Friday, September 20, 2013

நரம்புத் தளர்ச்சியைக் குணமாக்கும் பப்பாளிப் பழம்!



வீடு, தோட்டம் என பல்வேறு இடங்களில் சர்வசாதாரணமாக நாம் பார்க்கக் கூடிய மரங்களில் ஒன்று பப்பாளி மரம். மருத்துவ குணங்கள் நிறைந்த பப்பாளியில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை உள்ளன. பப்பாளிப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும். நார்சத்து மிக்கது. செரிமானத்துக்கு நல்லது. உடலுக்கு புத்துணர்வை தரும்.
தோலில் ஏற்படும் குறைபாடுகளை களையவல்லது. இதனால் உடல் பொலிவு பெறும். கண் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதயம் தொடர்பான பிரச்னைகள், கேன்சர் வராமல் தடுக்கிறது. இதுபோன்று பல்வேறு நன்மைகளை தரும் பப்பாளிப் பழம், மற்ற பழங்களை விட விலையும் குறைவு. எளிதாகவும் கிடைக்க கூடியது. பப்பாளிப் பழத்தை காயாகவோ அதிமாக பழுத்த பின் னரோ சாப்பிடுவதை விட சரியான பதத்தில் உள்ள பழத்தை சாப்பிடுவதே சிறந்தது பப்பாளிப்பழத்தை குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிக் காயை கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குண்டான உடல் படிப்படியாக மெலியும்.
தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும்.
பப்பாளிப் பழத்தை தேனில் தேய்த்து உண்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும்.
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி ஊறிய பின் சுடுநீரால் கழுவி வந்தால் முகச்சுருக்கம் மாறி முகம் அழகு பெறும்.
பப்பாளிப் பாலை பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வந்தால் புண்கள் ஆறும்.
பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால் நாக்கு பூச்சிகள் அழிந்து விடும். பப்பாளி காயின் பாலை வாய்ப்புண் புண்கள் மேல் பூசினால் புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை குழந்தைகளுகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வந்தால் புண்கள் ஆறும்.
இதன் இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வந்தால் கட்டி உடையும்.
பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் வலி விஷம் இறங்கும்.

No comments:

Post a Comment