தமிழ் சினிமாவில் நுழைந்ததுமே பெரிய படங்களை தன் கைவசப்படுத்திய வேந்தர் மூவிஸ் அந்த படங்களை வெளியிட்ட கையோடு சுட்டகதை, நளனும் நந்தினியும், ஈகோ உள்பட சில பட்ஜெட் படங்களையும் வாங்கினார்கள். இவர்கள் பெரிய படங்களை ரிலீஸ் செய்வதில் காட்டிய ஆர்வத்தை சின்ன படங்களை ரிலீஸ் செய்வதில் காட்டாததால் சின்ன படங்களை ரிலீஸ் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இவர்களிடம் சுட்டகதை, நளனும் நந்தினியும் ஆகிய இருபடங்களையும் ரிலீஸ் செய்ய கொடுத்த தயாரிப்பாளர் ரவீந்தர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து கடைசியில் அவர்களிடம் ‘இப்படியே ரிலீஸ் பண்ணாம இருக்கீங்களே… எப்போதான் ரிலீஸ் பண்ணுவீங்க…?’ என்று கேட்க ‘உங்களுக்கு அவசரம்னா நீங்களே ரிலீஸ் பண்ணிக்குங்க…’ என்று சொல்லியிருககிறார்கள்.
வேறு வழியில்லாமல் படத்தை திரும்ப வாங்கியிருக்கிறார் ரவீந்தர். இப்போது இவர் தனது சொந்த முயற்சியில் படத்தை வெளியிட இருக்கிறாராம். வேந்தர் மூவிஸ் கைகளிலேயே இந்த படம் சில மாதங்கள் இருந்துவிட்டது. ஒருவேளை அவர்களிடம் கொடுக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் படத்தை ரிலீஸ் செய்திருக்க முடியும்… என்று நினைத்து பீல் பண்ணுகிறாராம் ரவீந்தர்.
No comments:
Post a Comment