Friday, September 20, 2013

அடேங்கப்பா… இந்த விஷயத்தில் தமிழகம்தான் நம்பர் ஒன் இடத்தில்!



தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் உடல்தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 2011 அக்டோபர் முதல் 2012ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி வரை தமிழகத்தில் 101 பேர் உடல் உறுப்புகளைத் தானம் செய்திருந்தனர். தமிழகத்தில் உறுப்பு தானத் திட்டம் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் உடல் உறுப்புகள் தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியான விஷயம்தான். இந்த ஆண்டில் இதுவரை 100 பேர் உடல் தானம் செய்திருப்பது மிகப்பெரிய சந்தோஷமான செய்தியேயாகும்.
இதுகுறித்து இத்திட்ட ஒருங்கிணைப்பாளர் அமலோற்பவநாதன், “இதுவரை 300 பேருக்கும் மேல் உடல் உறுப்பு தானத்தால் புத்துயிர் பெற்றுள்ளனர். இவர்களுக்கு இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், இதய வால்வுகள் பொருத்தப்பட்டு உயிர் பிழைத்துள்ளனர். உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம்தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் தமிழகத்தைப் போல உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை இல்லை. ஏன்… இதில் பாதி கூட இல்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் அதாவது செப்டம்பர் 30ம் தேதி ஐந்தாவது ஆண்டு முடிகிறது, அதற்குள் 110 பேர் உடல் உறுப்பு தானம் செய்து விடுவார்கள் என்று நம்புகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment