ஒரு ஹீரோவும், ஹீரோயினும் காதலிச்சா அந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து சொல்லுவார்கள். ஆனால் சிம்பு விஷயத்தில் அது அப்படியே தலைகீழாகி விட்டது.
போயும் போயும் இந்த ஆளையா காதலிக்கிறீங்க..? உங்க அழகுக்கு காதலிக்க வேற நல்ல ஹீரோவே கெடைக்கலியா..? என்று சிம்பு- ஹன்ஷிகா காதல் பகிரங்கப்பட்டவுடன் ஹன்சிகாவை வசைமாறிப் பொழிந்த ரசிகர்கள் தான் அதிகம்.
ப்ளீஸ் உங்களுக்கு சிம்பு வேணாம், அவரை மேரேஜ் பண்ணிக்காதீங்க.. என்று ரூம் போட்டு அழாத குறையாக ஹன்ஷிகாவிடம் கெஞ்சினார்கள் அவரது ரசிகர்கள்.
ஆனால் ஹன்ஷிகாவோ என்ன பண்றது எல்லாம் என் தலையெழுத்து என்று தனக்கும், தனது ரசிகர்களுக்கும் சமாதானம் செய்து கொண்டே சிம்புவுடன் காதலைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
இதனால் ஹன்ஷிகா சிம்புவை காதலிக்க ஆரம்பித்த போது கமிட்டான படங்கள் முடிந்தவுடன் அவருக்கும் சிம்புவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இப்போது அவர்கள் திருணம் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.
சரி இதப்பத்தி ஹன்ஷிகா அம்மா என்ன சொல்றார்…
“எம்பொண்ணு இப்போ 10 படங்களுக்கும் மேல நடிச்சிட்டிருக்கா. அதுல ‘மான் கராத்தே’ ஷூட்டிங் போய்க்கிட்டிருக்கு. அடுத்த மாசத்திலேர்ந்து சுந்தர் சி. படத்துக்கு டேட்ஸ் கொடுத்திருக்கா. அது போக கமிட் பண்ணின மத்த படங்களையும் நடிச்சு முடிச்ச பின்னாடி தான் அவளோட மேரேஜைப் பத்தி யோசிக்க முடியும்.
அதனால இன்னும் மூணு நாலு வருஷத்துக்கு அவளோட மேரேஜைப் பத்தி யோசிக்கவே முடியாது” என்கிறார்.
சிம்புவை காதலிக்கும் போது ஹன்ஷிகா கையில் நான்கைந்து படங்கள் தான் இருந்தது. அந்தப் படங்களில் நடித்து முடித்த பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது ஹன்ஷிகா கையில் புதிதாக அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார்.
மேரேஜை தள்ளிப்போட்டுட்டு புதுசா படங்களை கமிட் பண்ணி நடிச்சா என்ன அர்த்தம்?
“சிம்புவோட இந்தக் காதலும் புட்டுக்கும் போல…” அம்புட்டுத்தான்.
No comments:
Post a Comment