சமூகத்தை அது சீரழிக்கிறது, இது
சீரழிக்கிறது என்றெல்லாம் சொம்பைத் தூக்கிட்டு கிளம்புற கலாச்சார காவலர்களை
நினைச்சால் கொஞ்சம் காமெடியாக இருக்கிறது. இவர்களுக்கு தெரிந்தது
அவ்வளவுதான் போலிருக்கிறது. ஆனால் ஓசையின்றி வீட்டுக்குள்ளேயே மிகப்பெரும்
கலாச்சார சீரழிவுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் டிவிக்களை எப்படி இவர்கள்
கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. வீட்டுக்கு வந்தா
டிவி பார்ப்பது ஒன்றுதான் அவர்களுடைய பொழுது போக்காக இருக்கும் போது
இதையெல்லாம் சிந்திக்க அவர்களால் முடியவில்லையோ என்னவோ!
கடந்த
சனிக்கிழமை எதேச்சையாக டிவி சேனல்களை மாற்றிக் கொண்டே இருந்த போது ஒரு
சேனலில் அம்பிகாவும் ராதாவும் உட்கார்ந்திருந்தார்கள். ஏதோ தங்கள் சினிமா
அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொள்வார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டே
அந்த சேனலைப் பார்த்தால், அவர்கள் அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்காக
வந்திருக்கவில்லை. அவர்கள் இருவரும்தான் ஜட்ஜாம். அந்த நிகழ்ச்சியின் பெயர்
ஜோடி சீசன்ஸ் 6 என்பதாம்.
வந்ததே வந்திட்டோம், என்னதான்
நடக்குதுன்னுப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று பார்த்தால் ரெக்கார்டு
டேன்ஸ் என்று சொல்வார்களே அதை அங்கே நிகழ்த்திக் கொண்டு இருந்தார்கள்.
நகரங்களில் மட்டுமே ஒருகட்டத்தில் இருந்து கொண்டிருந்த கவர்ச்சி காட்டும்
ரெக்கார்டு டேன்ஸ் அந்த சேனலில் நடந்து கொண்டிருந்தது. ஐஸ்வர்யா என்னும்
பெண் அரைகுறை ஆடையில் ஆடிக் கொண்டிருந்தார். அவரது உடையில் அப்படி ஒரு
கவர்ச்சி. ஆடி முடிந்ததும், அம்பிகா அவரை கட்டிப் பிடித்து முத்தம்
கொடுத்தார். அங்கே என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. அந்த நிகழ்ச்சியை
தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி வந்தார்.
‘ம்…
அடுத்த வாரம் நீங்க ஜோடியை மாற்றி ஆடணும்… யார் கூட ஆட ஆசைப்படுறீங்க’
என்று தொகுப்பாளினி கேட்கிறார். அதற்கு ஆடிய பெண்ணோ, ‘எனக்கு அவர் கூட
ஆடணும்…’ என்று வேறு ஒருவர் பெயரைச் சொல்கிறார். தொகுப்பாளினி தன் கையில்
ஒரு குடுவையை வைத்துக் கொண்டு அதில் குலுக்கல் முறையில் ஒரு பெயரை
தேர்ந்தெடுக்கிறார். அதில் வேறு ஒரு பெயர் வந்திருக்க, ‘அவர் பெயர் சீட்டுல
வரலை… எனவே நீங்க அவர் கூட ஆடப்படாது… இவர் கூடத்தான் ஆடணும்…’ என்று
சீட்டில் பெயர் வந்தவரை சுட்டிக் காட்ட, சரி என தலையை ஆட்டிக் கொண்டு
போகிறார் நடனம் ஆடிய பெண்.
அடக் கடவுளே இந்த டிவிப் பெட்டியில இப்படி ஒரு பெரிய கூத்தே நடக்கிறது நமக்கு இத்தனை நாட்களும் தெரியமப் போச்சே!
No comments:
Post a Comment