மருத்துவ உதவிக்காக யாருக்காச்சும் ரத்தம் வேணும்னா உடனே நண்பர்கள் உறவினர்கள் யாராவது பேஸ்புக், ட்விட்டர் போனற் வலைதளங்களில் செய்தியைப் பரப்பியோ தங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக ரத்தம் கிடைக்க உதவி செய்வார்கள். ஆனால் ஒரு மருத்துவமனையோ கன்னிப் பெண்களின் ரத்தம்தான் வேணும் என்று விளம்பரம் கொடுத்து பரபரப்பைக் கிளப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது.
சீனாவில் உள்ள, பீகிங் பல்கலைக்கழக புற்றுநோய் மருத்துவமனை மிகவும் புகழ் பெற்றது. இந்த மருத்துவமனைதான் தான் இப்படி ஒரு விநோத விளம்பரம் கொடுத்து பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. எச்.பி.வி. என்ற வைரஸ் பற்றிய ஆராய்ச்சிக்காக இவ்வாறு கன்னிப்பெண்களின் ரத்தம் கேட்டு இண்டர்நெட்டில் விளம்ப்ரம் செய்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.
‘கன்னிப் பெண்களின் ரத்தம்தான் தேவையா? கன்னிப் பையன்கள் ரத்தம் தேவை இல்லையா? என்ன கொடுமைசார் இது?‘ என்கிற விதமாக இந்த விளம்பரத்தை கொஞ்சம் கிண்டலடித்து வருகிறார்கள் அந்த விளம்பரத்தைப் பார்த்தவர்கள். இப்படி கன்னிப் பெண்களின் ரத்தத்தை கேட்டதன்மூலம், மருத்துவமனை நிர்வாகம் பெண்களை இழிவுபடுத்தி விட்டதாகவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், ‘கன்னிப் பெண்களின் ரத்தத்தில் எச்.ஐ.வி. தாக்குவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு, அதனால்தான் அப்படி ஒரு விளம்பரத்தைக் கொடுத்தோம். கன்னிப் பெண்களின் ரத்தத்தை நாங்க ஏதோ புதுசா கேட்கிற மாதிரி எல்லாரும் நினைக்கிறாங்க… ஆனால் அவர்களின் ரத்தம் ஆராய்ச்சிக்காக கேட்பது சாதாரண முறைதான்…’ என்று மக்களின் கண்டனத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளது பீகிங் மருத்துவமனை நிர்வாகம்.
No comments:
Post a Comment