Friday, September 20, 2013

நல்லாயிருந்தா பெப்ஸி… நாசமா போனா இளநீர்…




பெரிய ஹோட்டல்களில் மட்டுமல்ல, பெட்டிக் கடைசியில் போய் நின்று கொண்டு கூட நம்மாளுங்க சிலர் ‘பெப்ஸி’யை வாங்கி ஸ்டைலாக குடிப்பார்கள். நீங்கள் அடிக்கடி பெப்ஸி குடிப்பீங்களா…? அப்போ நான் சொல்லப் போற விஷயம் கொஞ்சம் உங்களை யோசிக்க வைக்கும் என்றே நினைக்கிறேன்.

சிலர் ஒரு நாளைக்கு பத்து பதினைந்து சிகரெட் குடிப்பாங்க… என் ஐ.டி. நண்பன் ஒருத்தன், அவனுக்கு சிகரெட், குடி என எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது. இன்றைக்கு இதெல்லாம் கெட்டப் பழக்கம்னு சொன்னா நீங்க என்ன ஒரு மாதிரியாத்தான் பார்ப்பீங்கங்கிறது எனக்குத் தெரியும் சரி விஷயத்துக்கு வரேன். நண்பன் தினமும் குறைஞ்சது 1 பெப்ஸியாவது குடிச்சிருவான். சாப்பிடுறப்போ நாம எல்லாம் தண்ணி குடிப்போம். ஆனா, அவரு தண்ணிக்கு பதிலா பெப்புசிதான் குடிப்பாரு. கொஞ்ச நாளா இப்படியேதான் ஓடிக்கிட்டிருந்தது. சமீபத்துல ஒருநாள் பயபுள்ளைக்கு தீராத வயிற்று வலி. டாக்டரைப் போய் பார்த்திருக்கான். ‘தினமும் பெப்புசி குடிக்காதீங்க.. இனிமேல் தினமும் குறைஞ்சது ஒரு இளநீராவது குடிச்சிரணும்… சரியா…’ என செல்லமாக கோபித்துக் கொண்டு அட்வைஸ் செய்திருக்கார் அந்த பெண் டாக்டர். சரி என தலையாட்டிவிட்டு வந்திருக்கிறார் நண்பன். இப்போதெல்லாம் பெப்ஸி குடிக்கிறானோ இல்லையோ தினமும் ஒரு இளநீர் குடித்துக் கொண்டிருக்கிறான். ம்… உடம்பு நல்லாயிருந்தா பெப்ஸி… நாசமா போனா இளநீர்… என்பது நண்பனுக்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறது. ஆனா உடம்பு நல்லாயிருக்கும் போதே இளநீர் குடிக்கிறதுக்கு என்ன…? உடம்புக்கு ஏதேனும் ஆனால்தான் இளநீருக்கு மாற வேண்டுமா என்ன…? என்பதுதான் நம்ம கேள்வி.

No comments:

Post a Comment