஞ்சம் காட்டமாக.
No comments:
Post a Comment